அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன.

அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன.

இலங்கை கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர்க் கப்பல்கள்  (வியாழக்கிழமை) அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன.

அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.என்.எஸ் ‘மில்லிநோகேட்’ மற்றும் ‘யு.எஸ்.எஸ் இஸ்ப்ருவன்ஸ்’ ஆகிய இரண்டு போர்க் கப்பல்களே அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன.

‘யு.எஸ்.என்.எஸ் மில்லிநோகேட்’ போர்க் கப்பலானது 2362 தொன் நிறைகொண்டதுடன் 155.3 மீட்டர் நீளம் கொண்டதாகும். அதேபோல் ‘யு.எஸ்.எஸ் இஸ்ப்ருவன்ஸ்’ கப்பலானது 9580 தொன் நிறை கொண்டதாகும்.

வருடாந்தம் இடம்பெறும் கடற்படைப் பயிற்சிகளில் கலந்துகொள்ள இலங்கைக்கு இவ்வாறு வருகை தந்துள்ள அமெரிக்க போர்க் கப்பல்கள் இரண்டும் இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டன.

இரண்டு நாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு நட்புறவு வலுவடைந்துள்ள நிலையில் இருநாடுகளின் கடற்படை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் நோக்கிலும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இந்த கூட்டுக் கடற்படைப் பயிற்சிகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 3491 Mukadu · All rights reserved · designed by Speed IT net