//anjeng

01. அரிதினும் அரிதாக பயன்படுத்தப்படும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆளுநர் முடிவெடுக்க தொடர்ந்து தாமதித்ததால் நீதிமன்றமே விடுவித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மனித உரிமை போராட்டத்தின் வெற்றியாக பார்க்கப்பட வேண்டிய வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு இது.
02. மாநில அரசுகளுக்கும் முன்விடுதலை வழங்குவதற்கான அதிகாரம் உள்ளது என்பதை அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம். கொலை வழக்கில் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் என்ற வாதத்தை முழுமையாக நிராகரித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
03. அமைச்சரவைக்கு தான் அதிகாரம்; அதை செயல்படுத்தும் கருவியே ஆளுநர் என்பது தீர்ப்பு உணர்த்தும் மற்றொரு செய்தி. மாநில உரிமை/கூட்டாட்சித் தத்துவத்தை காக்கும் அம்சங்களை கொண்டது இந்த தீர்ப்பு
04. ஆளுநர் முடிவெடுக்க காலவரம்பில்லை என்பதை ஏற்க இயலாது; ஆளுநர் தாமதித்தால் நீதிமன்றமே விடுவிக்கும் என்பது தீர்ப்பு உணர்த்து செய்தி. ஆளுநர் காரணமில்லாமல் மாதக்கணக்கில் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்தால் அதை நீதிமன்றம் பரிசீலிக்கும்; கேள்வி கேட்கும் என்பது மற்றொரு அம்சம்.
05. ஆளுநர்/ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கண்டனத்தை தெரிவித்திருப்பது மற்றொரு முக்கிய அம்சம். முடிவெடுக்காமல் ஆளுநர் செய்த காலதாமதத்தை இடித்துரைத்த நீதிமன்றம், நேரடியாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது. அதேபோல், ஒன்றிய அரசின் விநோத வாதங்களை முற்றுமுழுதாக நிராகரித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ச.ஜெ. ரவி
தமிழ்நாடு குன்னூரில் அனர்த்தம்

இந்தியப் படைகளது தலைமைத் தளபதி
(Chief of Defence Staff) ஜெனரல் பிபின் ராவத் (Bipin Rawat) அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்த ஹொலிக்
கொப்ரர் ஒன்று தமிழ்நாடு குன்னூரில்
விபத்துக்குள்ளாகியிருக்கிறது.அதில்
அவர், அவரது மனைவி உட்பட 12 பேர்
உயிரிழந்தனர் என அறிவிக்கப்படுகிறது.
தளபதியையும் வேறு சில படை உயர் அதிகாரிகளையும் ஏற்றிச் சென்ற விமானப்படையின் எம்ஐ-17(Mi-17V5) ரகக் ஹெலிக்கொப்ரரே தமிழ்நாட்டின் சூலூர் வான்படைத் தளத்தில் இருந்து
வெலிங்டனில் உள்ள இராணுவத் தளம்
ஒன்றுக்குச் செல்கையில் வழியில் விபத்
துக்குள்ளாகியிருக்கிறது.
ஹெலிக்கொப்ரர் திடீரெனத் தீப்பற்றி
அதிலிருந்து சிலர் எரிந்த நிலையில் கீழே வீழ்ந்ததைக் கண்டதாகக் கிராம வாசிகள் சிலர் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்
பதாக இந்திய விமானப்படை தெரிவித்
துள்ளது.
63 வயதான தளபதி ராவத் படைத்துறை
யில் 41 ஆண்டுகள் சேவையாற்றியவர் . இராணுவத்தின் தளபதியாக இருந்த அவர் 2019 இல் இந்தியாவின் முதலாவது படைகளது பிரதம தலைமை அதிகாரி
யாக (Chief of DefenceStaff) நியமிக்கப்பட்
டிருந்தார். 1978 ஆம் ஆண்டு இரண்டா
வது லெப்டினன்டாக இராணுவத்தில்
இணைந்த ராவத், ஜம்மு காஷ்மீர் மற்றும்
சீன எல்லைப்பகுதி படை நடவடிக்கைகள்
பலவற்றுக்குத் தலைமை வகித்தவர்.
