அடுத்த நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க மஹிந்த அணி தீர்மானம்!

அடுத்த நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க மஹிந்த அணி தீர்மானம்!

இம்மாதம் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமை அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் சட்டவிரோதமானது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முடிவை எடுத்தது.

இந்நிலையில் குறித்த முடிவை தங்கள் எடுத்துள்ளதாக பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அந்தவகையில் நாடாளுமன்ற அமர்வில், அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளையின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தொடர்ந்தும் செயற்பட முடியும் என அவர் கூறினார்.

குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் புதிதாக அங்கத்துவத்தை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Copyright © 4604 Mukadu · All rights reserved · designed by Speed IT net