பொதுத் தேர்தல் நடத்தாமல் நெருக்கடி நிலை தீராது!
தற்போதைய அரசியல் நெருக்கடி, ஒரு பொதுத் தேர்தல் நடத்தாமல் தீர்க்கப்படாது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
வெலிகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்தோடு போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு ஜனாதிபதி தேர்தலால் கூட தீர்வை தர முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், நிறைவேற்று அதிகாரதிற்கும் சட்டநெறிமுறைகளுக்கும் இடையில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வாக ஒரு ஆணைக்குழுவை அமைத்து அதன் மூலம் உண்மையை கொண்டுவர முடியும் என தெரிவித்துள்ளார்.