சிங்கள மக்களின் ஆதரவின்றி வடக்கு பிரச்சினைக்கு தீர்வு கிட்டாது!

சிங்கள மக்களின் ஆதரவின்றி வடக்கு பிரச்சினைக்கு தீர்வு கிட்டாது!

பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவின்றி வடக்கு பிரச்சினைக்கு தீர்வுகான முடியாது என, சுதந்திரக் கட்சியின் மாற்று அணியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர், எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இடைக்கால அராசாங்கதை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாற்று அணி நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர், இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாம் அரசாங்கத்திலிருந்து வெளியில் வந்த நாள் முதல் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என சகலருடனும் பேசுகிறோம்.

பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவின்றி வடக்கு பிரச்சினைக்கு தீர்வுகான முடியாது. மைத்திரி, மஹிந்த புரிந்துணர்வினூடாகவே சிங்கள மக்களின் ஆதரவை பெறமுடியும்.” என கூறினார்.

Copyright © 9151 Mukadu · All rights reserved · designed by Speed IT net