சுபீட்சமான எதிர்காலத்திற்கான வழி கிடைத்துள்ளது!
இலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க பதவியேற்கும் வகையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சட்டரீதியாக ஜனநாயகத்தை காத்து கடமைகளை நிறைவேற்ற வழிசமைத்துள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர், அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின்போது செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, நாட்டின் முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கு வழிகாட்டியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், சட்டத்தை கடைப்பிடித்து ஜனநாயக வழியில் சென்றமை இலங்கையின் முன்னேற்றத்திற்கு வழிகோலியுள்ளதென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் தெரிவித்தார்.