இந்தியப் படைத் துறைக் கட்டமைப்பில்
முப் படைகளுக்கும் பொறுப்புவாய்ந்த
“படைகளின் பிரதம அதிகாரி” (Chief of Defence Staff) என்னும் பதவி முன்னர்
இருக்கவில்லை. பிரதமர் நரேந்திர
மோடியே அதனை உருவாக்கித் தனக்கு
மிக நெருக்கமானவரான ஜெனரல்
ராவத்தை அப் பதவியில் அமர்த்தியிருந்
தார்.
இறந்தவர்கள், காயமடைந்தவர்களது
உடல்கள் எரிந்து அடையாளம் தெரியாத
நிலையில் மீட்கப்பட்டதால் தளபதி ராவத்
தின் மரணத்தை அறிவிப்பதற்கு சில மணி நேர தாமதம் ஏற்பட்டது.நாட்டின் மூத்த படைத் தளகர்த்தர் விபத்தில் சிக்கியமை பற்றிய தகவலை
-இராணுவ நெறி முறைகளின் படி – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) முதலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவித்தார்.பின்னராக அவர் நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்கவி
ருந்தார்.அதற்கு முன்பாக அமைச்சர்
பிபின் ராவத்தின் இல்லத்துக்குச் சென்று
உறவினர்களை நேரில் சந்தித்தார்.
தளபதியின் மறைவுக்கு இந்தியத் தலை
வர்கள் அனுதாபம் தெரிவித்துவருகின்
றனர்.
குமாரதாஸன். பாரிஸ்.
அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும்.
மூத்த தமிழறிஞரும் ஆழ்ந்த பெரியாரியச் சிந்தனையாளருமான அய்யா தொ.பரமசிவன் அவர்களின் மறைவு தமிழ் ஆய்வுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். உறுதிமிக்க பெரியாரியவாதியான அவர் தற்செயலாக பெரியாரின் நினைவுநாளிலேயே காலமாகியிருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியில் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய நாட்களில் கல்லூரி ஆசிரியர் சங்கமாகிய மூட்டாவின் இணைச்செயலாளராகப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். மூட்டா இயக்க வரலாற்றின் மிக முக்கியமான போராட்டமான ஜாகிர் உசேன் கல்லூரிப்போராட்டத்தில் முன்னணிப்பாத்திரம் வகித்தவர். அவருடைய முனைவர் பட்ட ஆய்வேடாக அழகர்கோவில் பற்றிய ஆழமான ஆய்வு அப்போது வெளிவந்தது.
பின்னர், மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் பணி தொடர்ந்த காலத்தில் அவருடைய ”அறியப்படாத தமிழகம்” உள்ளிட்ட முக்கியமான நூல்கள் வெளிவந்தன. சின்னச்சின்னக் கட்டுரைகளில் இதுவரை நாம் அறிந்திராத தகவல்களுடன் நாம் பார்த்திராத புதிய கோணங்களில் அவருடைய சிந்தனை வீச்சைத் தமிழகம் கண்டது. அவருடைய ஆய்வுக்கட்டுரைகள் பலவும் மார்க்சிய ஆய்வுநெறியின்பாற்பட்டவையாக இருப்பதைக் காணலாம்.
