இந்தப் புதுவகை எண்ணெய்க் குளியல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்தப் புதுவகை எண்ணெய்க் குளியல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

எண்ணெய்க் குளியல் என கேட்டவுடன் யாரும் மசகு எண்ணெயைப் பற்றிக் கற்பனையும் செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.

எனினும், ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையிலான அஸர்பைஜானிலுள்ள (Azerbaijan) நஃப்த்தலான் (Naftalan) என்ற நகரில் பல நோய்களுக்கு மசகு எண்ணெய்க் குளியல் வழி தீர்வு காண்கிறார்கள் பலர்.

உடல் வெப்பத்திற்குச் சற்றே அதிகமான வெப்பநிலையில் மசகு எண்ணெய் சூடாக்கப்படும்.

அதில் 10 நிமிடங்கள் மூழ்கி வெளியில் வருவதற்காகச் சுற்றுப்பயணிகள் பலரும் மசகு எண்ணெய்க் குளியல் விடுதிகளுக்குச் செல்கிறார்கள்.

அஸர்பைஜானின் வர்த்தகத்தில் பெரும்பகுதி எண்ணெய் ஏற்றுமதி. ஆனால் நஃப்த்தலானில் கிடைக்கும் மசகு எண்ணெய், ஏற்றுமதிக்கு ஏதுவானதல்ல.

அதற்குப் பதிலாக தசை, தோல், எலும்புக் குறைபாடுகளுக்குச் சிகிச்சையளிக்க அது பயன்படுகிறது.

இறக்கும் நிலையிலிருந்த ஒட்டகம் தேங்கிக் கிடந்த மசகு எண்ணெய்க்கு அருகில் கைவிட்டுச் செல்லப்பட்டுப் பின்னர் அது குணமடைந்ததாக அந்த நகர மக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது.

ஆனால், மசகு எண்ணெய்க் குளியல் குறித்து மருத்துவர்கள் பலர் எச்சரித்து வருகின்றனர். அதனால் ஆபத்தான பின்விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net