மகிந்த இன்னும் சில மாதங்கள் பொறுத்திருக்கலாம்!

மகிந்த இன்னும் சில மாதங்கள் பொறுத்திருக்கலாம்!

இன்னும் சில மாதங்கள் பொறுமையாக செயற்பட்டிருந்தால், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் அடுத்த பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் பிரபலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயற்பட்டனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மை பலம் இன்றி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றது தவறானது என குமார வெல்கம தொடர்ந்தும் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 7425 Mukadu · All rights reserved · designed by Speed IT net