ஃபிஜியில் பிரித்தானிய தம்பதி சிலை திறப்பு!

ஃபிஜியில் பிரித்தானிய தம்பதி சிலை திறப்பு!

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவருடைய மனைவி மேகன் மேர்கில் இருவரும், ஃபிஜித்தீவில் சிலையொன்றை திறந்து வைத்துள்ளனர்.

பிரித்தானியாவிற்கும் ஃபிஜிக்கும் இடையிலான உறவை ஞாபகப்படுத்தும் சிலையை பிரித்தானிய அரச தம்பதி இருவரும் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஃபிஜித்தீவின் நடா விமாநிலையத்தில் அந்நாட்டு ஜனாதிபதி ஜியோஜி கொன்ராடேயையும் சந்தித்துள்ளனர்.

இளவரசர் ஹரியும் சசெக்ஸ் சீமாட்டியும் இன்று டொங்காவிற்கு பயணிக்கவுள்ளதோடு அதனைத் தொடர்ந்து, சிட்னி தீவில் இன்றுடன் நிறைவுக்குவரும் இன்விக்டஸ் விளையாட்டுப்போட்டி நிறைவு விழாவில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 3529 Mukadu · All rights reserved · designed by Speed IT net