நாட்டுப்புறத் தெய்வங்கள் மீது தமிழ்ச்சமூகத்தின் கவனத்தைத் திருப்பிய முன்னோடிகளில் ஒருவராகத் திகழும் தொ.ப. அவர்களின் பண்பாட்டு அசைவுகள், உரைகல், தெய்வம் என்பதோர், சமயங்களின் அரசியல் போன்ற நூல்வரிசை இந்துத்துவ அரசியலுக்கு எதிரான வலுவான வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டவை. அவரோடு உரையாடும் சில மணித்துளிகளில் அவர் வெளிப்படுத்தும் அறிவின் விசாலமும் அவரது நினைவாற்றலும் வியப்பளிப்பவை. நூல்களில் கற்றவற்றைத் தமிழ் நிலப்பரப்பில் வீதிகளில் நின்று இதோ பாருங்கள் இதுதான் சங்க இலக்கியம் சொன்ன சேதி என்று ஓர் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டே இருந்தவர். தொல்லியல் ஆய்வுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். தமிழ் வைணவம், தமிழ்ச்சமணம் எவ்விதம் வட இந்திய மரபுகளிலிருந்து வேறுபட்டது என்பதை கண்டு சொன்னவர்.
பின்னர், அவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். பேராசிரியராகவும் ஒரு நிர்வாகியாகவும் அவர் நேர்மையின் இலக்கணமாக வாழ்ந்தார் என்று இன்றுவரை அவரது சக பேராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்பால் தோழமைப்பூர்வமான உறவை தன் இறுதிநாள்வரை கொண்டிருந்தவர். செம்மலர், புதுவிசை உள்ளிட்ட முற்போக்கு இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியவர். நெல்லையில் ஒவ்வோராண்டும் நடைபெறும் கலை இலக்கிய இரவுகளில் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார். தமுஎகசவின் பல பயிலரங்குகளில், நிகழ்வுகளில் பங்கேற்று ஆக்கப்பூர்வமான பங்களிப்பைச் செலுத்தியவர்.
சுற்றுச்சூழல் இயக்கங்களோடு தன்னை மனப்பூர்வமாக இணைத்துக் கொண்டவர்.
பணத்துக்கும் புகழுக்கும் ஒருபோதும் மயங்காத, எதற்காகவும் தன் கருத்துக்களில் சமரசம் செய்துகொள்ளாத மிகப்பெரும் தமிழறிஞராக இறுதிவரை எளிய வாழ்வையே வாழ்ந்தவர். நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைத்துவப்படுத்தும் வரலாற்று மோசடிகள் அரசின் துணையோடு விஷமெனப் பரவும் இக்காலத்தில் வரலாற்றின் உண்மைத்தன்மையை துணிவுடன் எடுத்துரைக்க முன்னிலும் கூடுதலாய் தேவைப்பட்ட முனைவர் தொ.ப. காலமாகியுள்ளார். அவரது ஆய்வுநூல்களையும் அறிவார்ந்தச் செயல்பாடுகளையும் பரவலாக்குவதே அவருக்குச் செலுத்தப்படும் பொருத்தமான அஞ்சலியாக அமையுமென தமுஎகச கருதுகிறது. மதிக்கத்தக்க பங்களிப்பினைச் செய்து காலமாகிற தமிழறிஞர்களையும் கலை இலக்கிய ஆளுமைகளையும் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் நடவடிக்கையை இவரிலிருந்தேனும் தொடங்க வேண்டுமென தமிழக அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.
அவருடைய மறைவால் துயருற்றிருக்கும் அவரது இணையர், மகன், மகள், பேரக்குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் தமுஎகச தன் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
அன்புடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொறுப்பு)
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்
]]>
தடம் புரண்ட ரயிலை காட்சிப்படுத்திய செய்தியாளரின் வாயில் சிறுநீர் அடித்த போலீசார்!
உத்திரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், ரயில் தடம் புரண்டதை காட்சிப்படுத்திய அமித் ஷர்மா என்ற பத்திரிகையாளரை இந்திய ரயில்வே போலீசார் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“ அவர்கள் போலீஸ் உடையில் இல்லை. அவர்களில் ஒருவர் என் கேமராவை தள்ளிவிட்டார், அதனை நான் எடுக்க முயன்ற போது என்னை கடுமையாக தாக்கினர். மேலும் என் வாயில் சிறுநீர் அடித்தனர்” என்று வேதனை தெரிவித்தார்.
