//anjeng editor2 – Mukadu https://www.mukadu.com Mon, 08 Jul 2019 05:00:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 அரசியலை விட்டு வெளியேற தயாராகும் மங்கள. https://www.mukadu.com/2019/07/08/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1-%e0%ae%a4-2/ Mon, 08 Jul 2019 05:00:49 +0000 http://www.mukadu.com/?p=25653

அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் தான் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மங்கள சமரவீரவின் 30 வருட அரசியல் வாழ்க்கை நிறைவிற்காக விசேட நிகழ்வு ஒன்று இவ்வாறு ஏற்பாடு யெ்யப்பட்டிருந்தது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தனது இறுதித் தேர்தலாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எனக்கு 63 வயதாகின்றது. இன்னும் 5 வருடங்கள் சேவை செய்தாலே போதும். நாம் அனைவரும் ஒய்வு பெற வேண்டிய நேரத்தை அறிந்திருக்க வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

]]>
முயலை முழுமையாக விழுங்கும் கடற்பறவை! https://www.mukadu.com/2019/07/05/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ Fri, 05 Jul 2019 05:26:26 +0000 http://www.mukadu.com/?p=25647

முயலை முழுமையாக விழுங்கும் கடற்பறவை!

இயற்கையில் நடக்கும் எல்லாமே விநோதம்தான். அதன் ஒவ்வொரு கணத்திலும் ஒரு அற்புதம் கட்டவிழ்க்கப்படும். இது வைல்டு லைஃப் போட்டோகிராபர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பரிசு.

பிரிஸ்டலின் இயற்கை மற்றும் கடல்சார்ந்த புகைப்படக் கலைஞரான 28 வயதுடைய ஐரின் மெண்டீஸ் க்ரூஸ் ஸ்கோஹ்லாமின் வேல்ஸ் தீவுப்பகுதியில், ஒரு அரிய நிகழ்வை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ வைல்டு லைஃப் புகைப்பட உலகில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

முயல் தனது இரையைத் தின்று முடிக்கும் வரை, இந்த கடற்பறவை, அசையாமல், முயலின் பின்னால்‘ஓடு மீன் ஓட, உறுமீன் வர, காத்திருக்குமாம் கொக்கு’ என்கிற கணக்காய் வெயிட் பண்ணி பார்க்கிறது.

முயல் நன்றாக சாப்பிட்ட பின், அதன் மீது ஒரு கொத்து கொத்தி, லபக்கென ஒரே வாயில் விழுங்கிக் கொண்டு உண்டது செரிக்கிறதா என்று ஒரு கணம் யோசிக்கிறது.

இந்த வீடியோ, இணையத்தில் பதிவிடப்பட்டதை அடுத்து பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது இந்த கடற்பறவையின் செயல்.

]]>
இரவு வேளை மூதாட்டியை தாக்கிய கமக்கார அமைப்பு https://www.mukadu.com/2019/06/15/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95/ Sat, 15 Jun 2019 04:02:18 +0000 http://www.mukadu.com/?p=25590 கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் கமக்கார அமைப்பைச் சேர்ந்தவர்காளால் இரவு வேளை வீடு புகுந்து வீட்டிலிருந்த மூதாட்டியை தாக்கியதால் பாதிக்கப்பட்ட மூதாட்டி கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் சிறுபோகச்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு உரிய முறையில் கமக்கார அமைப்பினால் நீர்விநியோகம் மேற்கொள்ளப்படாமை குறித்து ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இரவு வேளை வீடொன்றுக்குச்சென்ற கமக்கார அமைப்பைச் சேர்ந்த சிலர் வீட்டிலிருந்து மூதாட்டியை தாக்கியுள்ளனர்.

