மீண்டும் எரிபொருள் விலை குறைகிறது!

மீண்டும் எரிபொருள் விலை குறைகிறது!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஒரு லீற்றர் ஒக்டெய்ன் 92 மற்றும் ஒக்டெய்ன் 95 பெற்றோல் மற்றும் ஆட்டோ டீசலின் ஆகியவற்றின் விலை 05 ரூபாவால் குறைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையிலேயே இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 3953 Mukadu · All rights reserved · designed by Speed IT net