அமித்ஷா தாக்கப்பட்டதை கண்டித்து சக பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக, ரயில் போலீசார் ராகேஷ் குமார் மற்றும் கான்ஸ்டெபிள் சஞ்சய் பவார் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
]]>
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள கே.பி சோக் பேருந்து நிலையம் உள்ள பகுதியில் CRPF வீரர்கள் சென்று கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த பயங்கரவாதிகள் அவர்கள் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
மேலும் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் அல்-உமர் முஜாயிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 5 CRPF வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 5 CRPF வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக CRPF வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தியதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
]]>ஏழு பேரின் விடுதலையில் இனியும் எங்களை ஏமாற்ற வேண்டாமென பேரறிவாளனின் தாயான அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 28 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
ஏழு பேர் விடுதலையில் மாநில உரிமையை பயன்படுத்த முடியாத ஒரு மாநிலத்தில் நான் வாழ்ந்து வருவது மிகவும் கவலையளிக்கின்றது.
மேலும், 28 ஆண்டுகளாக எனது மகன் மட்டுமல்ல எங்கள் குடும்பமும் தண்டனையை அனுபவித்து வருகின்றது.
இதேவேளை விடுதலை செய்ய முன்வராத யாரையும் தவறாக பேசக்கூடாதென பேரறிவாளன் என்னிடம் கூறியுள்ளார்.
இவ்வாறு எந்ததொரு தவறும் புரியாத எனது மகன் பல வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருவது பெரும் வேதனையை தருகின்றது.
தேர்தல் முடிந்தும் கூட 7 பேரை விடுவிக்காமல் அரசு அமைதியாக இருக்கின்றது.
இருப்பினும் எனது மகனை இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளேன்.
ஆனால் நான் அமைதியாக இருக்க முடியாது. அதிகமாகவே ஏமாற்றமடைந்து விட்டேன்.
இனியும் எங்களை ஏமாற்றாமல் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அற்புதம்மாள் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.
]]>
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் 4 நாள்களுக்கு மேல் கிணற்றில் சிக்கியிருந்த 2 வயதுக் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
அதிகாரிகளின் தாமதமான செயல்பாடே குழந்தையின் இறப்புக்கு காரணம் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது கிணற்றுக்குள் விழுந்தது. அந்த குழந்தை இன்று காலை 5 மணியவிலேயே வெளியே கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கின்றன.
]]>இந்தியாவின் பெங்களூரில் வைத்து 35 வயதான இலங்கை பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த ஹங்கேரிக்கான விமானத்தில் ஏற முயன்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது இவர் இந்திய கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருந்துள்ளதுடன், தமிழரான இவர் இலங்கையின் மேல் மாகாணத்தை சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
2012ஆம் ஆண்டு மதுரைக்கு சென்ற அவர் அங்கேயே தங்கிவிட்டதாகவும், 2019இல் பெங்களூருக்கு சென்ற அவர் அங்கு வைத்தே இந்திய கடவுச்சீட்டை பெற்றுள்ளார் எனவும் தெரியவருகிறது.
]]>
ஜம்மு- காஷ்மீர், சோபியான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவரை படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
சோபியான் மாவட்டதில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திடீர் தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
அதில் இரண்டு பயங்கரவாதிகளை படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இந்நிலையில் தப்பிச் சென்ற ஏனைய பயங்கரவாதிகளை தேடும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.
]]>காவிரி- கோதாவரி ஆகிய நதிநீர் இணைப்பு திட்டம் மக்களை ஏமாற்றும் ஒரு திட்டமென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த வைகோ இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 8 வழிச்சாலை திட்டத்துக்காக விவசாயிகள், தங்களது நிலத்தை வழங்குவதற்கு ஒருபோதும் முன்வரமாட்டார்களெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நாமும் அதிராம்பட்டினத்தில் நடத்தப்படவுள்ள மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்க தீர்மானித்துள்ளதாகவும் வைகோ கூறியுள்ளார்.
சென்னை- சேலம் இடையிலான 8 வழிழச்சாலை திட்டம், நிச்சயம் நிறைவேற்றப்படுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
]]>