கொழும்பில் காணிகளின் விற்பனை விலை அதிகரிப்பு.
கொழும்பில் காணிகளின் விற்பனை விலை 18 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலை குறியீட்டிற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்தாண்டு இதே காலப்பகுதியை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் காணி விலையில் 18 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மத்திய வங்கியால் தொகுக்கப்பட்ட கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலை குறியீட்டு எண் 125.9ஆக பதிவாகியுள்ளது.
குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை ஆகியவை காணி குறியீட்டில் அதிகரித்துள்ளமையே காணி விலை அதிகரிப்புக்கு காணரமாகும்.