சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் ஆரம்பம்!
சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
சிவனொளிபாத மலையில் 21ஆம் திகதி அதிகாலை மற்றுமொரு வழிபாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதன்போது, பெரஹரா நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, யாத்திரை காலப்பகுதியில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கும், யாத்திரிகர்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்ளவும் அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.