//anjeng அறிவித்தல்கள் – Mukadu https://www.mukadu.com Thu, 02 Oct 2025 19:18:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 நூல் அறிமுகம் – துறுவேறும் கைவிலங்கு: சிறை அனுபவத்தின் அரசியல் சாட்சியம். https://www.mukadu.com/2025/10/02/%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%81/ Thu, 02 Oct 2025 19:18:29 +0000 https://www.mukadu.com/?p=26470

நூல் அறிமுகம் – துறுவேறும் கைவிலங்கு: சிறை அனுபவத்தின் அரசியல் சாட்சியம்

நிகழ்விடம்: 57, Boulevard de Belleville, பாரிஸ் 17-ம் பிராந்தியம்
தேதி: 28 செப்டம்பர் 2025
ஆரம்பம்: பொதுச்சுடர் ஏற்றி அமைதி வணக்கத்துடன், மாலை 16:30

“விடுதலைப் பெருவிருட்சம் வளர்ந்திட, விடுதலை நீர்வளர்ப்போம்” என்ற தொனியில் நிகழ்த்தப்பட்ட அரங்க ஆற்றுகை, பங்கேற்றவர்களை உள்ளார்ந்த ஒன்றுபாட்டுடன் அரங்குக்குள் இழுத்துச் சென்றது.

நிகழ்வின் தலைமை ஏ.கே. ராஜன் வகித்திருந்தார். தமிழ் மொழிப்பரப்பில் பல்வேறு மேடைகளில் தொடர்ந்து காணப்படும் அவரின் உரைபாணி இங்கு மீண்டும் பிரதிபலித்தது. ஆனால் அதே பாணி மீண்டும் மீண்டும் நிகழ்வதால், அது இளைய தலைமுறையின் பங்களிப்பைத் தடுக்கின்ற இடையூறாகவே தோன்றியது.

நிகழ்ச்சி வரவேற்புரை, ஆசியுரை, தலைமையுரை, வாழ்த்துரை, கருத்துரைகள், நூலறிமுகம், நூலாய்வு, படைப்பாளியின் பதிலுரை, விடுதலை நீர்சேகரித்தல், நன்றியுரை, நிறைவு என்ற ஒழுங்கமைப்பில் நடைப்பெற்றது. எனினும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது:
“துறுவேறிய நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்”.

ஒரு நூல் அறிமுகம் என்பது அந்த நூலைச் சுற்றிய அரசியல், இலக்கிய, சமூக பரிமாணங்களை ஆராய்ந்து, அதன் பயன்பாட்டை விவாதிக்கின்ற இடமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு நிகழ்ந்தது, நூலைக் குறித்த செறிவான சிந்தனையை விட, எழுத்தாளரின் தனிப்பட்ட பாசம் மற்றும் புகழ்ச்சி அதிகமாக இடம்பிடித்தது.

சிறை வாழ்க்கையின் அனுபவங்கள்.
இலங்கைச் சூழலில் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொண்ட தனிமை, ஒடுக்குமுறை, மன அழுத்தம், எதிர்பார்ப்பற்ற வாழ்வு போன்றவற்றை எழுத்தாளர் தனது அனுபவத்தோடு இணைத்து வெளிப்படுத்துகிறார். இத்தலைப்பு இலக்கிய ஆவணமாக மட்டுமின்றி, அரசியல் சாட்சியமாகவும் அமைகிறது.

எனினும், நிகழ்வில் பேசிய சிலர் நூலின் இத்தன்மையை விரிவுபடுத்தாமல், “நூலாசிரியரின் தனிப்பட்ட துயரம்” என்ற கோட்டில் மட்டுமே தங்கினர். இதனால், நூலின் அரசியல் வலிமையும், அதன் சமூக அவசியமும் பின்தள்ளப்பட்டன.

எழுத்தாளர் சுட்டிக்காட்டும் ஒரு முக்கியமான உண்மை:
இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்த தமிழ் அரசியல் கட்சிகளின் மற்றும் அமைப்புகளின் அலட்சியம். இது வெட்ககேடான ஒன்று.

