சீன பனிமழையில் தன்னை மறந்து விளையாடும் பண்டா!

சீன பனிமழையில் தன்னை மறந்து விளையாடும் பண்டா!

சீனாவில் பனிமழையால் பாண்டா கரடி துள்ளிக் குதித்து தன்னை மறந்து விளையாடும் காட்சிகள் பார்ப்போரை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியுலும் ஆழ்த்தியுள்ளன.

ஹெய்லாங்ஜியாங் (Heilongjiang) மாகாணத்தில் சிஜீயா, யூயு (Sijia ,Youyou) என்று பெயரிடப்பட்ட இரு பண்டா கரடிகள் தனியார் நிறுவனம் சார்பில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

11 வயது ஆண் பண்டா கரடி மற்றும் 12 வயதான பெண் பண்டா கரடிகளுமே காணப்படுகின்றன.

இந்தநிலையில் இங்கு பனிமழை போன்ற அமைப்பு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதால் பண்டாக்கள் இங்கு மகிழ்ச்சியுடன் விளையாடி வருகின்றன. பல்வேறு சாகச விளையாட்டுக்களை நடத்தும் இவை, ஊஞ்சலாடுதல் மற்றும் குட்டிக்கரணம் அடித்தல் என இரு பண்டாக்களும் இங்கு மகிழ்ச்சியுடன் விளையாடி வருகின்றன.

இரு பண்டாக்களும் ஏராளமான சாகச விளையாட்டுக்களை தம்மை மறந்து செய்துவருவது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Copyright © 2023 Mukadu · All rights reserved · designed by Speed IT net