அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம்!

அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம்!

நாட்டின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு மோதல்கள் ஏற்படாதவாறு செயற்படுமாறும், அப்பாவிகளான முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும்.

இதனால் எமது நாட்டிற்கு வரக் கூடிய அவதூறுகளை நினைவில் கொண்டு பொறுமையுடன் செயற்படுமாறும் நாட்டு மக்களிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகள் மற்றும் இவற்றினால் ஏற்பட கூடிய விளைவுகளை கருத்திற் கொண்டு. அரசியல் வாதிகள் பொதுமக்களை அமைதிப்படுத்தும் வகையில் செயற்படுமாறும் , மத்தலைவர்கள் தற்போது மூண்டிருக்கும் நெருப்பை அணைக்க முன்வருமாறும் கேட்டுக் கொண்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net