பொறுப்பற்ற மின்வெட்டு – நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!

பொறுப்பற்ற மின்வெட்டு – நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!

அறிவித்தல் வழங்காமல் மின்வெட்டை நடைமுறைப்படுத்தியமை மற்றும் நாட்டில் நிலவும் மின்சார வழங்கல் குறைபாடுகள் தொடா்பில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சாரசபைக்கு எதிராக வழக்கு தொடா்ந்துள்ள நிலையில்,

பதிலளிக்க மின்சாரசபை இம்மாதம் 9ம் திகதி நீதிமன்றில் ஆஜராகவேண்டும். என கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் கடந்த 29ஆம் திகதி தொடரப்பட்ட வழக்கு இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீண்ட சமர்ப்பணத்தை மன்றில் முன்வைத்தனர்.

“பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்ட விதிகளின் படி நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார வழங்கல் நெருக்கடி தொடர்பில் உரிய அறிக்கைகளை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தவறிவிட்டது.

அத்துடன், எந்தவித முன் அறிவித்தலுமின்றி மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர்கள் மன்றுரைத்தனர்.

வழக்குத் தொடுனரின் வாதத்தை ஆராய்ந்த நீதிவான், இலங்கை மின்சார சபையின் நிறைவேற்றுத் தர அதிகாரிகளை வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முன்னிலையாக அழைப்பாணை அனுப்புமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

Copyright © 5244 Mukadu · All rights reserved · designed by Speed IT net