//anjeng

மிகுந்த காத்திருத்தலின் பின், ஜெர்மன் நேரம் நள்ளிரவு 12:30 மணியளவில்,ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி எடுத்திருந்த முதல் படத்தை, வெள்ளை மாளிகையிலிருந்து அதிபர் ஜோ பைடன் மூலமாக நாஸா வெளியிட்டது.
13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஆரம்ப அண்டத்தினலிருக்கும் உடுக்களையும் (Stars), உடுத்திரள்களையும் (Galaxy) துல்லியமாகப் படம் எடுத்திருக்கிறார்கள். அப்படங்களை நாளை வெளியிடுவார்கள். இந்தப் படத்தில், ‘ஈர்ப்பு வில்லை’ (Gravitational Lensing) எனப்படும் அதியீர்ப்பின் அண்டவெளி வளைவில், ஒளியும் வளைந்திருக்கும் விளைவுகளை நீங்கள் தெளிவாகப் பார்க்கலாம்.
இதுவரை 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரான படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரை பில்லியன் ஆண்டுகள் பின்னோக்கி, அதாவது 13.5 ஆண்டுகள் வரை ஜேம்ஸ் வெப் படமெடுக்க இருக்கிறது. அண்டம் உருவாகி வெறும் 300 மில்லியன் ஆண்டு வயதாக இருக்கும்போதான படமாக அது இருக்கும்.
சரியாகச் சிந்தித்துப் பாருங்கள். நாம் பார்ப்பதற்காகவே, 13 பில்லியன் ஆண்டுகளாகப் பயணம் செய்து வந்த ஒருசில போட்டான்கள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கண்ணாடிகளில் மோதியிருக்கின்றன. அத்துடன் அவற்றின் பயணத்திற்கான காரணம் முடிவடைந்துவிட்டது. அந்த ஒருசில போட்டோன்களே, போட்டோக்களாகியிருக்கின்றன.
நாளை மேலும் சில படங்கள் நாஸாவால் வெளியிடப்படலாம்.
இந்தப் படத்தைப் பார்த்ததும், “அட! இதிலென்ன இருக்கிறது? வெறும் புள்ளிகளும் ஒளிவீச்ககளும் மட்டுமே தெரிகின்றன. இதற்காகவா 25 வருட உழைப்பையும், 10 பில்லியன் டாலர்களையும் செலவழித்தார்கள்?” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், தலையை CT Scan மூலம் படமெடுத்துப் பார்க்கும்போது, அதிலுள்ளவை உங்களுக்கு வெறும் கோட்டுப். படம்தான். ஆனால், அதற்கெனப் பயிற்சிபெற்ற மருத்துவர்களுக்கோ பல தகவல்களைக் கொடுக்கும் பொக்கிசம். அதுபோலத்தான், ஜேம்ஸ் வெப் எடுத்திருக்கும் இந்தப் படங்களும் அறிவியலாளர்களுக்குத் தகவல் சுரங்கமாக இருக்கும்.
மேலும் அரை பில்லியன் ஆண்டுகள் பின்னோக்கிப் படமெடுக்கும்போது, பேரண்டத்தை ஆறு நாட்களில் படைத்துவிட்டு, ஏழாவது நாள் ஓய்வெடுக்கச் சென்ற கடவுளின் கால் விரலையாவது ஜேம்ஸ் வெப் ஒருவேளை கண்டுபிடிக்கலாம். யார் கண்டது?
-ராஜ்சிவா
]]>காலநிலைப் பாதிப்புகள் மனித குலத்தை
எதிர்காலத்தில் தான் தாக்கும் என்றிருந்த நம்பிக்கை தொலைந்து விட்டது. இயற்கை தன்னைச் சீண்டுகின்ற மனிதனை நிகழ்காலத்திலேயே பல வடிவங்களில் திருப்பித் தாக்கத்தொடங் கிவிட்டது.
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு
ஒன்று இடிந்து தரைமட்டமாகிமையும் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில்
வான்கூவர் அருகே ஒரு கிராமம் நெருப்பு
வெக்கையில் வெந்து கொண்டிருப்பதும்
பூமி வெப்பமடைதலின் உடனடி விளைவு
கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
வான்கூவரில்(Vancouver) இருந்து 260
கிலோ மீற்றர்கள் வடகிழக்கே அமைந்
துள்ள சிறிய கிராமம் லிட்டன் (Lytton).
அங்கு அடுத்தடுத்து சிலநாட்களில்
வெப்பநிலை உயர்ந்து உலக சாதனை
அளவை எட்டியுள்ளது. கடந்த செவ்வாயன்று அங்கு 49.6C (121.3F) வெப்பநிலை பதிவானது என்ற செய்தி வெளியான போது முழு உலகமும் லிட்டனை நோக்கித் திரும்பியது. சமீபகால வரலாற்றில் கனடாவில் மட்டுமன்றி உலக அளவிலும் மக்கள் வாழ்விடப் பகுதி ஒன்றில் பதிவாகிய அதி உச்ச வெப்ப நிலை இதுவே என்று கூறப்படுகிறது.
