இலங்கையில் ஒரு நாளைக்கு 8 பேர், வருடமொன்றுக்கு 3000 பேர்!

இலங்கையில் ஒரு நாளைக்கு 8 பேர், வருடமொன்றுக்கு 3000 பேர்!

நாட்டில் இடம்பெறும் ஒரு வீதி விபத்திற்காக அரசாங்கத்திற்கு 10 இலட்சம் ரூபா செலவிட நேர்கின்றதாக வாகன மற்றும் போக்குவரத்து பிரிவின் பிராந்திய பாதுகாப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

இலங்கையில் நாளொன்றுக்கு வீதி விபத்தின் காரணமாக 8 பேரளவில் மரணிக்கின்றனர். அத்துடன், 20 பேர் வரை காயமடைகின்றனர். 100 முதல் 105 வரை விபத்துகள் பதிவாகின்றன.

குறித்த வீதி விபத்திற்காக செல்லும் பொலிஸ் அதிகாரிக்கும், நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரிக்கும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் என பணம் செலவாகின்றது.

வீதி விபத்து தொடர்பான ஒரு வழக்கு 5 வருடங்களுக்கு நீடிக்கின்றது. ஒரு நாளைக்கு 8 பேர் எனின், வருடமொன்றுக்கு 3000 பேரளவில் வீதி விபத்துகளினால் மரணிக்கின்றதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 4229 Mukadu · All rights reserved · designed by Speed IT net