சிரியா வான் தாக்குதல் : 10 பேர் பலி!

சிரியா வான் தாக்குதல் : 10 பேர் பலி!

சிரியாவில் நேற்று படையினரால் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டு அரசுப் படைக்கும் பயங்கரவாதத்திற்கும் ஏற்பட்டு வரும் மோதல்களில் அந்நாட்டில் அதிகளவில் பொதுமக்கள் பலியாகின்றனர்.

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்த அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டு விட்டன.

எனினும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள இத்லிப் மாகாணத்தில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவு பெற்ற ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அத்தோடு அந்த அமைப்பை முற்றாக அகற்ற இராணுவத்தினர் வான் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற இந்நிலையில் பொதுமக்கள் பலர் தாக்குதல்களில் சிக்கிப் பலியாகியுள்ளனர்.

எனினும் கடந்த வாரங்களில் படையினர் நடத்திய வான் தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்படப் பலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 4967 Mukadu · All rights reserved · designed by Speed IT net