”‘Little Jaffna’வும் தமிழர் கருத்தியல் அழிப்பும்”பார்தீ

”‘Little Jaffna’வும் தமிழர் கருத்தியல் அழிப்பும்”
29-04-2025
ப.பார்தீ
நன்றி
-முகடு-


படைப்பு என்பது வெறும் கற்பனையால் உருவாக்கப்படுவதல்ல, அனுபவங்களினூடாக இரசனைக்கேற்ற வகையில் உண்மைகளை பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடி.
இந்தக் கண்ணாடி வழியாக ஒரு படைப்பாளி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் காட்டும்போது, அவர்களின் விடுதலையின் அவசியம் தோவையாக படைப்பின் வழி வெளிப்படுகிறது.
அந்த படைப்பாளியே மக்களின் படைப்பாளியாக இன்றுவரை மானுட சமூகம் பார்க்கின்றது.

மக்கள் விடுதலையைப் பேசாத படைப்புகள்,
அடக்குமுறைகளையும் அநியாயங்களையும் இயல்பான ஒன்றாக உருமாற்றி, அதிகார வர்க்கத்திற்கு சேவை செய்கின்றன.
இத்தகைய படைப்புகள் அதிகாரத்தின் ஒத்தோடியாக தங்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றன.

தமிழில் சங்க இலக்கியம் முதல் இன்றைய நவீன இலக்கியங்கள்வரை,
தமிழில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் மக்கள் விடுதலை தேவையை வரலாற்றை பதிவுசெய்வதிலும் நகர்த்துவதிலும் படைப்புகள் அடித்தளமாகவே இருக்கின்றன.

ஒரு மக்கள் கூட்டம்,
மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற, பட்டினியிலிருந்து மீட்சி பெற, பாலியல், சாதி, சமூக, பிரதேசவாத ஒடுக்குமுறையில் வாழும் மக்களின் விடுதலையை நினைவூட்டாத படைப்புகள்,
உண்மைச் சூழலை மறைத்து, தனிமனித பிழைப்பு ஓட்டங்களாக மட்டும் இயங்கும் படைப்புகளாக மக்கள் நாம் கணிக்கவும், அதனை எதிர்த்து குரல் கொடுக்கவும் எந்த நேரத்திலும் தயங்கக்கூடாது.

Le quartier de « Little Jaffna » à Paris est le cœur d’une communauté tamoule vibrante,
où Michael, un jeune policier, est chargé d’infiltrer un groupe criminel connu pour extorsion et blanchiment d’argent au profit des rebelles séparatistes au Sri Lanka.
Mais à mesure qu’il s’enfonce au cœur de l’organisation, sa loyauté sera mise à l’épreuve, dans une poursuite implacable contre l’un des gangs les plus cachés et puissants de Paris.

யாரந்த பிரிவினை வாதிகள்?

இதுதான் பாரிஸ் சினிமா திரையரங்க தளங்களின் “Little Jaffna” விளம்பர உத்தி.
இங்கு ஒரு தமிழனாக இருந்து ஈழத்தமிழ் சமூகம் எப்படியான ஒடுக்குமுறைக்கு ஆளானது,
என்ன வகையான இனவழிப்பின் தொடர்ச்சி எங்கள்மேல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்று நான் கூறி, நீங்கள் ஒரு தமிழனாக விளங்க வேண்டுமென்ற அவசியமிருக்காது.

ஆனாலும் இந்த படைப்பு தொடர்பாகவும், படைப்பின் கதையம்சம் தொடர்பாகவும்,
படைப்பில் பங்குபற்றியோரின் பிழைப்புவாதம் தொடர்பாகவும் நாம் உரையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இயக்குநர் Cine Malaraux (25 cours de la République, 93140 Bondy)
நிகழ்ந்த சிறப்பு காட்சிக்குப் பின், “நான் ஆவணப்படம் எடுக்க வரவில்லை, இது ஆவணப்படமும் இல்லை, இது தன்னுடைய கற்பனைக்கதையென்று” குறிப்பிடுகின்றார்.

அதனைத் தொடர்ந்து,

“தமிழர்களால் இப்படியான படத்திற்கு 1 யூரோக்கூட முதலீடு செய்வார்களா?
பிரஞ்சு முதலீட்டாளர்கள் ஒரு புது இயக்குனருக்கு இவ்வளவு பெரிய முதலீட்டை செய்ததாகவும்,
தான் அதற்கே படம் எடுத்ததாகவும்” குறிப்பிடுகின்றார்.

“Little Jaffna” என்னும் திரைப்படத்தின் பெயரொன்றும் எழுந்தமானமாக சூட்டப்பட்டதல்ல.
அது ஈழத் தமிழ் மக்களின் கருத்தியல் அழிப்பின் முதல் குறியீட்டு புனைவடையாளம்.
தன்னுடைய திரைப்படக் கனவை நிறைவேற்றிக்கொள்ள நிதிக்காக எத்தனித்த திரைப்பட இயக்குனருக்கு பணம் கொடுத்த எஜமானர்களுக்காக ஒரு கதை செய்துள்ளார்.

அவர் தன்னுடைய புனைவு என்கிறார்.
புனைவிற்காக அவர் எதை உள்வாங்கியிருக்கின்றார்?
தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்ட வாழ்வியலை.

