குழந்தையை அடகு வைக்க முயன்றவர், காவல்துறையிடம் மாட்டிக்கொண்டார்!

குழந்தையை அடகு வைக்க முயன்றவர், காவல்துறையிடம் மாட்டிக்கொண்டார்!

அமெரிக்காவில் ஃபுளோரிடாவில் உள்ள ஓர் அடகுக் கடையில் பொருளுக்குப் பதிலாகப் பிள்ளையை அடகு வைக்க முயன்ற நபர் ஒருவர் கடை உரிமையாளரின் சாதுரியத்தால் காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டார்.

ஏழரை மாதக் குழந்தையை ஒருவகையில் புதிய பொருள் என்று கூறி, பிள்ளைக்கு எவ்வளவு பணம் தர முடியும் எனக் கேட்டிருக்கிறார் பிள்ளையின் தந்தை.

இதுகுறித்து அடகுக் கடை உரிமையாளர் காவல்துறையிடம் உடனடியாகப் புகார் செய்தார்.

அதிகாரிகள் வந்தது வரை விசாரித்தபோது தான் இது வேடிக்கை நிகழ்ச்சிக்காக ஒளிப்பதிவு செய்யும் நோக்கத்திலும் இந்த நிகழ்ச்சியை மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்று பார்ப்பதற்காக இதை செய்ததாக கூறியுள்ளார்.

எனினும் கடை உரிமையாளரோ பிள்ளையின் நலம் கருதிக் காவல்துறையை அழைத்ததாக அவர் கூறினார்.

பின்னர் அவரின் உண்மை நிலைய ஆராய்ந்த காவல்துறையினர் அவர்மீது வழக்குகள் ஏதும் பதியாது விடுவித்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net