நோர்த் யோர்க் பகுதியில் விபத்து – ஒருவர் பலி!

நோர்த் யோர்க் பகுதியில் விபத்து – ஒருவர் பலி!

நோர்த் யோர்க் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தொழில்சார் விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கீல் தெரு மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள வர்த்தக வெதுப்பகம் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு 9.45 அளவில் இந்த விபத்து இடம்பெறுள்ளது.

அங்கிருந்த நபர் ஒருவர் வாகனம் ஒன்றிற்கும், பிறிதொரு பொருளுக்கு இடையேயும் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் தரித்திருந்தது விசாரணைகளுக்கு ஒத்துளைத்து வருவதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Copyright © 3895 Mukadu · All rights reserved · designed by Speed IT net