இவ்வாறு தாக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட மூதாட்டி கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள முரசுமோட்டைக் கமக்கார அமைப்பின் கீழ் 1700 ஏக்கர் சிறுபோகச் செய்கைக்காக வரையறுக்கப்பட்டபோது அமைப்பினுடைய முழுமையான ஒத்துழைப்புடன் நீர் வரிக்குட்படாத வயல் காணிகள் பயிர்ச்செய்கைகக்கு உட்படுத்தப்பட்டு இவற்றுக்கு சட்டவிரோதமாக நீர்விநியோகிக்கப்படுவதால் உரிய முறையில் கூடுதலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயியின் வீட்டிற்குச்சென்ற கமக்கார அமைப்பைச் சேர்ந்தவர்களே தகாத வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொண்டு குறித்த மூதாட்டியைத்தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது கந்தசாமி மல்லிகாதேவி (வயது 65) என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

]]>
சஹ்ரானை சந்தித்துள்ளீர்களா? : ஆம் சந்தித்தேன் – ஹிஸ்புல்லாஹ் https://www.mukadu.com/2019/06/14/%e0%ae%9a%e0%ae%b9%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/ Fri, 14 Jun 2019 06:46:31 +0000 http://www.mukadu.com/?p=25582

சஹ்ரானை சந்தித்துள்ளீர்களா? : ஆம் சந்தித்தேன் – ஹிஸ்புல்லாஹ்

2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் நாம் மொஹமட் சஹ்ரானை சந்தித்ததாக தெரிவித்த முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், அவர் அப்போது தீவிரவாதியல்ல நல்ல மதவாதி எனவும் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தாக்குதல் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கபட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தெரிவுக்குழு முன்னிலையில் தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர்,

கேள்வி:- நீங்கள் இலங்கையர் என நினைக்கிறேன், அவ்வாறு இருக்கையில் “இலங்கையில் நாங்கள் சிறுபான்மை, உலகில் பெரும்பான்மையினர் நாம் தான்’ என நீங்கள் கூறியது சரியா?

பதில்:- இது எனது அரசியல் கருத்து அல்ல, இது ஒரு பள்ளிவாசலில் நான் கூறிய விடயம். எமது மக்கள் அங்கு மிகவும் பயந்த சுபாவத்தில் இருந்தனர்.

அன்றாட வாழ்க்கை அனைத்துமே ஸ்தம்பிக்கப்பட்டு இருந்தன. வழமையாக எமது பெருநாள் பிரார்த்தனைகள் காலி முகத்திடலில் இடம்பெறும்.

இம்முறை அது நடக்கவில்லை. முஸ்லிம்கள் மிகவும் பயந்த நிலையில் இருந்தனர். ஆகவே அவர்களை அச்சம் அடைய வேண்டாம் என கூறி உங்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுங்கள் என்றேன்.

இதன்போதே நாம் உலகில் பெரும்பான்மை மக்கள். ஆகவே அச்சமடைய வேண்டாம் என கூறினேன். எனினும் ஊடகங்கள் இதனை முன்னும் பின்னும் வெட்டிவிட்டு பிரசுரித்து விட்டனர்.

கேள்வி :- நீங்கள் இதனை நிராகரிக்கிறீர்களா?

பதில்:- நான் இலங்கையன் என்ற எண்ணத்துடன் வாழ்கிறேன். நான் எப்போதும் நாடு என்ற உணர்வுடன் வாழ்கிறேன். பெளத்த நாடு என்ற எண்ணத்தில் நான் பல கருத்துகளை கூறியுள்ளேன். எனினும் எமது மக்கள் அச்சமடையக் கூடாது என்றே கூறினேன்.

கேள்வி:- சஹ்ரானை சந்தித்துள்ளீர்களா?

பதில் :- ஆம் சந்தித்தேன்

கேள்வி:- எப்போது என்ன நோக்கத்தில் சந்தித்தீர்கள்?

பதில்:- கூறுகிறேன். 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வேட்புமனு முடிந்தவுடன் அவர் எம் அனைவரையும் சந்தித்து பேச அழைப்பு விடுத்தார்.

அப்போது அவர் நல்ல மதவாதி. குறிப்பாக இளைஞர்கள் அவருடன் இருந்தனர். தேர்தல் முடிந்தவுடன் எம் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். நான் மட்டும் அல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும், ஏனைய பலரும் வந்தனர்.

கேள்வி:- அரசியல் வாதிகளை கூப்பிட்டு பேசும் அளவிற்கு யார் இவர்? இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? நீங்கள் ஏன் இவருக்கு இவ்வளவு முன்னுரிமை கொடுக்கின்றீர்கள்? அவருக்கு அனைத்து கட்சிகளை சந்திக்க இருந்த நோக்கம் என்ன?

