193 துப்பாக்கி ​ரவைகளும், புலிகளின் தயாரிப்பு எறிகணையொன்றும் மீட்பு!

193 துப்பாக்கி ​ரவைகளும், புலிகளின் தயாரிப்பு எறிகணையொன்றும் மீட்பு!

மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 193 துப்பாக்கி ​ரவைகளும், புலிகளின் தயாரிப்பு எறிகணையொன்றும் மீட்கப்பட்டது.

பிட்டகோட்டே- ஏப்பிட்டமுல்ல பகுதியில் இவை கைப்பற்றப்பட்ட புலிகளின் தயாரிப்பான அருள் 89 ரக குறுந்தூர எறிகணையும், ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. வீட்டின் உரிமையாளரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின்போது, குறித்த ​ரவைகள் பழங்காலப் பொருள்களாக வீட்​டின் அலங்காரத்துக்காகப் பயன்படுத்துவதற்காக கொண்டு வந்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

வீட்டின் மேல் மாடிக்குச் செல்வதற்காக, அமைக்கப்பட்டிருந்த படியின் கீழ் உள்ள அல்மாரியொன்றில் சிறு சிறு பைகளில் சுற்றப்பட்டு, புலி இலட்சினையுடனான பெரிய பை ​ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இவை மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net