லிட்டன் பகுதியில் கடந்த சில தினங்களில் பதிவான மரணங்கள் 185 என்ற வழமையான கணக்கில் இருந்து
486 ஆக அதிகரித்துள்ளன.காற்றோட்ட வசதி இல்லாத வீடுகளில் படுக்கைக்குச் சென்ற பல முதியோர்கள் மறுநாள் எழுந்
திருக்கவில்லை. நெருப்பு மூழும் அளவுக்கு வெப்பம் தகிப்பதால் நகரை விட்டு வெளியேறுமாறு மக்கள் கேட்கப்
பட்டுள்ளனர். பல பகுதிகளிலும் தீ பரவி
யுள்ளது. “முழு நகரமுமே நெருப்பில் உள்ளது” (“The whole town is on fire.”) என்று
லிட்டன் நகர மேயர் ஜான் போல்டர்மேன் (Jan Polderman) அதிர்ச்சியுடன் விவரித்தி ருக்கிறார்.
உச்ச வெம்மை தீயாக மூண்டு லிட்டன் கிராமத்தின் 90 வீதமான பகுதிகளைப்
பொசுக்கிய விட்டதாக பிந்திய செய்திகள்
தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிலும் கனடாவின் பல பகுதிகளிலும் திடீரென வெப்பம் உயர்ந்துவந்த போதிலும் பிரிட்டிஷ்
கொலம்பியாவையே அது மோசமாகத் தாக்கி உள்ளது. வசந்தத்துக்கும் கோடைக்கும் இடையே இதமான பருவ
நிலையை அனுபவிக்கவேண்டிய கனடா
மக்கள் உறங்க முடியாத இரவுகளைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா(British Columbia)
மாகாணத்தின் பெரிய நகரமான வான்
கூவரில் பொது மக்கள் தங்குவதற்காக
25 குளிரூட்டப்பட்ட பாரிய நிலையங்கள்
(air-conditioned cooling centres) திறக்கப்பட்
டிருக்கின்றன.
?வெப்பக் குவிமாடங்கள் (heat domes)
சமீப காலங்களில் உருவாகி வருகின்ற
இதுபோன்ற புதிய வடிவங்களிலான
இயற்கை அனர்த்தத்தை அறிவியலாளர்
கள் “heat domes” என்று பெயர் குறிப்பிட்டு
அழைக்கின்றனர். பூமியின் வெப்ப அதிகரிப்பு தரைப்பகுதிகளை உலர்த்தி
வருகிறது. வரண்ட தரை வெப்ப நிலை
யைப் பெருக்குகின்றது. தரையிலும் சமுத்திரத்திலும் இவ்வாறு வெப்பம்
பெருகி அதனால் உருவாகின்ற வெம்மை
யான காற்றலை வானில் ஒரு தொப்பி
போன்ற அமைப்பில் “வெப்பக் குவி மாடத்தை” (heat dome) தோற்றுவிக்கின்
றது.
அமெரிக்கா – கனடாவை உள்ளடக்கிய
வடமேற்கு பசுபிக்கில் (Pacific Northwest)
தற்சமயம் உருவாகியுள்ள இத்தகைய ஒரு” வெப்பக் குவிமாடமே” பல மில்லி யன் மக்களைப் பாதித்துள்ள அனல் அதிகரிப்புக்குக் காரணம் ஆகும்-என்று
வானிலை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்
அமெரிக்கா கண்டத்தில் மட்டுமன்றி
ஆசியா, ஐரோப்பாப் பகுதிகளிலும் “வெப்பக் குவிமாடம்” தோன்றலாம்.இது ஒரு புதிய வடிவ அனர்த்தம் என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
பூமி வெப்பம் அடைதலைத் தடுக்கின்ற
உலக நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் தானும் நகர்ந்தபாடில்லை. ஆனால் அதன் விளைவுகள் பெரும் அழிவுகளாக
மனிதனை மிக அருகில் நெருங்கி விட்டன.அமெரிக்காவின் புளோரிடாவில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்த பெரும் அனர்த்தத்துக்கான மூல காரணத்தை அறிவதில் தொழில்நுட்ப நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின் றனர்.அமெரிக்கா போன்ற நாடுகளில்
கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் மிக அரிதாகவே நடக்கின்றன.
