அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி!

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவாரென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் நீடித்த குழப்பநிலையின் உச்சகட்டமாக, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகியது.

இந்நிலையில், நேற்றிரவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இத்திடீர் மாற்றம் தொடர்பாக ஐ.தே.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சுதந்திரக் கட்சி தரப்பு தமது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ளது.

Copyright © 5173 Mukadu · All rights reserved · designed by Speed IT net