//anjeng உலக செய்திகள் – Mukadu https://www.mukadu.com Sat, 27 Jul 2024 19:43:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.8 சில்வர் குதிரையில் இளம் பெண்ணின் செய்ன் நதிச் சவாரி! https://www.mukadu.com/2024/07/27/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/ Sat, 27 Jul 2024 19:43:20 +0000 https://www.mukadu.com/?p=26358

நேற்றைய ஒலிம்பிக் தொடக்க விழாவில் மாஜாஜாலம் போலத் தோன்றி ரசிகர்களின் மனதைத் தொட்ட காட்சிகளில் சில்வர் குதிரையின் செய்ன் நதிச் சவாரியும் ஒன்று.

தொடக்க விழா நிகழ்ச்சி நிரலில் “ஒற்றுமை” (Solidarité) என்ற தலைப்பின் கீழான நிகழ்வுகளில் ஒன்றாக இந்தக் குதிரைச் சவாரி நடந்தது.

செய்ன் நதியில் ஒஸ்ரலிஸ் பாலத்தடியில் ஆரம்பித்து ஈபிள் கோபுரத்தின் அடிவாரம் வரை- சுமார் ஆறு கிலோமீற்றர்கள் தூரத்துக்குப் – பத்து நிமிட நேரம் நீடித்த குதிரைச் சவாரியை லட்சக்கணக்கான ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒலிம்பிக் கொடியைப் போர்த்தபடி வெள்ளி ஆடை அணிந்த இளம் பெண் ஒருவர் ஜொலிக்கும் வெள்ளி நிறக் குதிரையைச் செலுத்திச் செல்லும் அற்புதக் காட்சியாக அதன் முழு அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி சொல்லும் தகவல் என்ன..?

ஒலிம்பிக் போட்டிகளின் ஆன்மீகமாகிய நட்பையும் ஒற்றுமையையும் உலகெங்கும் பரப்புவதே குதிரைச் சவாரியின் நோக்கம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

குதிரை செய்ன் நதியின் மேம்பாலங்களைக் கடந்து சென்ற போது பாலங்களில் புறாவின் இறக்கைகள் விரிவது போன்ற ஒளி அலங்காரங்கள் தோன்றின.

பாரிஸ் ஒலிம்பிக் விழாவின் கலைத்துவ இயக்குநர் தோமா ஜொலியின் (Thomas Jolly) கூற்றுப்படி, இளம்பெண்ணின் குதிரைப் பயணம் புராணக் கதைகளில் வருகின்ற செக்குவானா (Sequana) என்ற பெண் தெய்வத்தின் அவதாரமாகக் குறிப்பிடப்படுகிறது.”நதியின் தெய்வம்”, “எதிர்ப்பின் அடையாளம்” போன்ற அர்த்தங்களிலும் இதனைப் பார்க்கலாம் என்று அவர் கூறுகிறார்.

நதிகள் தொடர்பான புராணக் கதைகளில் அதன் ஊற்றிடங்களில் காணப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற இளம் பெண் தெய்வமே “செக்குவான” எனப்படுகிறது. தண்ணீர் ஊற்றின் மனித வடிவமாகக் குறிப்பிடப்படுகின்ற

இந்தப் பெண்ணே செய்ன் நதியில் குதிரை மேலே தோன்றினார்.

சவாரி முடிவடைந்ததும் குதிரையில் வந்த பெண்ணே ஒலிம்பிக் கொடியை

அதனை ஏற்றிய இடத்துக்கு எடுத்தச் செல்வது போன்று அதன் தொடரான காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

ரோபோ தொழில் நுட்பத்தின் அடிப்படையில் குதிரையின் அசல் ஓட்டத்தின் அசைவுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் விதமாக சுமார் ஓராண்டுகால முயற்சியில் இந்த உலோகக் குதிரை உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் நொந்த்(Nantes) நகரில் அமைந்துள்ள Blam workshop என்ற தொழில்நுட்பப் பட்டறையிலேயே அது வடிவமைக்கப்பட்டது என்ற கூடுதல் தகவல்களும் வெளியாகியுள்ளன.

