இலங்கையில் இஸ்லாமிய தொலைக்காட்சி அலைவரிசைக்கு தடை

இலங்கையில் இஸ்லாமிய தொலைக்காட்சி அலைவரிசைக்கு தடை

இஸ்லாமிய மதப் போதகரான சாகிர் நாயக்கின் தொலைக்காட்சி அலைவரிசைக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மத போதகரின் Peace TV யை இலங்கையில் ஒளிபரப்பு செய்வதற்கு கேபிள் தொலைக்காட்சி அலைவரிசையை வழங்கும் இரண்டு நிறுவனங்கள் தடை செய்துள்ளன.

எனினும் இந்த தொலைக்காட்சி அலைவரிசை இலங்கையின் பிரதான கேபிள் தொலைக்காட்சி அலைவரிசை வழங்குனர்களால் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் வௌியிடப்படவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொலைக்காட்சி அலைவரிசை ஏற்கனவே இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 8776 Mukadu · All rights reserved · designed by Speed IT net