அடுத்த சில நாட்களுக்கு காற்றுடன் கூடிய மழை!

அடுத்த சில நாட்களுக்கு காற்றுடன் கூடிய மழை!

மேற்கு – மத்தியவங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்காக விருத்தியடைந்த மிகவும் கடுமையான சூறாவளியான “FANI” (உச்சரிப்பு “போனி”) 2019 மே 01ஆம் திகதி பிற்பகல் 11.30 மணிக்கு வட அகலாங்கு 15.2N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.1E இற்கும் அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக ஏறத்தாழ 750 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

இத் தொகுதிவடக்கு- வடகிழக்கு திசையில் இலங்கையை விட்டு விலகி இந்தியாவின் ஒடிஷாகரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அடுத்த சில நாட்களுக்கு நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் மேக மூட்டமானவானமும் பலமான காற்றுடன் கூடிய நிலைமையும் மழையுடனான வானிலையும் தொடர்ந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாடு, வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென், மேல், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Copyright © 6194 Mukadu · All rights reserved · designed by Speed IT net