நன்றி குமாரதாஸன் பாரீஸ்

]]>
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினால் புதிய இலக்குகளைத் தாக்குவோம்! https://www.mukadu.com/2022/06/05/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%8f%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0/ Sun, 05 Jun 2022 20:12:56 +0000 http://www.mukadu.com/?p=26285 நீண்ட தூர ஏவுகணைகளை
உக்ரைனுக்கு வழங்கினால்
புதிய இலக்குகளைத் தாக்குவோம்!

மேற்குலகிற்குப் புடின் எச்சரிக்கை

மேற்கு நாடுகள் நீண்ட தூரம் சென்று தாக்குகின்ற ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினால் ரஷ்யா புதிய இலக்குகள் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்.

அரசுத் தொலைக்காட்சிக்கு வழங்கிய
செவ்வியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். போர் ஆரம்பித்த பிறகு அவர் இவ்வாறு நேரடியான அச்சுறுத்தலை விடுப்பது இதுவே முதல் முறை ஆகும். கடந்த சில வாரகால இடைவெளிக்குப் பின்னர் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஞாயிறு காலை ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது.அந்தத் தாக்குதல் நடந்து சில மணி நேரத்துக்குப் பின்னரே புடினின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

“மேற்குலகின் அளவுக்கு அதிகமான
ஆயுத விநியோகங்கள் என்னைப் பொறுத்தவரை இந்த ஆயுத மோதல்
இன்னும் நீண்டுசெல்வதற்கே உதவப்
போகின்றன. நீண்ட தூர ஏவுகணைகள்
வழங்கப்பட்டால் அதற்குப் பொருத்தமான முடிவுகளை நாங்கள்
எடுப்போம். எங்களிடம் தாராளமாக உள்ள அவை போன்ற ஆயுதங்களைப்
பயன்படுத்துவோம். இதுவரை தாக்காத
இலக்குகளைத் தாக்குவோம் “-என்று
புடின் அந்தச் செவ்வியில் தெரிவித்துள்
ளார்.

” ஹிமார்ஸ்”என்கின்ற எம் 142 நடுத்தரத்
தொலைவு ஆட்டிலறி ஏவுகணைத் தொகுதிகளை(M142 High Mobility Artillery Rocket System – Himars) உக்ரைனுக்கு
வழங்குவதாக சில தினங்களுக்கு முன்பு
அமெரிக்கா அறிவித்திருந்தது. உக்ரை
னுக்கு இதுவரை மேற்கு நாடுகள் அள்ளி வழங்கிய ஆட்டிலறிப் பீரங்கிகளிலேயே
அதிக தூரம் சென்று தாக்கவல்ல ஏவாயு
தம் இதுவாகும். கிழக்கு டொன்பாஸ்
பிராந்தியத்தில் ரஷ்யாவின் முன்னேற்
றத்தைத் தடுக்க வேண்டுமானால் இத்
தகைய தொலைதூர ஏவுகணைகள் அவசியமாகும் என்பதை உக்ரைன் அரசு
தொடர்ந்து வலியுறுத்திக் கேட்டுவந்தது.
அதனை ஏற்றுக் கொண்டு அமெரிக்கா தற்சமயம் ரஷ்யாவின் எல்லைகளுக்குள் தாக்குவதற்குப் பயன்படுத்தக் கூடாது என்ற முன் நிபந்தனையுடன் இந்த நவீன ஆட்டிலறி ரொக்கெட்டுகளை
உக்ரைனுக்கு வழங்குகிறது.

உக்ரைன் படைகளால் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஆட்டிலறி ஏவுகணைகளை விட அதிகமாக 70 கிலோ மீற்றர்கள் (45மைல்கள்) தொலை
வில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கக் கூடிய – வழிகாட்டல்களின் கீழ் இயங்கவல்ல –
ஏவுகணைகளைக் கொண்டது ஹிமார்ஸ்
ஆட்டிலறித் தொகுதி.