பருவ நிலை மாற்றம், கடல்நீர் மட்டம் உயர்தல், பலமான சூறாவளிகள் போன்ற
இயற்கைக் காரணிகளும் கட்டடம் தகர்ந்ததற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்ற கோணத்திலும் அறிவிய லாளர்கள் சில சந்தேகங்களை முன்வைக்கின்றனர். மியாமி கரையோர த்தில் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
தரையின் மேலும் கீழும் அடர்த்தியான உப்பு நீர் அதிகரிப்பது கட்டடத்தின் அடித்தளத்தையும் உள் ஆதரவுக் கட்டமைப்புகளையும் பலவீனப்படுத்து
வதில் குறிப்பிடத்தக்களவு பங்கு வகித்
திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள்
நம்புகின்றனர்.அது உண்மையானால்
கடல் நீர்மட்டம் அதிகரிப்பது உலகெங்கும்
கடற்கரையோர நகரங்களின் அத்தி வாரங்களை ஆட்டங்காணச் செய்யலாம்.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
தற்போது செவ்வாயில் அமெரி்க்கா தனித்து இல்லை. போட்டிக்கு சீனாவும் கூடவே நிற்கிறது.
சீனா அதன் அறிவியல் சாதனைகளில் ஒரு மைல் கல்லாக தானியங்கி ரோபோ
விண்கலம் ஒன்றை செவ்வாய்க் கிரகத்
தில் தரையிறக்கி உள்ளது. அமெரிக்கா வைத் தொடர்ந்து செவ்வாயில் தண்ணீர்
மற்றும் உயிரியல் தடயங்களை ஆய்வு செய்யும் வசதிகளுடன் கூடிய நவீன
விண்கலத்தை செவ்வாயில் தரையிறக்
கிய இரண்டாவது நாடு சீனா ஆகும்.
“ஜுராங்” (Zhurong) எனப் பெயரிடப்பட்ட தானியங்கி ரோபோ விண்கலம் இன்று
சனிக்கிழமை சீன நேரப்படி காலையில் (1:10 am Paris time) செவ்வாய்க் கிரகத் தின் வடபகுதி மேற்பரப்பில் வெற்றிக ரமாகத் தரையிறங்கியது என்னும் தகவலை சீனாவின் தேசிய விண்வெளி
நிர்வாக மையம் (National Space Adminis tration-CNSA) உறுதிப்படுத்தி உள்ளது.
சீனப் புராணக் கதைகளில் “ஜுராங்”
என்பது நெருப்புக் கடவுளின் பெயரைக்
குறிக்கிறது. சுமார் இருநூறு கிலோ எடை கொண்ட – சக்கரங்களில் நகரக் கூடிய – அந்த ரோபோ ஊர்தி நாசாவின்
பேர்சிவரன்ஸ்(Perseverance) விண்கலத் தைப் போன்றே நவீன கமெராக்கள் உட்பட பல ஆய்வுக் கருவிகளையும் பரிசோதனை வசதிகளையும் கொண்டது ஆகும்.அதன் லேஸர் வசதிகள் பாறைகளை துளைத்து ஆய்வு செய்து
பண்டைய உயிர்ச் சுவடுகளைக் கண்டறிய உதவும். தரையில் தண்ணீர்,
பனிக்கட்டிப் படிமங்களையும் ஆய்வு
செய்யும்.
“ஜுராங்” ரோபோ ஊர்தி சீனாவின்
“தியான்வென் -1″(Tianwen-1) என்ற விண்
வெளி ஓடத்துடன் இணைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூலையில் விண்வெளி க்குச் செலுத்தப்பட்டது. “தியான்வென் -1”
விண்வெளி ஓடம் அதனை செவ்வாயின்
வளிமண்டலத்தில் தனியாகப் பிரித்து
தரையிறக்கியது.
இருநூறு மில்லியன் கிலோ மீற்றர்கள்
தொலைவில் உள்ள செவ்வாயில் இருந்து ரோபோ ஊர்தி தனது முதல்
சமிக்ஞையை பூமிக்கு அனுப்பிவைக்க
17 நிமிடங்கள் பிடித்தன என்று சீன
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாயில் விண்கலம் ஒன்றை ஆராய்ச்சிக்காக இறக்கியுள்ள முதல்
ஆசிய நாடு சீனா ஆகும். 2011 இல் அது ரஷ்யாவுடன் இணைந்து செயற்கை
கோள் ஒன்றை செவ்வாய்க்கு அனுப்ப முயன்றது. ஆனால் அது தோல்வியில்
முடிந்தது. எனினும் தொடர்ந்தும் பல முயற்சிகளை சீனா முன்னெடுத்து வந்தது.
சீனா மற்றும் அமெரிக்கா என்பவற்றுக்கு
முன்னராக ஐரோப்பிய நாடுகளின் விஞ்ஞானிகள் செவ்வாயில் விண்கலம் ஒன்றைத் தரையிறக்க ரஷ்யாவுடன் இணைந்து மேற்கொண்ட இரு முயற் சிகள் தோல்வி கண்டன.
