சிலாபத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்! ஒருவர் கைது!

சிலாபத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்! ஒருவர் கைது!

சிலாபம் நகரில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை தொடர்ந்து, சிலாபம் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நாளை காலை 6 மணி வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சிலாபம் நகரில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுப்படுத்தும் வகையில், பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

சிலாபம் நகரில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து, நகரிலுள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு, பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தள பதிவு மற்றும் பின்னூட்டம் காரணமாகவே இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net