19ஆவது திருத்தமே நாட்டின் ஸ்திரமற்ற தன்மைக்கு காரணம்!

19ஆவது திருத்தமே நாட்டின் ஸ்திரமற்ற தன்மைக்கு காரணம்!

நாட்டில் இன்று நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் 19ஆவது திருத்தமே காரணமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நிறைவேற்று அதிகாரம் பலப்படுத்தப்பட்டிருந்தால் எவரும் நீதிமன்றத்தை நாடியிருக்க முடியாது.

19ஆவது திருத்தம் கொண்டு வருவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைத்தபோது எவரும் நீதிமன்றம் செல்லவில்லை.

காரணம் நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை காணப்பட்டது. இதன்போது எமது தேசியம் பாதுகாக்கப்பட்டது.

இதேவேளை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருக்காவிட்டால் சமஷ்டி ஆட்சி குறித்து விவாதம் அரகேறியிருக்கும்.

மேலும் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் பொலிஸ் அதிகாரம் ஆகியவை மாகாணங்களுக்கே உரியது என கூறி மத்திய அரசு இவ்விடயங்களில் தலையிட முடியாதென தீர்மானங்கள் எட்டப்பட்டிருக்கும்.” என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Copyright © 2852 Mukadu · All rights reserved · designed by Speed IT net