மேலும், எழுத்தாளரின் மகள் பகிர்ந்த அனுபவங்கள் அப்பா சிறையில் கழித்த நாட்களில் குடும்பத்தின் துன்பங்கள். தமிழ்தேசிய அரசியலின் பணப்பரிமாற்ற முடக்குவாதம் மீது எழுப்பிய கேள்விகள் இவை அனைத்தும் அரங்கில் அமர்ந்திருந்தவர்களை நேரடியாகத் தாக்கின. உண்மையில், அங்கு வந்தவர்களில் சுமார் 70% பேர் குற்றவுணர்வால் சுருங்கியிருந்தனர் என்பதே நிகழ்வின் சொல்லப்படாத உண்மை.

எழுத்தாளரின் நீண்ட உரை அரசியல் கைதிகளின் விடுதலையை மையமாகக் கொண்டிருந்தது. இது முக்கியமான உரை. ஆனால் ஒரு நூல் அறிமுக அரங்கு என்பதால், அது சுருக்கமாக அமைந்து, கலந்துரையாடலுக்கு அதிக இடம் வழங்கப்பட்டிருந்தால் பல்வேறு பார்வைகள் வெளிப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால், நிகழ்வு இன்னும் செறிவான அரசியல்-இலக்கிய விவாதத்திற்கு வழிவகுத்திருக்கும்.

இளைய தலைமுறை குரல்களின் பற்றாக்குறை

பிரியா மைந்தன் போன்றோர் பிரஞ்சு மொழியில் சுருக்கமான அறிமுகங்களைச் செய்திருந்தாலும், மொத்தத்தில் இந்த நிகழ்வு முன்னோடி தலைமுறையின் இலக்கியக் கூட்டமாகவே அமைந்தது.
இளைய தலைமுறையின் சிந்தனைகள் கேட்காதது, அரங்கத்தின் மிகப்பெரிய குறையாகவே நினைக்கப்பட்டது.

துறுவேறும் கைவிலங்கு – சிறை அனுபவங்களின் தனிப்பட்ட சாட்சியம் மட்டுமல்ல. அது தமிழ் அரசியல் கைதிகள் மீதான சமூக அலட்சியத்தையும், விடுதலை அரசியலின் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் ஆவணம்.

ஆனால், அதன் அறிமுக நிகழ்வு அந்தச் செறிவை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போனது.
இது ஒரு எச்சரிக்கை:
ஒரு நூல் அறிமுகம் வெறும் புகழ் பரிமாற்ற மேடை அல்ல, அது கருத்து மோதல்களின், அரசியல் நெருக்கடிகளின், இலக்கிய விவாதங்களின் அரங்கு ஆக வேண்டும்.

நூலை முழுமையாக வாசித்த பிறகே அதன் ஆழ்ந்த உள்ளடக்கத்தைப் பற்றி பேச இயலும். ஆனால் அறிமுக நிகழ்வு நமக்குக் காட்டியது தமிழர் அரசியல்-இலக்கிய அரங்குகளுக்கு இன்னும் சுயபரிசோதனை தேவைப்படுகின்றன.

01-10-2025
ப.பார்தீ

]]>
“வேரும் விழுதுகளுமாய்”பாடல் வெளியீடு https://www.mukadu.com/2023/11/01/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa/ Wed, 01 Nov 2023 10:30:29 +0000 https://www.mukadu.com/?p=26323 முகடு படைப்பகத்தின் 🚀

“வைகாசி நாசம்”https://youtu.be/iYeGTk2G4j0?si=pRoXKGB-qEIyOmGX
“மாவீர்ர்போற்றி https://youtu.be/khsOj0RR4Ig?si=HDbHMB5Cw8kfpiB7”பொங்கலோ பொங்கல்”https://youtu.be/DGvCAGTBDdc?si=Cptjz6wmICRZoI6G”என்பால்” https://youtu.be/MUIjehDLblg?si=OoaVH8LjmUMhsO_t போன்ற பாடல்கள் தயாரிபின் தொடர்ச்சியாக
“வேரும் விழுதுகளுமாய்” என்னும் பாடல் 02-11-2023 அனைத்து தமிழ் உள்ளங்களையும் முகடு யூட்டிப் தளத்தினூடாக தேடிவருகின்றது
என்பதை மன மகிழ்வோடு உங்களுக்கு தெரியப்படுத்துவதோடு.பாடலை கேட்டு உங்கள் மனம் திறந்த பின்னூட்டங்களையும் வேண்டிநிற்கின்றோம்.

