புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளைப் பார்வையிட அனுமதி

புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளைப் பார்வையிட அனுமதி

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை (சனிக்கிழமை) முதல் 05 நாட்கள் சிறைக்கைதிகளை பார்வையிட அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சிறையில் உள்ளவர்களை உறவினர்கள் சந்திப்பதற்கு இரண்டு நாட்களே வழங்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்துக் குறைபாடு உட்பட சில பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்வதன் காரணமாக இந்தக் காலத்தை 05 நாட்களாக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

Copyright © 1207 Mukadu · All rights reserved · designed by Speed IT net