விண்வெளி ஆராய்ச்சித் துறையில்
அமெரிக்கா, ஜரோப்பா, ரஷ்யா ஆகிய
தரப்புகளுடன் சேர்ந்து இயங்காமல்
தனக்கெனத் தனியான விண்வெளி
நிர்வாக நிலையம் ஒன்றைக் கட்டி யெழுப்புவதில் சீனா வெற்றி கண்டு ள்ளது.
சீனா விண்வெளியில் தனது மையம் ஒன்றை நிறுவும் திட்டத்தின் தொடக் கமாக அனுப்பிய கலங்களில் ஒன்றின் பெரிய பாகம் ஒன்று செயலிழந்து கடந்த
வாரம் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்தது
தெரிந்ததே.

குமாரதாஸன். பாரிஸ்
ரைட் சகோதரர்களின் சரித்திர
சாதனையை ஒத்த ஒரு நிகழ்வு
வேற்றுக்கிரகம் ஒன்றில் மனிதனது முதலாவது வான்பறப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருக் கிறது.அறிவியலால் சாதிக்கப்படுகின்ற அந்த உணர்வு பூர்வமான காட்சியைக் காண்பதற்காக முழு உலகமுமே காத்தி ருக்கிறது.
120 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ரைட் சகோதரர்கள்(Wilbur and Orville Wright) நிகழ்த்திய முதலாவது பறப்பு முயற்சிக்கு நிகரான ஒரு பெரும் அறிவியல் பாய்ச்சலாகப் பதிவாகப் போகின்ற சரித்திர நிகழ்வு அது.
மர்மங்கள் நிறைந்ததும் மனிதனது அடுத்த குடியேற்றம் (Martian colony) என்றும் நம்பப்படுகின்ற செவ்வாய்க் கோள், நாளாந்தம் வருகின்ற செய்திகள் ஊடாக மனிதனுக்கு மிகவும் நெருக்க மான அடுத்த வீடுபோல மாறி வருகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா – பிரான்ஸ் நாடுகளின் அறிவியலாளர் களது முயற்சியால் நாசா அனுப்பிய Perseverance விண்கலம் சிவப்புக் கிரகத்தின் பல முகங்களை உலகிற்கு அம்பலமாக்கி வருகிறது.படங்களாக, ஒலிப்பதிவுகளாக நாளாந்தம் தகவல்களை அது பூமிக்கு அனுப்பிக்
கொண்டிருக்கிறது.
ஏழு மாதங்கள் 292 மில்லியன் மைல்கள்
தூரம் பயணம் செய்த ரோபோ விண் கலம் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி
செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி யது.அதில் பொருத்தப்பட்டிருக்கின்ற அதி நவீன கமெராக்கள் அபூர்வமான பல காட்சிகளை அனுப்பி வருகின்றன. செவ்வாயில் தினசரி என்ன நடக்கிறது என்பதைக் கூட பூமியில் இருந்தவாறு அவதானிக்க முடிகின்றது.அங்கு பல அரிய செயல்களைப் புரிந்து வருகின்ற Perseverance ரோவர் விண்கலத்துடன் இணைக்கப்பட்ட சிறிய புத்திக் கூர்மை கொண்ட மினி ஹெலிக்கொப்ரரின் பெயர்தான் Ingenuity.
இரண்டு கிலோவுக்கு குறைந்த எடை.
ஆனால் அதன் நூண்ணறிவோ மிகை.
செவ்வாயின் அடர்த்தி குறைந்த வளி மண்டலத்தில் பறக்கப்போகின்ற முத
லாவது விமானம் அது. இதுவரை நாளும்
தாய்க் கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த
ஹெலி பரீட்சார்த்தப் பறப்பு முயற்சியில்
ஈடுபடுவதற்காக கடந்த 4ஆம் திகதி முதல் Perseverance விண்கலத்தை விட்டு விலகி செவ்வாயின் தரையில் தனியே கால்பதித்து நிற்கின்றது.
அது தனது இயக்கத்துக்கான சக்தியை இதுவரை ரோவர் கலத்தின் அணு மின் பற்றரிகளில் (nuclear-powered system) இருந்து பெற்றுவந்தது. இனிமேல் தனது சூரிய மின்கலம் மூலம் சேமிக்கப்படு கின்ற சக்தியில் (solar- power) தனித்து இயங்கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாயில் நிலவும் கடும் குளிர் காரணமாக ஹெலியின் பறப்பு முயற்சி ஏப்ரல் 8ஆம் திகதியில் இருந்து 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக நாசாவின் ஹெலிக்கொப்ரர் திட்டத்தின் தலைமைப் பொறியியலாளர் பொப் பலராம் (Bob Balaram) தெரிவித்திருக்கி றார்.காலநிலையும் தொழில் நுட்ப செய
ற்பாடுகளும் சரிவர அமைந்தால்
ஞாயிற்றுக்கிழமை ஹெலி பறப்பது
நிச்சயம்.