பாடலின் பங்காளர்கள்.
தயாரிப்பு – #ப.பார்தீ
இணைத் தயாரிப்பு – #சி_சிறிநவசுதன்
இசை அமைப்பு – பிரியன் தம்பிராஜா Priyan Thampirajh
குரல்- #வருணவி_தவகணேஸ்
பாடல் வரிகள்-பா.பார்தீ
இயக்கம் & ஒளிப்பதிவு – றெஜி செல்வராசாReji Selvarasa
தயாரிப்பு முகாமையாளர் – சுவிகரன் எம் எஸ் கே
தயாரிப்பு நிர்வாகம் – இலங்கேயன் பிக்சர்ஸ்
கலை இயக்கம் – டேறியன்
உதவி ஒளிப்பதிவு – விதுசன்
படத்தொகுப்பு – றெஜி செல்வராசா
வடிவமைப்பு – மதுசன்

ஊடக அனுசரணை – குவியம்Kuviyam, வளரிValarytv

#முகடு_குழுமம் #Yogoo_Arunakiri #வாகை_காட்டான் #Kar_Vanna #Nithi_Vanajan #Shankar_Theva #Lavea Ilankeyan Pictures

]]>
“வேரும் விழுதுகளுமாய் தமிழ்” என்ற பாடல் https://www.mukadu.com/2023/08/26/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae/ Sat, 26 Aug 2023 09:52:38 +0000 https://www.mukadu.com/?p=26315 மூச்சுடன் காற்று போல் வீட்டினில்
தாய் மொழி வளர்த்திடு தமிழாய்”

வேரும் விழுதுகளுமாய் தமிழ்” என்ற பாடல்

வணக்கம்
முகடு படைப்பகத்தின் வெளியீடாக “வேரும் விழுதுகளுமாய் தமிழ்” என்ற பாடல் மிக விரைவில் அனைத்து தமிழ் உள்ளங்களையும் தேடி வருகிறது என்பதை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்.
பாடலின் பங்காளர்கள்.
தயாரிப்பு -பா.பார்தீ
இணைத் தயாரிப்பு -சி-சிறிநவசுதன்
இசை அமைப்பு -பிரியன் தம்பிராஜா Priyan Thampirajh
குரல்- வருணவி தவகணேஸ் கணேஸ் கௌரி
ஒளிப்பதிவு ஒளித்தொகுப்பு இயக்கம்- ரெஜி செல்வராசா Reji Selvarasa
பாடல் வரிகள்-பா.பார்தீ
முகடு குழுமம்

]]>
கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜன் புகையிரத விபத்தில் உயிரிழப்பு! https://www.mukadu.com/2023/01/30/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e/ Mon, 30 Jan 2023 21:53:47 +0000 http://www.mukadu.com/?p=26309 கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் கொழும்பில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தெஹிவளை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டு கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த எஸ்.என். நிபோஜன், பல அச்சுறுத்தல்கள் மத்தியிலும் கிளிநொச்சியில் இருந்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்கள். காணி விடுவிப்பு போராட்டங்கள் , மீள் குடியேறுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர். முகடு இணையத்தள செய்தியாளராகவும் பணிசெய்தவர்.

சிறந்த புகைப்பட கலைஞனாக புகைப்பட ஊடகவியலாளனாக பல கதை சொல்லும் புகைப்படங்களை செய்தி அறிக்கைகள் ஊடாக வெளிக்கொணர்ந்தவர்.

