வேலையற்றோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி!

வேலையற்றோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி!

கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை கண்டுள்ளதாக, கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 5.7 வீதமாக காணப்பட்டதாகவும், அது மே மாதத்தில் 5.4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பீட்டளவில் கடந்த 1976ஆம் ஆண்டின் பின்னர் வேலையற்றோர் எண்ணிக்கையில், இந்த ஆண்டில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.

கடந்த மே மாதம் கனேடிய தொழிற்ச் சந்தையில் புதிதாக 27700 தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 6218 Mukadu · All rights reserved · designed by Speed IT net