க.பொ. த சாதாரண தர பரீட்சை : தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்கள்.

க.பொ. த சாதாரண தர பரீட்சை : தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்கள்.

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பு விசாக பெண்கள் கல்லூரியின் மாணவி நிலக்னா வர்ஸ வித்தான முதலாவது இடத்தை பெற்றுள்ளார்.

விசாக பெண்கள் கல்லூரியின் மாணவி சஜித்தி ஹங்சதியும்,

கம்பஹா ரத்னாவலி பெண்கள் மகா வித்தியாலயத்தின் மாணவி சஞ்சானி திலேக்கா குமாரியும்,

மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவி மிந்தி ரெபேக்கா ஆகியோர் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர்.

ஐந்தாவது இடத்தை கேகாலை புனித ஜொசப் கல்லூரியின் மாணவி கயத்ரி ஹர்சிலா லிஹனி கடுவாரச்சி பெற்றுள்ளார்.

கொழும்பு தேவிபாலிகா மகா வித்தியாலயத்தின் மாணவி சந்தலிமுத்துனிமா ரத்நாயகவும்,

கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவன் சஹான் யசங்க சமரகோனும்,

கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவன் கவிரு மெத்னுக்கனும்,

காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் சஸ்மித்த ஆகாஸ்வர லியனகேயும்,

ஹொரணை தக்சிலா கல்லூரியின் மாணவி ஹமாசி ஹெரந்திகாவும் ஆறாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.

வெளியாகி பெறுபேறுகளுக்கு அமைய முதல் பத்து இடங்களில் எந்தவொரு தமிழ் மாணவர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 0467 Mukadu · All rights reserved · designed by Speed IT net