பூமியைப் போலன்றி செவ்வாயில் இரவு
நேரத்தில் கடும் குளிர் மைனஸ் -130 F
வரை குறைகிறது. Ingenuity ஹெலி அதன் சக்தி மூலம் முதலில் தன்னைத் தானே கடும் குளிரில் இருந்து காத்துக்
கொள்ளவேண்டும். அதற்கான வெப்பமூ
ட்டும் செயற்பாடுகள் சரிவர இயங்குகின்
றனவா என்பது தற்சமயம் பரிசோதிக்கப்
பட்டுவருகின்றது.அதன் கருவிகளும்
வெப்ப அளவீடுகளும் சரிபார்க்கப்பட்ட
பின் பரீட்சார்த்தப் பறப்பு தொடங்கும்.
கடும் குளிர் மிகுந்த இரவுகளை ஹெலி
தனித்து வெற்றிகரமாகக் கடந்துள்ளது.
அதுவே அதன் முதலாவது வெற்றி என்று நாசாவின் செவ்வாய்ப் பறப்புத் திட்டக் குழு தெரிவித்துள்ளது.
செவ்வாயில் ஜெஸீரோ கிரேட்டர் (Jezero Crater) எனப்படுகின்ற ஆற்றுப் பள்ளத் தாக்கு போன்ற பகுதியில் ஹெலி தனது முதல் பறப்பை மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப் பாதையின் வரைபடத்தை நாசா வெளியிட்டுள்ளது. சுமார் 30 செக்கன்கள் மட்டுமே நீடிக்க உள்ள பரீட்சார்த்தப் பறப்பின் போது ஹெலி சுமார் மூன்று மீற்றர்கள் உயரத்தில் பறக்கும். அதன் பிறகு அடுத்த முப்பது நாட்கள் அதன் பறப்பு உயரமும் தூரமும் அதிகரிக்கப் படும்.
பூமியைப் போலன்றி செவ்வாயின் வான் மண்டலம் காற்று அடர்த்தி குறைந்தது.
எனவே அங்கு பறப்பில் ஈடுபடுகின்ற
ஹெலியின் இரட்டைத் தகடு (twin blades) விசிறிகள் நிமிடத்துக்கு இரண்டாயிரத்து
400 தடவை (2,400 rotation) சுழலும் வேகம் கொண்டவை.
முழு உலகமும் ஆவலுடன் காத்திருக்கி ன்ற Ingenuity ஹெலியின் முதலாவது பறப்பை Perseverance விண்கலம் படம்
எடுத்து மறுநாள் பூமிக்கு அனுப்பிவைக்க
வுள்ளது. ஹெலி பறக்கும் காட்சியை
நேரலையில் காண்பதற்கான வசதிக ளுடன் உலகெங்கும் அறிவியலாளர்கள் காத்திருக்கிறார்கள்.
செவ்வாய்க்கிரகத்துக்கு மனிதர்கள் மேற்
கொள்ள ஆசைப்படுகின்ற எதிர்காலப் பயணங்களுக்கெல்லாம் ஒரு தொடக் கமாக இந்த நாட்கள் வரலாற்றில் எழுதப்
படவுள்ளன.
1903 ஆம் ஆண்டு ரைட் சகோதரர்கள் (Wright Brothers) என அறியப்பட்ட அமெரிக்க இரட்டையர்கள் வடக்கு கரோலினாவில் மேற்கொண்ட முதலா வது விமானப் பறப்பு முயற்சியே இன் றைக்கு உலகில் பறக்கின்ற எல்லா வானூர்திகளுக்குமான ஆரம்பமாக அமைந்தது. பூமியில் புரியப்பட்ட அந்த அறிவியல் சாதனையை நூற்றாண்டு களுக்குப் பிறகு மனிதன் பூமிக்கு வெளியே வேற்றுக் கிரகம் ஒன்றில் முதல்முதலாகச் சோதித்துப் பார்க்கின்ற நிகழ்வுதான் செவ்வாய்ப் பறப்பு.
ரைட் சகோதரர்கள் கரோலினாவில் தங்களது பறப்பு முயற்சிக்குப் பயன்படுத் திய முதலாவது விமானத்தின் உடற்பாக ங்களில் இருந்து எடுக்கப்பட்ட சிறிய முத் திரை அளவான ஒரு துண்டு (small piece) செவ்வாயில் தரையிறங்கி உள்ள புத்திக் கூர்மைக் ஹெலிக்கொப்ரரில் பொருத் தப்பட்டுள்ளது.