]]>
முகடு படைப்பகத்தன் வெளியீடாக பொங்கலோ பொங்கல் பாடல். https://www.mukadu.com/2022/01/14/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af/ Fri, 14 Jan 2022 10:09:36 +0000 http://www.mukadu.com/?p=26176 IMG_6440

முகடு படைப்பகத்தன் வெளியீடாக பொங்கலோ பொங்கல் பாடல் உங்களுக்காக
“பொங்கலோ பொங்கல்”
வெளியீடு முகடு படைப்பகம்
Lyrics ப.பார்தீ (parthipan)
Music :- Jeyanthan Wicky
Vocal :- Jothy , Jeyanthan Wicky
Vedio ATELIER:- papillon de Paris

]]>
இசை அத்தியாயம் சரிந்ததுவே. https://www.mukadu.com/2021/09/26/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5/ Sun, 26 Sep 2021 09:27:24 +0000 http://www.mukadu.com/?p=26111 இசை அத்தியாயம் சரிந்ததுவே!!

இவர் குரலில் அமைந்த பாடல்கள் – அது சாஸ்திரிய சங்கீதப் பாடலாக இருக்கட்டும், மெல்லிசைப் பாடல்களாக இருக்கட்டும், ஏன் இவர் குரலில் வந்த தாயகப் பாடல்களாக இருக்கட்டும் கேட்பவரைத் தம் வசப்படுத்தும் வல்லமை இவர் குரலுக்கு உண்டு.

ஈழத்து இசையில் இசைக் குடும்பப் பின்னணியுடன் உள் நுழைந்திருந்தாலும், தன் தனித்துவமான குரலால் அனைவரையும் கட்டிப் போட்டவர்.

யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் கலைமாமணி பட்டத்தைப் பெற்றவர். இவர் தந்தையார் சங்கீத வித்துவான் வர்ணகுலசிங்கம். இவர் தந்தையார் மறைந்த இசை மாமேதைகள் மகாராஜபுரம் சந்தானம் மற்றும் மகாராஜபுரம் விஸ்வநாதையா அவர்களின் பிரதம சீடர்.

தெல்லிப்பளை வரதராஜசர்மாவிடம் மிருதங்கம் பயின்றவர். மிருதங்கம், தவில், ஆர்மோனியம் நன்கு அறிந்த – பரிச்சயமான பல்துறைக் கலைஞனாக விளங்கினார் வர்ண ராமேஸ்வரன்.

இளமையிலே இசைப் பரிச்சயம் உடைய வர்ண ராமேஸ்வரன் அவர்கள் மிருதங்க வித்துவான் சிவபாதம், பாடகி பார்வதி சிவபாதத்தின் உறவினரும் கூட.

தெல்லிப்பளை மகாஜானக் கல்லூரியல் கல்வி கற்ற வர்ண இராமேஸ்வரன் அவர்களுக்கு அளவையூர் விநாசித்தம்பிப் புலவரின் கதாப் பிரசங்கத்திற்கு மிருதங்கம் வாசிக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

அளவையூர் விநாசித்தம்பிப் புலவர் தான் தந்தையாரின் பெயரின் முற்பகுதியையும் இணைத்து வர்ண ராமேஸ்வரன் எனப் பெயர் சூட்டினார்.

கவிஞர் புதுவை இரத்தினதுரையின் வரிகளில் உருவான நல்லை முருகன் பாடல்கள், மற்றும் திசையெங்கும் இசை வெள்ளம், ஊர் போகும் மேகங்கள் என தாயக மண் வாசம் கமழும் இறுவட்டுக்களை வெளியிட்டிருக்கிறார்.

உலகத் தமிழர் மத்தியில் “எங்கே எங்கே ஒரு தரம் உங்கள் விழிகளைத் திறவுங்கள்’ எனக் கேட்கின்ற போதே கண்ணீரை வர வைக்கின்ற துயிலுமில்லப் பாடலான “தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” பாடல் ஊடாக நன்கு பரிச்சயமானவர்.

பல்வேறு வித்துவான்களையும், கலைஞர்களையும் தந்த யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்துள்ள அளவெட்டி எனும் கிராமத்திற்கு அருகே உள்ள சிறுவிளான் எனும் சிற்றூர் தான் இக் கலைஞன் பிறந்த மண், பின் யாழ்ப்பாணம் , வன்னி , கொழும்பு என வாழ்ந்து கால ஓட்ட மாற்றத்தில் புலம்பெயர்ந்து அவர் இறக்கும் வரை கனடாவில் வசித்து வந்தார்.

