அத்தியாவசிய உணவு பொருட்களை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை!

அத்தியாவசிய உணவு பொருட்களை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை!

அத்தியாவசிய உணவு பொருட்களை சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக சலுகை விலையில் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

ரூபாயின் பெறுமானம் குறைவடைந்துள்ள போதிலும் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய உணவு பொருட்களை சலுகை விலையில் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

Copyright © 1198 Mukadu · All rights reserved · designed by Speed IT net