அரசாங்கத்தில் இருந்து விலக தயார்!

அரசாங்கத்தில் இருந்து விலக தயார்!

அரசாங்கத்தில் இருந்து விலக தாங்கள் தயாராக இருப்பதாக மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றம் சற்று வழங்கிய தீர்ப்பினை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் பின்னரே, தாங்கள் அடுத்த முடிவினை எடுக்க தீர்மானிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2735 Mukadu · All rights reserved · designed by Speed IT net