பல்துறைக் கலைஞரான வர்ண ராமேஸ்வரன் அவர்கள் , யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இசை விரிவுரையாளராக இருந்திருக்கிறார், தென் இந்தியாவில் சென்னையிலும் இசை பயின்றுள்ளார்.
வர்ணம் எனும் இசைப் பள்ளியினையும் கனடாவில் நடாத்தி வந்துள்ளார்.

நிதர்சனப் பொறுப்பாளராக பரதன் அவர்கள் இருந்த காலத்தில் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் அழைக்கப்படுகிறார், பூபாளம் பாடும் நேரம் , பூ மலர்ந்தது கொடியினில் என இவ் இரு பாடல்களையும் பாடுவதற்கு பயிற்சி எடுத்துவருமாறு அனுப்பப்படுகின்றார். தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த ஒலிப்பதிவு தடைப்பட்டு பாடல்கள் இரண்டும் இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கத்திர்ற்கு வழங்கப்படுகின்றது.

பின்னர் புதுவை இரத்தினதுரையின் அழைப்பின் பேரில் விழித்தெழுவோம் (1992) ஒலி நாடாவில் புறமொன்று தினம் பாடும் பெண் புலிகள்,
கரும்புலிகள் ஒலி நாடாவில் தாயக மண்ணின் காற்றே,
எதிரியின் குருதியில் குளிப்போம், பூநகரி வெற்றிச் சமர் ஒலி நாடாவில் அப்புகாமி பெற்றெடுத்த லொகு பண்டா மல்லி, முன்னேறிப் பாய்ச்சலின் போது வெளியான அவரும் அவர் நண்பர் சடகோபனும் எழுதிப் பாடிய வேப்பமரக் காற்றே நில்லு, வீதியோரப் பூவே சொல்லு”
போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு அவருக்கு ஏற்படுகின்றது. இதன் பின்னர் புதுவையர் வர்ண ராமேஸ்வரன் கூட்டணியில் நல்லை முருகன் பாடல்கள் ஒலிநாடா வெளியாகின்றது.

1992ம் ஆண்டு கிளாலி கடல் நீரேரிப் பாதையில் இடம் பெற்ற மோதல் காரணமாக பாடகர் சாந்தன் அவர்கள் வன்னிக்குள் சிக்கிக் கொள்ள, அவர் யாழிற்கு வர வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த புதுவை இரத்தினதுரை அவர்களிற்கு ஏமாற்றமே எஞ்சுகிறது.

உடனடியாக புதுவையர் வர்ண ராமேஸ்வரனை தன் இல்லத்திற்கு அழைக்கிறார். முக்கியமான ஓர் பாடல், நீதான் இதனைப் பாட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றார்.

”எங்கே எங்கே ஒருதரம் உங்கள் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்”
அவர் இந்த வரிகளைப் பாடும் போதே புல்லரித்துப் போனதாய் வெளிச்சத்திற்கான ஓர் செவ்வியில் பகிர்ந்திருந்தார்.

புதுவையர் சாய்மனைக் கட்டிலில் அமர்ந்தவாறு இன்னுமொருக்காப் பாடும் ஐசி எனக் கேட்டுக் கேட்டுக் கொண்டாராம். இப்படி 3 தடவைகள் கேட்ட பின் 10 நிமிடங்கள் மௌனமாய் புதுவையர் இருந்தாராம், இறுதியில் ஒரு பெரு மூச்சுடன் எழுந்து மறுநாள் மாலை ஐந்தரை மணிக்கு ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டார்.

இசைவாணர் கண்ணன் ஆர்மோனியம், சதா வேல்மாறன் தபேலாவுடனும், ஜெயராமன் வயலினுடனும் இசையமைக்க பாடல் ஒலிப்பதிவு ஆரம்பமாகின்றது. அருகே நின்றிருந்த மேஜர் சிட்டு, ராதிகா, மணிமொழி போன்ற கலைஞர்களும் இப்பாடலை முணு முணுக்க ஆரம்பிக்க ”எங்கே எங்கே” என்ற வரிகளை எல்லோரும் சேர்ந்தே பாடுங்கள் என புதுவை இரத்தினதுரை அவர்கள் கூறுகிறார்.