டொன்பாஸ் பிராந்தியத்தில் இடம்பெற்று
வருகின்ற தீவிர யுத்தத்தில் இந்தப்
பீரங்கிகள் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

(படம் :ஹிமார்ஸ் என்கின்ற எம் 142 நடுத்தரத் தொலைவு ஆட்டிலறி ஏவுகணைத் தொகுதி)


-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

]]>
மீண்டும் வென்றார் மக்ரோன்! https://www.mukadu.com/2022/04/24/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9/ Sun, 24 Apr 2022 18:29:46 +0000 http://www.mukadu.com/?p=26277 மீண்டும் வென்றார் மக்ரோன்!


ஈபிள் கோபுரம் அருகே சனத் திரள்!
தீவிர பாதுகாப்புடன் வெற்றி உரை

44 வயதான எமானுவல் மக்ரோன்
பிரான்ஸின் அதிபராக இரண்டாவது
முறை வெற்றிவாகை சூடியுள்ளார்.
இரவு எட்டு மணிக்கு வெளியாகிய
உத்தேச மதிப்பீடுகளின் படி இரண்டா
வது சுற்றில் அவர் 57.6%வீத வாக்குக
ளால் வென்றிருக்கிறார்.மரின் லூ பென்
னுக்கு 42.4%வீத வாக்குகள் கிடைத்துள்
ளன. மக்ரோன் 2017 தேர்தலில் பெற்ற
66.10 வீத வாக்குகளை விட 8.5 வீதம்
குறைவான வாக்குகளையே வென்றி
ருக்கிறார். பதவியில் இருக்கின்ற அதி
பர் ஒருவர் இரண்டாவது தடவையாகவும்
வெற்றி பெறுவது கடந்த இருபது ஆண்டு
களின் பின்னர் இது முதல் முறை ஆகும்.

முழுமையான வாக்கு முடிவுகள் எதிர்
பார்க்கப்படுகின்றன.மக்ரோனின் வெற்றி உரைக்காக அவரது ஆதரவாளர்
கள் ஈபிள் கோபுரப் பகுதியில் திரளத்
தொடங்கியுள்ளனர். அங்கு பலத்த பாது
காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்
றன.

Le Touquet (Pas-de-Calais) இல் விடுமுறை
கால இல்லத்தில் தங்கியிருந்த மக்ரோன்
அங்கிருந்து இன்றிரவு எலிஸே மாளிகை
திரும்பினார். பின்னர் வெற்றி உரையை
நிகழ்த்துவதற்காக அவர் ஈபிள் கோபுரம்
அமைந்துள்ள Champ-de-Mars பகுதிக்குப் புறப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படு
கிறது.

?வாக்களிக்காதோர் வீதம்
1969 க்குப் பின் மிக உச்சம்!

இறுதிச் சுற்றில் வாக்களிக்காதோர்
எண்ணிக்கை 26.31%வீதமாக அதிகரித்
துள்ளது. தேர்தல் வரலாற்றில் 1969 ஆம்
ஆண்டுக்குப் பின் இது மிக உச்ச எண்
ணிக்கை என்று செய்திகள் தெரிவிக்
கின்றன.

கடந்த தேர்தல்களில் வாக்களிக்காதோர்
வீதம் ஆண்டு ரீதியாக வருமாறு :

*15.68% – 1965
*31.15% – 1969
*12.7% – 1974
*14.15% – 1981
*15.94% – 1988
*20.34% – 1995
*20.29% – 2002
*16.03% – 2007
*19.65% – 2012
*25.44% – 2017
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

]]>
பாரிஸ் நொர்த் டாம் தேவாலயத்தின் அடியில் மீட்கப்பட்ட கல்லுப் பேழை! https://www.mukadu.com/2022/04/15/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2/ Fri, 15 Apr 2022 22:41:57 +0000 http://www.mukadu.com/?p=26273 பாரிஸ் நொர்த் டாம் தேவாலயத்தின் அடியில் மீட்கப்பட்ட கல்லுப் பேழை!
திறந்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு

பாரிஸ் நொர்த் டாம் மாதா கோவிலின் நிலத்தடியில் இருந்து புராதன கற்பேழை
ஒன்று அண்மையில் மீட்கப்பட்டிருக்கி
றது. 2019 இல் தீக்கிரையாகிய மாதா தேவாலயத்தின் கூரை உட்பட அதன்
கட்டுமானங்களைப் புனரமைக்கும் பணி
கள் தற்சமயம் அங்கு நடைபெற்று வரு
கின்றன. அதன் போது தேவாலயத்தின்
உள்ளே ஒரு பகுதியில் தரை தோண்டப்
பட்ட சமயம் சுமார் இருபது மீற்றர் ஆழத்
தில் கல்லினாலான புராதன சவப்பேழை
(sarcophagus) ஒன்று கண்டுபிடிக்கப்பட்
டது.

மனித உருவிலான – நன்கு பாதுகாக்கப்
பட்ட-அந்த மர்மப் பேழை 14 ஆம் நூற்றா
ண்டைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும்
என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்
கள் நம்புகின்றனர்.அவர்கள் பேழையை
திறக்காமலேயே அதன் உள்ளே இருக்கி
ன்ற பொருள்களை என்டோஸ்கோபிக் கமரா (endoscopic camera) மூலம் ஆய்வு
செய்துள்ளனர். எலும்புக் கூட்டின் மேற்
பகுதி, இலைகளாலான தலையணை,
துணி மற்றும் சில பொருள்களை உள்ளே
அடையாளம் கண்டுள்ளனர்.பாதுகாப்
பான இடம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்
கின்ற அந்தப் பேழை விரைவில் தென் மேற்கு நகரமாகிய துளுசில் (Toulouse)
அமைந்துள்ள தேசிய தடயவியல் மருத்
துவ நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்
பட்டுத் திறந்து பரிசோதிக்கப்படவிருப்ப
தாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருடையது என்ற அடையாளம் தெரி
யாத அந்த மனித எச்சம் எவ்வாறு, ஏன்
நொர்த் டாம் தேவாலயத்தின் அமைவி
டத்தின் கீழ் புதைக்கப்பட்டது? கடந்த பல
நூற்றாண்டுகளாக அது அங்கேயே இரு
ந்துவந்ததா,அல்லது அங்கு மீளப் புதைக்
கப்பட்டதா?

அதன் அடக்க வடிவமைப்பு முறை, அதன்
காலம், இறந்தவரது சமூக நிலை என்பன
சொல்கின்ற செய்தி என்னவாக இருக்
கும்?

இவை போன்ற பல கேள்விகளை எழுப்
கியிருக்கின்ற அந்தக் கற்பேழை தொடர்
பான புதிர்களை அறிவதற்காக பிரான்
ஸின் கத்தோலிக்கர்கள் உட்பட நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்
ளனர்.

பாரிஸின் உலகப் புகழ் பெற்ற சின்னங்
களில் ஒன்றாகிய – 12 ஆம் நூற்றாண்
டைச் சேர்ந்த (Gothic)-நொர்த் டாம் மாதா தேவாலயத்தின் உயர்ந்த மரக் கூம்புக் கூரை உட்பட அதன் பெரும் பகுதிகள் தீயினால் எரிந்து அழிவுண்டமை தெரிந்
ததே.

— குமாரதாஸன்.

]]>
மக்ரோன் – மரின் லூ பென் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவு! https://www.mukadu.com/2022/04/10/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b2%e0%af%82-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3/ Sun, 10 Apr 2022 18:46:03 +0000 http://www.mukadu.com/?p=26267 ? மக்ரோன் – ? மரின் லூ பென்
இரண்டாவது சுற்றுக்குத் தெரிவு!

அதிபர் தேர்தலின் முதற் சுற்று முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன. அதிபர் மக்ரோன் 28.05 சத வீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றிருக்கிறார். அடுத்த நிலையில் மரின் லூ பென் 24.02 வீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்துக்கு
வந்துள்ளார். இருவரும் ஏப்ரல் 24 ஆம்
திகதி நடைபெறுகின்ற இரண்டாவது
சுற்றில் வாக்காளர்களை எதிர்கொள்ள
வுள்ளனர்.

