சிங்களவர்கள், தமிழர்கள் தொடர்பில் விசாரணைகள்.
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு ஐ.நாவில் ஜனாதிபதியால் எதிர்ப்பு வெளியிடப்பட்ட போதும் காணாமல்போனோர் தொடர்பாக கிடைத்த 15,000 முறைப்பாட்டு கோவைகளில் 14,000 கோவைகளை ஜனாதிபதி, காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது குறித்து கருத்துரைத்த அவர், காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உண்மையில் எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை.
அவரை சிலர் பிழையாக வழிநடத்துகின்றனர். எனவே அதனை நிராகரித்து ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் காணாமல் போனோர் அலுவலகம், சிங்களவர் மற்றும் தமிழர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.