இலங்கையில் என்ன நடக்கின்றது! தொடர்ந்து கண்காணிப்போம் – ஐ.நா

இலங்கையில் என்ன நடக்கின்றது! தொடர்ந்து கண்காணிப்போம் – ஐ.நா

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப் போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், நியூயோர்க்கில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறித்தும், நெருக்கடிகள் மீண்டும் மோசமடைவது குறித்தும் இதுதொடர்பாக ஐ.நாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கமான அரசியலமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று நாங்கள் நிச்சயம் நம்புகிறோம். அதற்குப் பின்னர் என்ன நடக்கிறது என்று நாங்கள் கண்காணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Copyright © 6491 Mukadu · All rights reserved · designed by Speed IT net