சட்டத்துறையின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன!

சட்டத்துறையின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன!

ஜனாதிபதியை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இந்த விடயம் தொடர்பில் சட்டத்துறை செயற்படும் முறை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பஸ்ஸரமுல்லே பஞ்சானந்த தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“தேசிய அரசாங்கத்திற்கு 2020 இல் நடைபெறவுள்ள தேர்தல் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு முற்படுவதாக மக்கள் மத்தியில் அனுதாபத்தைத் தோற்றுவித்து, வாக்குகளைப் பெற்றுக்கொள்வதே அவர்களின் நோக்கமாக உள்ளது என்றே எண்ண வேண்டியுள்ளது.

நாட்டில் பெரும்பான்மையானோர் சிங்கள பௌத்தர்கள் ஆவர். தற்போது நடைபெற்றுவரும் அனைத்து செயற்பாடுகளும் அவர்களுக்கு எதிரானதாகவே உள்ளன.

இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்து சிங்கள பௌத்தர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு வீதியில் இறங்கினால் இந்த அரசாங்கம் வீட்டிற்குள் முடுங்க வேண்டிய நிலை ஏற்படும்“ எனவும் தெரிவித்துள்ளார்.

Copyright © 1416 Mukadu · All rights reserved · designed by Speed IT net