பதில்:- அப்போது அவர் பயங்கரவாதி அல்ல, அவர் சிறந்த மத தலைவராக இருந்தார். அவருக்காக பல இளைஞர்கள் பின்புலத்தில் இருந்தனர். ஆகவே வாக்குகளை பெற்றுக்கொள்ள அவர் தேவைப்பட்டார்.

கேள்வி:-நீங்கள் அவரை பயங்கரவாதி என ஏற்கமாட்டீர்களா?

பதில்:- அவர் பயங்கரவாதி தான் அதனை நான் மறுக்கவில்லை, ஆனால் அந்த காலத்தில் அவர் மத தலைவர். இளைஞர் அனைவரும் அவருடன் இருந்தனர். பல உடன்படிக்கைகள் அவரினால் போடப்பட்டன .

கேள்வி:- என்ன உடன்படிக்கை ?

பதில்:- தேர்தல் கூட்டங்களில் பாடல் ஒலிபரப்ப முடியாது. பெண்கள் கூட்டங்களுக்கு தனியாக வர வேண்டும். வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக நாம் அதனை ஏற்றுக்கொண்டோம்.

கேள்வி:- தேர்தலில் வாக்குகளை பெற்றுக்கொள்ள எந்த உடன்படிக்கையையும் செய்வீர்களா?

பதில்:- அவர் அப்போது பயங்கரவாதி அல்ல, அவர் ஒரு மத தலைவர். அவர் பயங்கரவாதி என்றால் நாம் ஏன் சந்திக்க போகின்றோம்? அப்படி செய்ய மாட்டோம்.

அது மட்டும் அல்ல அதன் பின்னர் எனக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுத்தார். 2015 காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டேன். அதில் இருந்து எனக்கு எதிராகவே அவர் செயற்பட்டார்.

என்னை அவர் 2000 வாக்குகளால் தோற்கடித்தார். அந்த சந்திப்பின் பின்னர் அவரை நான் சந்திக்கவே இல்லை.

ஏனெனில் அவர் எனக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களை செய்தார். எனக்கு வாக்கு கொடுக்க வேண்டாம் என பிரசாரம் செய்தார். நான் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் என்னை தேசிய பட்டியலில் இணைக்க வேண்டாம் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தார்.

என்னுடன் சூபி மக்கள் உள்ளனர். அவர்கள் எனக்கு வாக்கு கொடுப்பார்கள். அவர்களை இவர்கள் தாக்கினர்.

இது தொடர்பில் வழக்கு தொடுத்துள்ளேன். இதில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு பிடியாணை விடுக்கப்பட்டது. அப்போதில் இருந்து எனக்கு எதிராக பல எதிர்ப்புகள் வந்தன.

இந்தியாவில் கேலி சித்திரம் ஒன்றை எடுத்து அதில் எனது முகத்தை பொருத்தி முகப்புத்தகதில் விமர்சனம் செய்தனர், அவர் நியாஸ் என்ற நபர். இவர்தான் தற்கொலை தாரியாவார்.

என்னை மட்டும் அல்ல எனது குடும்பத்தையும் விமர்சித்தார். 2017 மார்ச் மாதத்தில் இருந்து இவரை தேடுவதாக கூறினர். சஹ்ரான் மற்றும் அவரது குழுவை கைதுசெய்ய வேண்டும் என நானும் சூபி குழுவினரும் கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் அதன் பின்னர் அவர் இருக்கவில்லை. அவர் நாட்டில் இல்லை என கூறினார்கள்.

அதன் பின்னர் அவரை நாம் சந்திக்கவில்லை. எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் என்னை இல்லாது செய்ய நடவடிக்கை எடுத்தவர். இராணுவத்தினர் பலருடன் இவர் தொடர்பில் இருந்தவர்.நியாஸும் அவ்வாறு இருந்தார்.

கேள்வி:- இது என்ன கதை, தெளிவுபடுத்துங்கள்?

பதில்:- இவர்கள் யுத்த காலத்தில் இருந்து தொடர்பில் இருக்கலாம். ஆமி மொய்தீன் என்பவரும் இதில் இருந்தார். நியாஸ் என்ற நபர் இராணுவத்துடன் தொடர்பில் இருந்தார். இராணுவத்துடன் இவர்கள் இருந்தனர். இராணுவத்துடன் வருவது போவதை பார்த்தோம். அவர்கள் பலமாக இருந்தனர். நாம் என்ன கூறினாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

கேள்வி:- இராணுவத்துடன் தொடர்பில் இருந்தனரா? எப்போதில் இருந்து?

