சபாநாயகர், கட்சித் தலைவர்களின் கூட்டம் : நிறைவு நடந்தது என்ன ?

சபாநாயகர், கட்சித் தலைவர்களின் கூட்டம் : நிறைவு நடந்தது என்ன ?

பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவு பெற்றிருக்கிறது.

அதன்படி பாராளுமன்றத்திலுள்ள சபாநாயகர் கரு ஜயசூரியவினுடைய உத்தியோகபூர்வ அலுவலகத்தி‍லேயே இந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தின் போது அனைத்து கட்சிகளின் தலைவர்களும் குறிப்பாக தினேஷ் குணர்த்தன, டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியூதீன், ரவூப் ஹக்கீம், சம்பந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தின் போது இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரத்தை தயாரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சபை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முன் ஆயுத்தங்கள் தற்போது நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 2343 Mukadu · All rights reserved · designed by Speed IT net