ஊழல் குற்றச்சாட்டில் நிஸான் நிறுவனத்தின் C.E.O கைது!

ஊழல் குற்றச்சாட்டில் நிஸான் நிறுவனத்தின் C.E.O கைது!

ரெனோ – நிஸான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கார்லோஸ் கோன் (Carlos Ghosn) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தமது சம்பளத்தை குறைவாகக் காட்டுவதற்காக நிஸான் நிறுவனத்தின் கணக்குகளை மாற்றி எழுதினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு ரெனோ நிறுவனத்துக்காக 60 கோடி ரூபாயும், நிஸான் நிறுவனத்துக்காக 75 கோடி ரூபாயும், மொத்தமாக 135 கோடி ரூபாய் சம்பளமாக இவர் பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்தியாவில் தோல்வியடையும் நிலையில் இருந்த நிஸான் நிறுவனத்தை மீண்டும் இலாபத்தில் இயங்கச் செய்தவர் என்ற பெருமை கார்லோஸ் கோனையே சாரும்.

பிரேசில், லெபனான் மற்றும் பிரான்ஸ் குடியுரிமைகளை கார்லோஸ் கோன் பெற்றிருந்தார்.

இந்தநிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து உலகம் முழுவதும் நிஸான் மற்றும் ரெனோ நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 4304 Mukadu · All rights reserved · designed by Speed IT net