பயண ஆலோசனைகளை மாற்றுவதற்கு எவ்வித நியாயங்களும் இல்லை!

பயண ஆலோசனைகளை மாற்றுவதற்கு எவ்வித நியாயங்களும் இல்லை!

நாட்டில் எவ்வித வன்முறைகளோ தடங்கல்களோ இடம்பெறாதநிலையில் சில நாடுகளால் வெளியிடப்பட்ட பயண ஆலோசனைகளுக்கு எவ்வித நியாயங்களும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயண முகவர்களின் பிரதிநிதிகளை (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நான் கருமங்களைப் பொறுப்பேற்ற நாள் முதல் வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் அனைத்து தூதுவராலயங்களினதும் தலைவர்களுக்கும் தான் சார்ந்திருக்கின்ற நாடுகளில் இலங்கையின் உண்மைகளுக்கேற்ப பயண ஆலோசனைகளை நீக்குவதற்காக அதிகார சபைகளுக்கு தனிப்பட்ட முறையில் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றேன்.

சுற்றுலா மேம்பாட்டினை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயற்பாடுகளின் முக்கியஅம்சங்களில் ஒன்றாக மாற்றுவதற்கு முயற்சித்து வருகின்றேன்“ எனவும் தெரிவித்துள்ளார்.

Copyright © 0321 Mukadu · All rights reserved · designed by Speed IT net