ரைட் சகோதரர்கள் தங்களது பறப்பு முயற்சிகளுக்குப் பயன்படுத்திய விமா னங்களைக் காட்சிப்படுத்தி பேணி வரு கின்ற ஓஹியோவில் உள்ள அருங்காட் சியகம் ஒன்று ‘Flyer 1’ எனப்படுகின்ற முதலாவது விமானத்தின் சிறிய பகுதி ஒன்றை ரைட் சகோதரர்களது குடும்ப வாரிசுகளினது சம்மதத்துடன் தங்களு க்கு வழங்கியது என்ற புதிய தகவலை நாசா வெளியிட்டிருக்கிறது.
மனித குலத்தின் இரண்டு பெரும் பறப்பு முயற்சிகளிடையிலான வரலாறு இதன் மூலம் தொடர்புபடுத்தப்படுகிறது.
*படங்கள் :ரைட் சகோதரர்களது முதல் விமானம் (1903)’நாசாவின் Ingenuity ஹெலி(2021).

குமாரதாஸன். பாரிஸ்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும், ‘ரோவர்’ என்ற ஆய்வு வாகனத்தை அனுப்பியுள்ளது, . கடந்தாண்டு, ஜூலை, 30ல், புளோரிடாவின் கேப் கேனவரல் விமானப்படை தளத்தில் இருந்து, இது அனுப்பி வைக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்தில், ஒரு செவ்வாய் கிரக ஆண்டு, அதாவது பூமியைப் பொறுத்தவரை, இரண்டு ஆண்டுகள், அங்கு சுற்றி, பல்வேறு ஆய்வுகளை, ரோவர் வாகனம் மேற்கொள்ள உள்ளது.
கடந்த 7 மாதங்களுக்கு முன் ஏவப்பட்ட விண்கலம்
மணிக்கு 12 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில்
293 மில்லியன் மைல்கள் பயணித்து
இன்று செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியை அடைந்துள்ளது.
இந்த கோளத்தில் இருந்து பாராசூட் மூலம் ரோவர் பிரிக்கப்பட்டு பின்னர், அதிலிருந்தும் பெர்சிவரன்ஸ் பிரிந்து ஜெசீரோ கிரேட்டர் (Jezero Crater) எனும் பள்ளத்தில் ஆய்வு நடத்துகிறது.
இந்த விண்கலத்தில் இருந்து தனியாகப் பிரிந்து சென்ற ஆய்வூர்தியான பெர்சிவரன்சை சுமந்து செல்லும் கோளவடிவான வாகனம் செவ்வாயின் வளிமண்டலத்தில் நுழைகிறது. இந்த கோளத்தில் இருந்து பாராசூட் மூலம் ரோவர் பிரிக்கப்பட்டு பின்னர், அதிலிருந்தும் பெர்சிவரன்ஸ் பிரிந்து ஜெசீரோ கிரேட்டர் (Jezero Crater) எனும் பள்ளத்தில் ஆய்வு நடத்துகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா, அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்ற ஆய்வை ரோவர் வாகனம் மேற்கொள்ள உள்ளது.
விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக, செவ்வாய் கோளில், விண்வெளி ஹெலிகாப்டரை நாசா பறக்கவிட உள்ளது.
ஹெலிகாப்டர் Ingenuity
காற்று இல்லாத மற்றும் அடர்த்தி அதிகம் கொண்ட செவ்வாய் கிரகத்தில் பறப்பதற்கு
1.8 கிலோகிராம் மட்டுமே எடை
4 கார்பன்-ஃபைபர் பிளேடுகள் மூலம் பறந்து செல்லும்
பூமியில் ஒரு ஹெலிகாப்டரின் இறக்கைகள் சுழல்வதைவிட 8 மடங்கு அதிகவேகத்தில் சுழலும்.
நிமிடத்திற்கு 2 ஆயிரத்து 400 முறை எதிரெதிர் திசைகளில் சுழலும்.
‘நாசா’வின் முயற்சியில், இந்தியாவில் பிறந்த பெண் விஞ்ஞானி, டாக்டர் சுவாதி மோகனின் பங்களிப்பு.
இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில், இந்தியாவில் பிறந்த, நாசா விஞ்ஞானி, டாக்டர் சுவேதா மோகனுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு வாகனத்தை அனுப்பும் இந்த திட்டம், 2013ல் துவங்கியதில் இருந்தே அதில் ஈடுபட்டு வந்தார் சுவாதி. ஜி.என். அண்ட் சி எனப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்தார். விண்வெளி ஆய்வில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். நாசாவின், சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.
ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை, இவர் உருவாக்கியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சுவாதி, தன், 1 வயதில், அமெரிக்காவுக்கு சென்றார். பள்ளியில் படிக்கும்போது, குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என நினைத்துள்ளார். அதே நேரத்தில், ‘ஸ்டார் டிரெக்’ என்ற, ‘டிவி’ நிகழ்ச்சியைப் பார்த்து, புதிய உலகங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்று செயல்திறன் வெற்றி பூரணமாகியது.
Dr. Swati Mohan: The Cosmic Genius
She is the proverbial rocket scientist. Swati Mohan, the Mars 2020 Guidance, Navigation, and Controls Operations Lead at Jet Propulsion Laboratory in Cape Canaveral is relieved. The team completed the successful launch of the Mars 2020 Perseverance on July 30, 2020 at NASA, and also finished its first manoeuvre in outer space on August 14. Swati’s work in being a part of designing and developing the landing tech, the Terrain Relative Navigation System for Perseverance is now on course to define Mars exploration, with four more manoeuvres and many turns scheduled before its much-anticipated
February 18, 2021 landing on the Red Planet.
– Giri Naga
முகநூளில் போலி செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த பத்திரிக்கையாளர்களை பணியமர்த்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டம்!!
சமூகவலைதள நிறுவனங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது போலி செய்திகள். வைரல் எனும் பெயரில் வேகமாக தகவல் மற்றும் செய்திகள் சென்று சேர்கிறதோ இல்லையோ, போலி செய்திகள் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகின்றன.
இதனால், ஏற்படும் பிரச்னைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போலி செய்திகள் பரவுவதை தடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் பத்திரிக்கையாளர்களை பணியமர்த்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
போலி செய்திகளைக் கட்டுப்படுத்தவும் செய்திகளின் தரத்தை உயர்த்தவும் இளம் தலைமுறை டிஜிட்டல் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்களைப் பணியமர்த்த முகநூல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரும் வெளியீட்டாளரான ஆக்ஸல் ஸ்பிரிங்கர் நிறுவனத்தின் CEO மதாய்ஸ் டோப்னெர் உடன் ஃபேஸ்புக் CEO மார்க் ஷூக்கர்பெர்க் தரமான செய்திகளைப் பயனாளர்களுக்கு வழங்குவது குறித்தான ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து மார்க் சக்கர்பெர்க் கூறுகையில், “ஃபேஸ்புக்கில் போலி கணக்குகள் அதிகம் உலவுகின்றன. சிலர் 700 மில்லியன் போலி கணக்குகள் இருக்கலாம் எனக் கூறுகிறார்கள். எனக்குத் தெரியவில்லை. ஆனால், இதை மிகப்பெரிய பிரச்னையாகக் கருதுகிறேன்.
புலனாய்வு ஊடகவியலாளர்கள், நிரூபர்கள் மற்றும் மிகப்பெரும் ஊடக நிறுவனங்களுக்கு நாம் மிகப்பெரும் பொருளாதார ஊதியம் வழங்கவேண்டும். அதற்காக இதை வணிக நோக்கோடு கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.
செய்தியாளர்கள், ப்ளாகர்கள், டிஜிட்டல் வெளியிட்டாளர்கள், பாரம்பரிய பதிப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோரை ஈர்க்கும் வகையில் ஃபேஸ்புக் ஒரு கட்டமைப்பை உருவாக்கும் என மார்க் சக்கர்பெர்க் விளக்கினார்.
]]>கடலுக்குள் பெரிய மலைத்தொடர்கள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்தது தான். ஆனால் பூமியின் மேற்பரப்பிலிருந்து பல நூறு கிலோ மீட்டர் கீழேயும் பெரிய மலைத்தொடர்கள் இருப்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
சீனாவிலுள்ள புவி அமைப்பு மற்றும் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதுவரை பூமியின் ஆழப்பகுதியில் நிகழ்ந்த பெரும் நில அதிர்வுகளின் பதிவுகளை வைத்து பல மலைத்தொடர்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
பூமியின் கடினமான மேல் ஓட்டுப் பகுதியிலிருந்து ஆழத்திற்குப் போகப்போக கடினம் குறைந்து பூமியின் உள் மையப்பகுதி இன்னும் தீக்குழம்பாகவே இருக்கிறது.