ஒலிப்பதிவ் முடியும் போது காலை 03 மணி, ஆனால் பாடகர் சாந்தன் அவர்கள் தவற விட்ட, இந்த ஓர் பாடல் , வர்ண ராமேஸ்வரனின் குரலால் உயிர் பெற்று ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாடலாக அமையப் போகின்றது என்பதை அப்போது அங்கிருந்த எந்த ஓர் கலைஞர்களும் அறிந்திருக்கவில்லை.

1992ம் ஆண்டு மாவீரர் நாளின் இறுதி நாள், புதுவையரைச் சந்திக்க வந்திருந்த வர்ண இராமேஸ்வரன் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது.

புதுவையர் ராமேஸ்வரனை கட்டித் தழுவிப் பாராட்டினார், சிறிது நேரத்தில் காக்கா அண்ணை வந்து தலைவரே பாடல் கேட்டு வியந்திருப்பது பற்றி பகிர்ந்து கொண்டார். பின்னர் 11.30 மணியளவில் சு.ப தமிழ்ச் செல்வனும் வந்து பாராட்டினார்,

இவர்கள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு வாகனம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தை நோக்கி விரைந்தது. 12 மணியானதும் கோவில்களில் மணி ஒலிக்க , புலிகளின் குரலில் துயிலுமில்லப் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கிறது. அந்தப் பாடலிற்கான மகிமை – மகத்துவம் அப்போது உணரப்படுகின்றது. நெய் விளக்கு ஏற்றப்படும் அதே சமயத்தில் வர்ண ராமேஸ்வரனையும் பாடலைச் சேர்ந்தே பாடுமாறு புதுவையர் கேட்டுக் கொண்டார். அந்தக் குரலும், குரலினால் வெளிப்பட்ட பாவங்களும் கேட்போர் அனைவரையும் – ஏன் கல் நெஞ்சங்களையும் கரைக்கும் வல்லமை கொண்டவையாக விளங்கியது என்றால் மிகையல்ல.

இது தவிர மெல்லிசைப் பாடல்களால் நம் மத்தியில் நன்கு பரிச்சயமானவர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள்,

”மறந்து போகுமோ மண்ணின் வாசனை”,
”வாசலிலே அந்த ஒற்றைப் பனை மரம்”,
ஊருக்கு மீளும் கனவு உனக்கில்லையா தமிழா? ”
இப்படிச் சில பாடல்களைக் குறிப்பிடலாம்,

இசைத் தமிழ் உலகிற்கு வர்ண ராமேஸ்வரனின் இழப்பு – பேரிழப்பு

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

தேடல் , எழுத்துருவாக்கம்,
#கமலேஷ்

]]>
பெருமதிப்பிற்குமுரிய எழுத்தாளர் தோழர் டொமினிக் ஜீவா அவர்கள் இன்று காலமானார் . https://www.mukadu.com/2021/01/28/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%b4/ Thu, 28 Jan 2021 20:02:39 +0000 http://www.mukadu.com/?p=25988 அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எழுத்தாளர் தோழர் டொமினிக் ஜீவா அவர்கள் இன்று மாலை (28/01/2021) காலமானார் . ஈழத்து எழுத்துலக வரலாற்றில் வாசம் வீசிய மல்லிகை விடைபெற்றது.

]]>
வெளிவந்து விட்டது சயந்தனின் புதிய நாவல் “அஷோரா” https://www.mukadu.com/2021/01/02/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9/ Sat, 02 Jan 2021 10:06:46 +0000 http://www.mukadu.com/?p=25964 சயந்தனின் புதிய நாவல் “அஷோரா”

சிறு வெளியீடு. எழுத்தாளர்கள் வேல.ராமமூர்த்தி, பாஸ்கர் சக்தி, அகரமுதல்வன் மற்றும்வேடியப்பன், மணிகண்டன் ஆகியோர்.

