வடக்கு ஜேர்மனியிலிருந்து இரு பெண்களின் சடலங்கள்!

வடக்கு ஜேர்மனியிலிருந்து இரு பெண்களின் சடலங்கள்!

வடக்கு ஜேர்மன் நகரிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பவேறியன் விடுதி அறையொன்றிலிருந்து மூவரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளின்போதே குறித்த இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விடுதியில் உயிரிழந்த பெண் தொடர்பான விசாரணைகளுக்காக அவரது வீட்டிற்கு சென்ற வேளையிலேயே இவ்விரு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த இரு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பு தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net