பயங்கரவாத தாக்குதல் – சுவிஸ் இலிருந்து வந்த தமிழ் குடும்பம் பலி!

பயங்கரவாத தாக்குதல் – சுவிஸ் இலிருந்து வந்த தமிழ் குடும்பம் பலி!

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸ் இல் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பமும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று மீண்டும் சுவிஸ்க்கு திரும்பவிருந்த நிலையில் நேற்றைய தினம் காலையில் இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கொழும்பு விடுதியில் வெடித்த குண்டுக்கு தாயும் தந்தையும் இரையாகியுள்ளனர்.

இவர்களின் 3 பிள்ளைகளில் ஒருவர் காயமடைந்திருப்பதும் வேதனைக்குரியதொன்று.

குறித்த வெடிப்புச் சம்பவத்தில், சுவிஸ் பேர்ண் பகுதியில் வசித்த தம்பதிகளான விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Bern Bumpliz Kiosk நாதன் மற்றும் அவரது மனைவியான கெளரி என அழைக்கப்படும் கேதாரகெளரி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

Copyright © 9579 Mukadu · All rights reserved · designed by Speed IT net