எனவே பூமியின் ஆழப்பகுதியில் பூகம்பம் ஏற்படும் போது அதன் அதிர்வலைகள் பூமியின் மையம் வரை பயணித்து மறுபக்கம் வரை சென்று மீண்டும் திரும்பும். ஆனால் சில பகுதிகளில் அதிர்வலைகள் பட்டுத் திரும்பாமல் இருப்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
உதாரணமாக 1994 இல் பொலிவியாவில் ரிக்டர் அளவுகோலில் 8.2 அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. அப்போது செய்த பதிவுகளின்படி பூமியின் மேல் பகுதிக்கும் மையப்பகுதிக்கும் இடையே சில பகுதிகளில் அதிர்வலைகளின் பதிவு வேறுபட்டு இருந்தது. இதை வைத்து பூமிக்கடியிலும் கடினமான மலைப்பகுதிகள் இருக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
]]>வாட்ஸாப் செயலியானது தனிநபர்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றே உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை விளம்பரங்கள், பிரச்சாரங்கள் போன்றவைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 1.5 பில்லியன் ஆக்டிவ் பயனாளர்கள் வாட்ஸாப்பினை பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் ஒரு மாதத்திற்கு 2 மில்லியன் வாடிக்கையாளர்களின் அக்கவுண்டுகளை வாட்ஸாப் நிறுவனமே ரத்து செய்து வருகிறதாம்.

இதற்கு காரணம் சில வாட்ஸாப் பயனாளர்களின் தவறான செயல்கள் தான். குறிப்பாக, ஒரு நாட்டின் இருந்துகொண்டு வேறு ஒரு நாட்டின் மொபைல் எண்ணை பயன்படுத்துவது, குறிப்பிட்ட ஒரு வாட்ஸாப் அக்கவுண்டினை விளம்பரம், பிரச்சாரம் சம்பந்தமாக பல்க் மெசேஜ்களை அனுப்ப மட்டும் பயன்படுத்துவது.
வாட்ஸாப் நிறுவனம் ஏற்கனவே ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் மெசேஜ் பார்வர்டு செய்வதை தடை செய்துள்ளது.
ஆனால் இதையும் மீறி ஒருசிலர் சில செயலிகளை பயன்படுத்தி பல்க் மெசேஜ்களை அனுப்பி வருவதாக வாட்ஸாப் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிலையில் இதைப்போன்ற செயல்பாடுகளை கண்காணித்து அப்படிப்பட்ட அக்கவுண்டுகளை ரத்து செய்யும் செயலில் வாட்ஸாப் நிறுவனம் இறங்கியுள்ளது.
இப்படி ரத்து செய்யும் எண்களைக் கொண்டு மீண்டும் வாட்ஸாப் அக்கவுண்டினை பயன்படுத்த முடியாது. ஆனால் வேறு எண்ணை பயன்படுத்த முடியும்.
வாட்ஸாப் செயலியானது தனிநபர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பாதுகாப்புடன் உரையாட மட்டுமே உருவாக்கப்பட்டது.
இதனை தொழில், அரசியல் ரீதியாகவும், வதந்திகளை பரபப்புவதற்கும் யாரும் பயன்படுத்திவிட கூடாது என்று வாட்ஸாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாட்ஸாப்பினை தவறாக பயன்படுத்துவோரை கண்கானிக்க பிரத்யேகமான தொழில்நுட்பத்தினை பயன்படுத்தவும் வாட்ஸாப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எனவே நீங்களும் உஷாராக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
]]>
பேஸ்புக் மெசேஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் அப் செயலிகளை ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு செயலிகளை ஒன்றிணைக்கும் பட்சத்தில் வட்ஸ் அப் பயன்படுத்துவோர் இன்ஸ்டாகிராம் மற்றும் மெசேஞ்சர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கான ஒப்புதலை ஃபேஸ்புக் இதுவரை வழங்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளளது.
குறுந்தகவல் அனுபவத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு வேகமான, எளிமையான, நம்பத்தகுந்த மற்றும் தனியுரிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை அதிகளவு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருவதால் இதன்மூலம் ஃபேஸ்புக் விளம்பர வருவாய் அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு சேவைகளை ஒன்றிணைப்பதன் மூலம் ஃபேஸ்புக் தனது போட்டி நிறுவனங்களான அப்பிள் ஐமெசேஜ் மற்றும் கூகுளின் மெசேஜிங் சேவைகளுக்கு போட்டியை மேலும் பலப்படுத்த முடியும் எனப்படுகிறது.
]]>
செயற்கையான முறையில் உயிர்க்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் புதிய சாதனைப் படைத்துள்ளனர்.
Technical University of Munich (TUM) இல் பணியாற்றும் Friedrich Simmel மற்றும் Aurore Dupin ஆகிய விஞ்ஞானிகள் இணைந்து செயற்கையான முறையில் உயிர்க்கலத்தினை உருவாக்கியுள்ளனர்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட கலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பாடலை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கலங்கள் கொழுப்பு இழையத்தினால் வேறுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கலங்கள் சிறிய இரசாயன சமிக்ஞை மூலம் அதிகளவு சிக்கல்தன்மை வாய்ந்த விளைவை ஏற்படுத்தக்கூடியன. அதாவது RNA உட்பட ஏனைய சில வகை புரதங்களை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கின்றன.
]]>