ஒரு கடத்தல்காரர் கும்பல்கள்போல் காட்சிப்படுத்தி, கொலை, கொல்லை கனவுகளை சுமக்கும், காட்டுமிராண்டி, நாகரிகமற்ற சமூகமாக காட்டியிருக்கின்றார்.திருகுரள் போன்ற பெரும் பழமையான இலக்கியம்கொண்டது தமிழ் தமிழர்வாழ்வு. என்பது இயக்குணர் படிக்கவில்லை போலும்.
படத்தின் தொடக்கத்திலேயே தன் அடையாளத்தை அழிக்க விரும்பும் ஒரு மனிதனாகவே தன்னை முதன்மைப்படுத்துகின்றார்.

இவர்யார் என்றால்,
ஒரு கரும்புலி போராளியின் மகன்.
4 வயதில் புலம்பெயர்ந்தவன்.
காவல்துறை புலனாய்வு பிரிவில் வேலை செய்து, ஒரு கடத்தல் கும்பலை பிடிக்க அக்குழுவில் சேர்கின்றார்.
அது யார் என்றால் — தமிழ்மக்கள் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் வடிவில்,
பணம் சேகரிக்கும் ஒரு கும்பல் — அதையும் ஒரு விடுதலைப்புலிகள் அமைப்பாகவே காட்டுகின்றார்.

அவர்களை கொலை, கஞ்சா, துஷ்பிரயோகம் போன்றவைகளில் ஈடுபடும் நபர்களாகவே காட்டுகின்றார்.
அவ்வளவு கொடூரம் தமிழ் மக்களின் மீது அவருக்கு.
பிள்ளையையும் கிள்ளி தொட்டலையும் அட்டுவது போல,
அங்காங்கே சில இடங்களில் சில வசனங்கள் —

ஒரு மேற்கத்திய அடிமைப்புத்தியில் எழுந்து, தன்னை ஒரு பிரஞ்சுக்காரனாக நினைத்து,
ஒரு படம் — அதன் பணமாகிய முதலாளிகளுக்காக செய்துள்ளார்.

இயக்குநர் செய்த கதைக்கு,
தான் செய்த நல்ல காரியங்களை முகமூடியாக வைத்துக்கொண்டு, தன்னை ஒரு தமிழ்தேசியாகக் காட்டிக்கொண்டு,
தங்கள் சுய இலாபத்திற்காக பல தமிழ் படைப்புகள், நிகழ்வுகள்மீது தன்னிலை மறந்து, படைப்பறத்தை மதிக்காது,
தொடர்ச்சியாக படைப்புகளை சமூகவெளிக்கு மிகப் மோசமாக சித்தரித்து, படைப்பாளர்கள்மீது ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பி,
அவர்கள் படைப்பூக்கத்தை ஒடிக்கிவைக்கும் திரு குணா ஆறுமுகராசா,
இந்தப் படத்தின் துணை இயக்குனரின் உதவியாளராக பணிபுரிந்திருக்கின்றார் என்பது,
அவரின் பிழைப்புவாதத்தையும் பொய்தேசிய முகத்தையும் ஊருக்குக் காட்டியுள்ளது. இப்படியான சாபக்கேடு எமது இனத்திற்கு புதிதல்ல.
அதேபோல் நாடுகடந்த அரசின் ஊடக அமைச்சராக இருப்பவர்,
கூட்டு பொறுப்பு பற்றி அதிகம் பேசுபவர்.திரு சுதன்ராஜச் செய்தி வாசித்து குரல் கொடுத்திருக்கின்றார்.
இவரோடு பறவாதி பட இயக்குனர் திரு அஜந்தன், சுத, அருள்மொழிதேவன், மற்றும் பல கலைஞர்கள்,மற்றும் லாச்சபேலில் இயங்கும் பல தமிழ் வர்த்தக நிறுவனங்களென்று
எம் கையை வைத்தே எமது மக்கள் வாழ்வும், போராட்டமும், அந்தக் கருத்தியலும் மிக நாசுக்காக அழிக்கும் கருத்துருவாக்கத்தை உருவாக்கின்றார்கள்.

“Little Jaffna” என்பது வெறும் புனைவு திரைப்படமல்ல.
அது ஒரு பார்வையை உருவாக்கும் கருவி.
அந்த பார்வை புலம்பெயர்ந்த தமிழரை குற்றவாளியாக்குகிறது.
அந்த பார்வை புலம்பெயர்ந்த நிலத்தில் வாழும் தமிழரின் குரலை முடக்குகிறது.
அந்த பார்வை தமிழரின் விடுதலைத் தாகத்தை ஒடுக்கும் வழிக்கு முதல்கோடிடுகின்றது,எமது வாழ்வியலை பிழையாக காட்டுகிறது.
அதனால்தான்,
இப்படி ஒரு படைப்பை எதிர்க்கும் உரிமையும், படைப்பில் பங்கு பற்றிய ஈழத் தமிழர்களை விமர்சனத்திற்கு உள்ளிக்கி ஒலிக்கும் குரலாக இந்தக் கட்டுரையில் பதிவு செய்யப்படுகிறது.

நாம் இது போன்ற படைப்புகளை விமர்சிக்க மறந்தால், எதிர்க்க தயங்கினால், நம்மை நாமே மறந்துவிடும் நாள் வெகு தூரமில்லை.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்�மெய்ப்பொருள் காண்ப தறிவு.”

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net