வெலிகமயில் வேலையில்லாத முஸ்லிம் பட்டதாரியும் மனைவியும் கைது!

வெலிகம பகுதியில் வேலையில்லாத முஸ்லிம் பட்டதாரியும் மனைவியும் கைது!

வெலிகம – மதுராகொட பகுதியில் வேலையில்லாத முஸ்லிம் பட்டதாரி இளைஞர் ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 12 மில்லியன் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் கணினி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த இருவரும் சவுதியிருந்து இலங்கைக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் வருகை தந்துள்ளளனர்.

இருப்பினும் அவர்கள் தமது சொத்து விபரம் குறித்து வெளிப்படுத்தத் தவறிய பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2577 Mukadu · All rights reserved · designed by Speed IT net