தாமரையுடன் இணைந்த சுதந்திர கட்சி! தலைவரானார் மஹிந்த

தாமரையுடன் இணைந்த சுதந்திர கட்சி! தலைவரானார் மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒன்றாக இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய முன்னணியின் தலைமைத்துவத்தை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்குவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இரவு 7 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

கலந்துரையாடல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ,

நாங்கள் தாமரை மொட்டுடன் இணைந்து புதிய முன்னணி ஒன்றை உருவாக்குவோம். மஹிந்த ராஜபக்சவை அதன் தலைவராக நியமித்து புதிய பயணம் ஒன்றை ஆரம்பிப்போம் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் ஸ்திரமற்ற ஏற்பட்டுள்ள நிலையில், மஹிந்தவுடன் சேர்ந்த செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஈடுபட்டிருந்தது.

பரபரப்பான நிலையில் மஹிந்தவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கட்சி தீர்மானித்துள்ளது. தற்போதைய அரசியல் மாற்றத்தில் புதிய கூட்டணி. ரணில் தரப்புக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Copyright © 0279 Mukadu · All rights reserved · designed by Speed IT net