பதில் :- ஆம் 2015 ஆம் ஆண்டில் இருந்து தொடர்பில் இருந்தனர். அனைவருமா என்று தெரியாது, ஆனால் நியாஸ் தொடர்பில் இருந்தார் .

கேள்வி:- நீங்கள் எந்த கட்சியில் அப்போது இருந்தீர்கள்?

பதில்:- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்தேன். கிழக்கில் பிரதான வேட்பாளராக களமிறங்கினேன்

கேள்வி:- சஹ்ரானின் அழைப்புக்கு செல்ல நீங்கள் தீர்மானிக்க அவருக்கு இருந்த பலம் என்ன?

பதில்:- வாக்கு பலம் தான்

கேள்வி:- நீங்கள் வாக்குகளை மட்டும் பார்த்தால் அவருக்கு எத்தனை பேர் ஆதரவாக இருந்தனர் என நினைகிறீர்கள்?

பதில்:- இரண்டாயிரம் மூவாயிரம் வாக்குகள், அப்போது நான் மகிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன், அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டு இருந்தார். ஊரில் மூவாயிரம் வாக்குகள் உள்ளன என்றால் பலம் தானே? அதேபோல் அவர் நல்ல பேச்சாளர். ஆகவே அது பலம் தான்.

இதற்காக மட்டும் அல்ல இவரை தவிர வேறு வேறு அமைப்புகளுடனும் பேசினேன். தப்ளிக் ஜமாஅத் அவர்களுடன் பேசினேன். பத்தாயிரம் வாக்குகள் உள்ளன. சூபி என்ற அமைப்பு உள்ளது. அவர்களிடம் ஆயிரம் வாக்குகள் உள்ளன. தாருல் என்ற அமைப்பு இவ்வாறு பல அமைப்புகள் உள்ளன. அவர்களிடம் பேசுவோம்.இது சாதாரண விடயம்.

கேள்வி:- சஹ்ரானுக்கு பாதுகாப்பு உதவி கிடைத்ததா?

பதில்:- ஆம், சஹ்ரான் எந்த சிக்கலும் இல்லாது அனைத்து சலுகைகளையும் பெறுவார். அவர்களுக்கு பொலிஸ் நெருக்கடி இருக்கவில்லை. அவர் வேறு முஸ்லிம் அமைப்புகளை விமர்சித்து ஒலிபெருக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்துவார்.

கேள்வி:- அப்படிஎன்றால் அவருக்கு அனுமதி கிடைக்குமா?

பதில்:- ஆம், சகல சலுகைகளையும் பெற்றார்.

கேள்வி:- அவர் மதங்களுக்கு இடையில் வெறுப்புணர்வையும் முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராக வெறுப்புணர்வையும் ஏற்படுத்தினார். அப்படியா?

பதில்:- ஆம், அவர் மத ரீதியில் தாக்குதல் நடத்துவார். 2010-11 காலங்களில் இருந்து மத ரீதியில் புதிய புதிய விடயங்களை கூறி ஒவ்வொரு குழுக்களில் இணைந்தார். அவர்களிடம் முரண்பாடுகள் ஏற்பட்டு அவர்களே நீக்கிவிடுவார்கள். பின்னர் அவராக ஒரு அமைப்பை உருவாக்கினார்.

ஒவ்வொரு வெள்ளியும் ஏனைய மதங்களை விமர்சித்தார். 2017 ஆம் ஆண்டு வரை அவர் ஊரில் இருக்கும் வரையில் மதவாதியாக இருந்தார். அதன் பின்னர் தான் அவர் ஐ.எஸ் அமைப்பில் இணைந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

