பைபிள் புத்தகத்தினால் தாக்கப்பட்டு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனைக்குள்ளான மங்கள!

பைபிள் புத்தகத்தினால் தாக்கப்பட்டு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனைக்குள்ளான மங்கள!

நாடாளுமன்றத்தில் உறுப்பினர் மங்கள சமரவீரவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்த ராஜபக்ச தரப்பினரால் நேற்று நாடாளுமன்றத்தில் சபாநாயகரை தொடர்ந்து அதிக எதிர்ப்பு மங்கள சமரவிக்ரமவை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபாநாயகர் தனது தீர்மானத்தை அறிவித்த பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவான உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இங்கு மங்கள சமரவீரவை ஆபாச வார்த்தைகளில் திட்டி மஹிந்த அணியினர், அவர் மீது புத்தகங்களினால் தாக்குதல் மேற்கொள்வற்கு சில தரப்புகள் முயற்சித்துள்ளனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பெரிய புத்தகம் ஒன்று மங்களவின் தலையில் விழுந்துள்ளது.

உடனடியாக அந்த புத்தகத்தை எடுத்த மங்கள, இந்த புத்தகத்தில் தாக்கும் அளவிற்கு உங்கள் நிலைமை மோசமடைந்துள்ளதாக மங்கள சமரவீர, தினேஷ் குணவர்தனவிடம் குறிப்பிட்டுள்ளார்.

என்னாலும் இந்த புத்தகத்தில் திருப்பி அடிக்க முடியும். எனினும் நான் புத்தகத்தை மதிக்கிறேன். எனினும் இப்படி நடந்து கொள்ள வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அந்த புத்தகத்தை எடுத்து பாதுகாப்பாக அவர் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். எனினும் இறுதியிலேயே அந்த புத்தகம் பைபிள் என தெரியவந்துள்ளது.

Copyright © 3857 Mukadu · All rights reserved · designed by Speed IT net