 

 

]]>
பட்டக்காடு நாவல் அறிமுகம். https://www.mukadu.com/2020/11/16/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae/ Mon, 16 Nov 2020 13:21:58 +0000 http://www.mukadu.com/?p=25867 வன்னிக்கு வெளியில் இருந்துகொண்டு யுத்தத்தை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புரிதலையும் , வெளிப்பாட்டையும், ஈடுபாட்டையும் மையச்சரடாகக் கொண்டு புனையப்பட்ட கதைப் பிரதிகள் இதுவரை ஈழத்தில் மிகவும் சொற்பமாகவே வந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழ யுத்தத்தையும் அதனால் தமிழர்கள் கடந்து வர வேண்டியிருந்த பேரிடரையும் புறத்தேயிருந்து பார்த்து, அனுபவித்த ஒரு வரலாற்றுக் கண்ணாடியாக பட்டக்காடு இருக்கும்.

பட்டக்காட்டின் மூலக்கதை உண்மையான சம்பவங்களிலிருந்து கோர்க்கப்பட்டவை. அவற்றில் பல சம்பவங்களை நான் நேரடியாகவே அனுபவித்துக் கடந்து வந்திருக்கிறேன். இன்னும் சில இடங்களில் நானே அப்பாத்திரங்களாகவும் வாழ்ந்திருக்கிறேன். எளிய மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அருகிலிருந்து பார்க்கும் வலி கொடியது. அதைப் பட்டக்காட்டின் பல பக்கங்கள் உங்களுக்கு உணர்த்தும்.

-அமல்ராஜ் பிரான்சிஸ்

புத்தகத்தின் விலை 2336 ரூ.
வெண்பாவின் சிறப்புச் சலுகை விலை 1869 ரூ.

இலங்கையின் எப்பாகத்திலிருந்தாலும், புத்தகத்தை மூன்று வேலைநாட்களுக்குள் வீடுகளுக்கு வரவழைத்துக்கொள்ளாம்.

வாட்ஸப் 076 291 2100
மெசெஞ்சரிலும் தொடர்புகொள்ளலாம்.

]]>
உலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது! https://www.mukadu.com/2019/05/24/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Fri, 24 May 2019 15:55:00 +0000 http://www.mukadu.com/?p=24102 உலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது!

கனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது. ஈழத்து இளம் எழுத்தாளரின் நூல் ஒன்று உலகின் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து கவனம் பெற்று வருவது அண்மையில் நடந்துவரும் அதிசயம்.

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பொன்னைய்யா விவேகானந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வரவேற்புரையை ஊடகவியலாளர் கந்தசாமி கங்கதரனும் தீபச்செல்வன் குறித்த அறிமுகத்தை இயக்குனர் ரஞ்சித் யோசப்பும் வழங்கவுள்ளனர்.

நூல் அறிமுகத்தினை எழுத்தாளர் ரதனும் வழங்கவுள்ளார். அத்துடன் நடுகல் பெறுமானம் என்ற தலைப்பில் காலம் இதழின் ஆசிரியர் செல்வம் ஆய்வு ஒன்றினை நிகழ்த்தவுள்ளார்.

மேலும் ஆய்வுரைகளை ஈழக் கலைஞர் மேர்லின் மற்றும் அன்பு ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

நூலினை ஈழத்துக் கவிஞர் சா.வே. பஞ்சாட்சரம் வெளியிட்டு வைக்க கவிஞர் தீபச்செல்வனின் ஏற்புரையும் இடம்பெறவுள்ளது.

ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வனின், முதல் நாவலான நடுகல் வெளியாகி வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு காணும் நடுகல் நாவலுக்கு சிறப்பான வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஈழப் போரில் பிறந்து வளர்ந்த அண்ணன் தம்பி இடையிலான வாழ்வும், போராட்டத்திற்கு செல்லும் அண்ணனின் நினைவுகள் மீதான தம்பியின் தேடலாகவும் அமையும் கதையைக் கொண்ட இந் நாவல், தமிழீழ தேசம் எப்படியிருந்தது என்பதை பேசுகின்றது.

பிரான்ஸ் மற்றும் இலண்டனில் இந்த நாவலின் அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள நிலையில், சுவிஸ், டொன்மார் மற்றும் அவுஸ்ரேலியாவிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அழைப்பிதழ்

]]>