தீவிர இடது சாரி ஜோன் லூக் மெலன்
சோன் குறிப்பிடக் கூடிய வெற்றியாக
20.02 வீத வாக்குகளைப் பெற்று மூன்
றாவது இடத்தை அடைந்துள்ளார்.

புதிதாக அரசியலில் பிரவேசித்த தீவிர
வலது சாரி எரிக் செமூர் 7.01 வீதமான
வாக்குகளை மட்டுமே வெல்ல முடிந்துள்
ளது. அதேசமயம் வலதுசாரி ரிப்பப்ளிக்
கன் வேட்பாளர் வலெரி பெக்ரெஸ் அம்
மையார் 5. 01 வீத வாக்குகளுடன் ஐந்தா வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

12 வேட்பாளர்களும் பெற்ற வாக்கு வீத ங்கள் வருமாறு :

?Emmanuel Macron: 28.5%
?Marine Le Pen: 24.2%
?Jean-Luc Melenchon: 20.2%
?Eric Zemmour: 7.1%
?Valerie Pécresse: 5.1%
?Yannick Jadot: 4.4%
?John Lassalle: 3%
?Fabien Roussel: 2.4%
?Anne Hidalgo: 1.9%
?Nicolas Dupont-Aignan: 1.8%
?Philippe Poutou: 0.8%
?Nathalie Arthaud: 0.6%
குமாரதாஸன்.

]]>
பிரிட்டிஷ் பிரதமர் ஜோன்சன் கீவ் நகருக்குத் திடீர் விஜயம்! https://www.mukadu.com/2022/04/09/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a/ Sat, 09 Apr 2022 21:20:24 +0000 http://www.mukadu.com/?p=26263 பிரிட்டிஷ் பிரதமர் ஜோன்சன்
கீவ் நகருக்குத் திடீர் விஜயம்!


உக்ரைனுக்கு 120 கவச வாகனங்கள்
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உதவி

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்
சனிக்கிழமை உக்ரைன் தலைநகர் கீவு
க்குத் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்
டார். அதன்போது உக்ரைன் படைகளுக்கு
120 இராணுவக் கவச வாகனங்களையும்
புதிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தொகு
தியையும் வழங்கினார் என்று “நம்பர் 10” பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் 100 மில்லியன் பவுண்ட்ஸ் பெறு
மதியான இராணுவ உதவிகளும் அறிவி
க்கப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 24 இல் ரஷ்யா போரைத்
தொடக்கிய பிறகு கீவ் நகருக்குச் சென்று
அதிபர் ஷெலன்ஸ்கியை நேரில் சந்திக்
கின்ற வல்லரசுத் தலைவர் ஜோன்சன்
என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கீவ்
நகர வீதிகளில் நடந்து பார்வையிடும் படங்களைச் செய்தி ஊடகங்கள் வெளி
யிட்டுள்ளன. அங்கு வைத்து அதிபர்
ஷெலன்ஸ்கியை “சிங்கம்” என்று புகழ்ந்
தார் ஜோன்சன்.

“உக்ரைன் கணிப்புகளை மீறி, ரஷ்யப் படைகளைக் கீவ் நகரின் வாயில்களில் இருந்து பின்னுக்குத் தள்ளி, 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய சாதனையை அடைந்துள்ளது. இந்தப் போரில் இங்கி
லாந்து அவர்களுடன் உறுதியாக நிற்கி
றது என்பதை நான் இன்று தெளிவு
படுத்தியுள்ளேன். நாங்கள் நீண்ட காலத்திற்கு இவ்வாறு ஐக்கியமாய் இருப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.

உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் கவச வாகனங்களை ஏற்கனவே விநியோகித்
துள்ளன. ஆனால் பிரிட்டன் அதன் நவீன ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதியை (Harpoon anti-ship missile systems) வழங்குகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் நேட்டோ நாடு ஒன்று
இதுபோன்ற ஆயுத தளபாட உதவியை
வழங்குவது இதுவே முதல் முறை ஆகும்.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் போரில்
தப்பி வெளியேறிக் கொண்டிருந்த நூற்
றுக்கணக்கான மக்களால் நிறைந்திருந்த
ரயில் நிலையம் ஒன்றை ரஷ்யப்படைக
ளின் ஏவுகணைகள் தாக்கியதில் ஐம்பது
க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவத்
துக்குப் பின்னரே பிரிட்டனின் இந்தப் புதிய இராணுவ உதவிகள் அறிவிக்கப்
பட்டுள்ளன.

ஜரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன்(European Commission President Ursula von der Leyen)
வெள்ளிக்கிழமை கீவ் நகருக்குச் சென்
றிருந்தார்.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

]]>
தெற்கு ஒடெசா துறைமுக நகர் மீது புதிதாகத் தாக்குதல்கள் ஆரம்பம்!! https://www.mukadu.com/2022/04/03/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%9f%e0%af%86%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0/ Sun, 03 Apr 2022 11:48:06 +0000 http://www.mukadu.com/?p=26255 தலைநகர் கீவ் பகுதிகளிலிருந்து
ரஷ்யப் படைகள் முற்றாக வாபஸ்
புறநகரங்களில் பேரழிவுக் காட்சி

தெற்கு ஒடெசா துறைமுக நகர் மீது
புதிதாகத் தாக்குதல்கள் ஆரம்பம்!!

உக்ரைன் தலைநகர் அமைந்துள்ள
பிராந்தியம் அடங்கலாக வட பகுதியில் இருந்து ரஷ்யா தனது படைகளை மீள
அழைத்துள்ளது.கீவ் புறநகர் பகுதிகளை முற்றுகையிட்டிருந்த படைகள் அங்கிரு
ந்து வெளியேறியதை அடுத்துப் பொது
மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத்
தொடங்கியுள்ளனர். புற நகரத் தெருக்
கள் எங்கும் அழிவுண்ட பிரதேசங்களாக
காட்சியளிப்பதை அங்குள்ள செய்தியா
ளர்கள் விரித்துள்ளனர். ரஷ்யப்படைக
ளின் சேதமடைந்த டாங்கிகளும் வாகன
ங்களும் வீதிகளில் வரிசையில் கிடக்கின்
றன. அங்காங்கே மனித சடலங்களும்
தரையில் கிடப்பதை படங்கள் காட்டுகின்
றன. பூட்சா (Boutcha) என்ற புறநகர வீதி
ஒன்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில்
சடலங்கள் வரிசையில் கிடப்பது கண்டுபி
டிக்கப்பட்டுள்ளது.ரஷ்யப்படைகள் புரிந்த
மிலேச்சத்தனமான படுகொலை அது என
உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.

தலைநகர் கீவைக் கைப்பற்றுகின்ற
முற்றுகை ரஷ்யப் படைகளுக்குப் பலத்த
இழப்புக்களுடன் கூடிய பின்னடைவை
ஏற்படுத்தி விட்டுள்ளது என்று போரியல்
நிபுணர்கள் கூறுகின்றனர். உக்ரைன் படைகளது “சூட்டுவலு” மேற்குலக நாடு
கள் வழங்கிய ஆயுதங்களால் மிக உச்ச அளவில் இருந்தமையே ரஷ்யாவுக்குப் பலத்த இழப்புகளைக் கொடுத்துள்ளது.

வடக்கில் இருந்து திருப்பி அழைத்த தனது படைகளைக் கொண்டு தெற்கிலும்
கிழக்கிலும் தாக்குதல்களைத் தீவிரமாக்
குவதற்கு மொஸ்கோ முயற்சித்து வருகி
றது.போரின் 36 ஆவது நாளான இன்று
(ஞாயிறு) நாட்டின் தென் மேற்கே அமைந்
துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த
ஒடெசா(Odessa) துறைமுக நகரம் மீது ரஷ்யா கடும் ஏவுகணைத் தாக்குதல்
களை நடத்தியுள்ளது. அங்குள்ள எரிபொ
ருள் குதங்களை தரை,கடல் வழி மூலமாக
ஏவுகணை கொண்டு தாக்கி அழித்து விட்
டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு தெரி
வித்துள்ளது.