]]>
கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களிற்கு நவீன கற்றல் முறை வகுப்பறை வசதி https://www.mukadu.com/2019/06/14/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-3/ Fri, 14 Jun 2019 05:54:39 +0000 http://www.mukadu.com/?p=25571 கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களிற்கு நவீன கற்றல் முறை வகுப்பறை வசதி இன்று ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகூடிய மாணவர் தொகை கொண்ட கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களின் கற்றல் வசதியை மேம்படுத்தும் நோக்குடன் குறித்த நவீன கற்றல் வகுப்பறை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பாடசாலை முதல்வர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களின் கல்விதிறனை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சினால் 26 லட்சம் பெறுமதியான 40 ரப்கள் மற்றம், சிமாட் போட் ஆகியன இன்று கையளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் சர்வதேச கல்வி முறைமைக்கமைய மாற்றும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி முறை மாற்றத்திற்கமைய குறித்த நவீன கணித வகுப்பறை இன்று கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டதுடன், கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.ஜோன் குயின்ஸ்ரன் அவர்களால் நாடா வெட்டி திறந்து வைத்தார்.

]]>
தீவிரவாதி சஹ்ரான் நடத்திய இரகசிய கலந்துரையாடல்! https://www.mukadu.com/2019/06/14/%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%b9%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/ Fri, 14 Jun 2019 05:36:23 +0000 http://www.mukadu.com/?p=25568 தீவிரவாதி சஹ்ரான் நடத்திய இரகசிய கலந்துரையாடல்!

தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான தீவிரவாதி சஹ்ரான் ஹசீம் நடத்திய இரகசிய கலந்துரையாடல் அடங்கிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு இடையே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தீவிரவாதி சஹ்ரானின் விரிவுரைகள் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை முன்னிறுத்தி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை அந்த காணொளியில் உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுளு்ளது.

இதன்போது சஹ்ரான் மற்றும் அவரின் விரிவுரைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு அனுப்பப்பட்டிருந்த கடிதங்கள் தொடர்பில் சஹ்ரான் விளக்கமளித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை! https://www.mukadu.com/2019/06/14/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be/ Fri, 14 Jun 2019 05:00:30 +0000 http://www.mukadu.com/?p=25565

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றிலேயே தெற்காசிய வலய அமெரிக்காவின் அபிலாஷைகள் என்ற தொனிப்பொருளில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கைகள் தொடர்பான பிரதம பிரதி உதவி செயலாளர் Alice G. Wells இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில்,

‘தெற்காசிய வலயத்தின் பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரத்தை மாத்திரம் அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை.

உலக சனத்தொகையின் ஒரு பகுதியான இந்திய, பசுபிக் வலயங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும், வலயத்தின் நீண்ட கால எதிர்காலத்திற்கும் இந்த கொள்கை முக்கியமானதாகும்.

இந்து, பசுபிக் வலயத்தின் ஊடாகவே உலகின் 70 வீத வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அமெரிக்காவின் இராஜதந்திர செயற்பாடுகள், அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஊடாக தங்களின் சமுத்திரம் மற்றும் வான் மார்க்கத்தை பாதுகாக்க முடியும்.

அத்துடன், அமெரிக்காவின் நட்புறவு மற்றும் பங்காளர்களான இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட ஏனைய நாடுகளுடன் இந்து – பசுபிக் நாடுகளுக்கு அரசியல் மற்றும் பொருளாதார சுயாதீன தன்மையை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும்.

அதன் ஊடாக சுதந்திரம் மற்றும் சௌபாக்கியத்தை எட்டக்கூடிய வழியை ஏனையவர்களின் பங்களிப்பின்றி அவர்களால் அமைத்துக்கொள்ள முடியும்.

ஒழுக்கம் மற்றும் ஜனநாயக பண்புகள் அற்றுப்போன, நிலையற்ற அடிப்படை வசதிகளின் ஊடாக சுமக்க முடியாத கடனால் எமது பங்குதாரர்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு சீனா அல்லது வேறு நாடுகளுக்கு இடமளிக்க மாட்டோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெற்காசிய வலயத்தின் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டமொன்றுக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் அடுத்த வருடம் தேவைப்படுவதாக இராஜாங்க திணைக்களம் அந்நாட்டு செனட் சபைக்கு அறிவித்துள்ளது.

