இந்திய மீனவர்கள் 11பேர் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது!

இந்திய மீனவர்கள் 11பேர் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது!

நெடுத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களது மூன்று படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட பதினொரு மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்திய பின்னர் யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஒப்படைத்தனர்.

நீரியல் வளத்துறையினர் குறித்த மீனவர்களுக்கு எதிராக எல்லை தாண்டிய குற்ற வழக்குப் பதிவுசெய்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Copyright © 1858 Mukadu · All rights reserved · designed by Speed IT net