அவுஸ்ரேலியாவில் தீ விபத்து – இலங்கை தமிழர் படுகாயம்!

அவுஸ்ரேலியாவில் தீ விபத்து – இலங்கை தமிழர் படுகாயம்!

அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள விக்னேஷ், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட விக்னேஷின் மருத்துவ செலவிற்காக 13,000 டொலருக்கும் அதிக பணம் புலம்பெயர் தொழிலாளர்களால் திரட்டப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Copyright © 9066 Mukadu · All rights reserved · designed by Speed IT net