நொச்சியாகம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி!
அநுராதபுரம் – புத்தளம் வீதியில் நொச்சியாகம மக்கள் சந்தைக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளொன்றும், சிறியரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த விவசாய பரிசோதகர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வில்பத்து – ஹோரிவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய விவசாய பரிசோதகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் அலுவலகத்திலிருந்து கடமை முடிந்து மோட்டார் சைக்கிலில் நொச்சியாகம நகருக்கு சென்று கொண்டிருந்த வேளையில் சிறிய ரக லொறியுடன் மோதி பலத்த காயத்திற்குள்ளாகிய நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாதம்பை – இட்டிகுளம் பகுதியை சேர்ந்த சிறிய ரக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.