இதன் ஊடாக இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் கடல் எல்லைகள் மேம்படுத்தப்படவுள்ளதுடன், பாதுகாப்பை அதிகரிப்பதற்கு வெளிநாட்டு இராணுவங்களுக்காக நிதி செலவிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

]]>
நெதர்லாந்தில் ‘ஒரு நாள் திருமணம்’ திட்டம் அறிமுகம்! https://www.mukadu.com/2019/06/14/%e0%ae%a8%e0%af%86%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/ Fri, 14 Jun 2019 04:53:51 +0000 http://www.mukadu.com/?p=25562

சுற்றுலா செல்பவர்களைக் கவரும் வகையில் அதிரடி திட்டம் ஒன்றை நெதர்லாந்து அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்தை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நாள் திருமணம் செய்து வைக்கும் திட்டம் ஒன்றே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எவ்வித சட்டப்பூர்வமான அம்சங்களும் உள்ளடக்கப்படாமல் சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான பிணைப்பை ஏற்படுத்துவதற்காக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இந்தத் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அங்கு செல்லும் சுற்றுலாப்பயணிக்கும் உள்ளூர்வாசி ஒருவருக்கும் சுமார் 35 நிமிடங்களுக்கு திருமணச்சடங்கு நடத்தப்படும்.

பின்னர் ஒருநாள் திருமணம் செய்த நபரை ‘தேனிலவு’ என்ற பெயரில் ஆம்ஸ்டர்டாமின் அறியப்படாத பல சுற்றுலாமையங்களுக்கு அழைத்துச் சென்று அந்த உள்ளூர்வாசி காண்பிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்துக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும் நிலையில் இப்புதிய திட்டமானது இன்னும் பலரை கவர்ந்திழுக்கும் என நம்பப்படுகிறது.

]]>
இலவச ரயில் சேவை ஆரம்பம்! https://www.mukadu.com/2019/06/14/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/ Fri, 14 Jun 2019 04:24:24 +0000 http://www.mukadu.com/?p=25559

இலவச ரயில் சேவையை வழங்குவதற்குப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

மிஹிந்தலைக்கு வருகைத்தரும் யாத்திரிகர்களின் நலனினைக் கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கும், மிஹிந்தலையிலிருந்து அநுராதபுரத்துக்குமான ரயில் சேவை எந்த கட்டணங்களுமின்றி இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

]]>
இல்மனைட் தொழிற்சாலையின் நுழைவாயிலை சேதப்படுத்திய 4 போ் கைது! https://www.mukadu.com/2019/06/14/%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/ Fri, 14 Jun 2019 04:19:12 +0000 http://www.mukadu.com/?p=25554 இல்மனைட் தொழிற்சாலையின் நுழைவாயிலை சேதப்படுத்திய 4 போ் கைது!

மட்டக்களப்பு வாகரை கதிரவெளி இல்மனைட் தொழிற்சாலை அலுவலக நுழைவாயிலை சேதப்படுத்தியதுடன் உள்ளே சென்று கலகத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 4 சந்தேக நபர்களை வாகரை பொலிசார் கைது செய்து வியாழக்கிழமை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினார்கள்.

சந்தேக நபர்களுக்கெதிராக மேற்படி தொழிற்சாலையில் கடமையாற்றி வரும் ஊழியர்கள் செய்த முறைப்பாட்டினையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்களுக்கெதிரான சாட்சியங்களை கேட்டறிந்து கொண்ட வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பஷில் சந்தேக நபர்களை தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கட்டளை பிறப்பித்தார்.

இவ் வழக்கு எதிர்வரும் 11.09.2019 ஆம் திகதி மன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும்.

மேற்படி சம்பவம் தொடர்பாக இவர்களது கைதினை கண்டித்தும் சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு வலியுறித்தி பிரதேச மக்கள் வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கூடி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் போராட்டம் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை இடம்பெற்றது. சந்தேக நபர்களின் விடுதலையினையடுத்தே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேற்படி சம்பவத்தினை அடுத்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக புதன் கிழமையன்று பிரதேச மக்கள் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நான்கு தடவையாக இவ் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.ஆனால் அவர்களுக்கு எது விதமான தீர்வும் கிடைக்கப்பெறவில்லையென கோஷமிட்டனர்.

இதன்போது ஆத்திரமுற்ற போராட்டக்காரர்கள் குறித்த இல்மனைட் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திற்கு சென்று அலுவலகம் அமைந்துள்ள நுழைவாயில் கதவினை உடைத்து சேதப்படுத்தி உள்ளே சென்று கலகத்தில் ஈடுபட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

]]>