போர் ஒரு புறம் நீடிக்கும் அதேசமயம்
துருக்கியின் மத்தியஸ்தத்தோடு நடை
பெறும் பேச்சுக்களில் உக்ரைன் முன்
வைத்த அமைதி யோசனைகளை
மொஸ்கோ பிரதிநிதிகள்”வாய் மூலம்”
ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று தெரி
விக்கப்படுகிறது.

*நேட்டோவில் உக்ரைன் இணையாது-
*ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய
லாம்..
*கட்டம்கட்டமாக ரஷ்யா படைகளைத் திரும்பப் பெறும்-
*கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ள டொன்பாஸ் பிராந்தியத்துக்குத் தன்
னாட்சி-
*கிரீமியா தொடர்பில் உக்ரைன் விலகி
இருக்கும் –
*அமெரிக்கா தவிர்ந்த – நேட்டோவில் இல்லாத- ஒரு நாட்டில் ஷெலான்ஸ்கி – புடின் அதிபர்கள் சந்திப்பு-

இந்த யோசனைகளை உள்ளடக்கிய
திட்டத்தையே உக்ரைன் முன்வைத்து
ருந்தது.

படங்கள் :கீவுக்கு அருகே அழிவுகளுடன்
காட்சி தரும் புறநகர வீதி. 2.ஒடெசா துறைமுக நகரில் ரஷ்யத் தாக்குதலில்
எரிகின்ற எண்ணெய்க் குதம்.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

]]>
ரஷ்யா போரை நிறுத்தினால் உக்ரைன் நடுநிலை பேணும்! https://www.mukadu.com/2022/03/29/%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/ Tue, 29 Mar 2022 19:50:14 +0000 http://www.mukadu.com/?p=26247 துருக்கிப் பேச்சு முன்னேற்றம்!
ரஷ்யா போரை நிறுத்தினால்
உக்ரைன் நடுநிலை பேணும்!

நேட்டோவில் சேராது ஆனால்
ஐ. ஒன்றியத்தில் இணையும்

உக்ரைன் – ரஷ்யா சமாதானக் குழுக்
கள் இடையே துருக்கியில் இன்று நடை
பெற்ற நேரடிப் பேச்சுக்கள் குறிப்பிடக்
கூடிய முன்னேற்றத்தை எட்டியிருப்ப
தாக அங்காராவில் அந்நாட்டின் வெளி
விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா போரை நிறுத்தித் தனது படை
களை முற்றாக வெளியேற்றுமானால்
அதற்குத் தனது தரப்பு விட்டுக்கொடுப்
பாக நேட்டோவில் இணையும் விருப்பத்
தை உக்ரைன் கைவிடும். அத்துடன்
டொன்பாஸ் பிராந்தியத்தைத் தற்காலி
கமாகத் தனது பிடியில் இருந்து விலக்கி
விடவும் அது இணக்கம் தெரிவித்துள்
ளது.

பேச்சு மேசையில் உக்ரைன் தரப்பு முன்
வைத்த திட்டங்கள் வருமாறு :

?பாதுகாப்பு உத்தரவாதம் :சட்ட ரீதியாக
உத்தரவாதப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
உத்தரவாதம் ஒன்றை மேற்கு நாடுகளி
டம் இருந்து உக்ரைன் எதிர்பார்க்கிறது.
நேட்டோ வழங்குகின்ற பாதுகாப்புக்கு
நிகரான அல்லது அதைவிடச் சிறந்ததாக
அந்த உத்தரவாதம் அமைய வேண்டும்.

நாங்கள் சர்வதேச பொறிமுறை ஒன்று
டன் கூடிய பாதுகாப்பு உத்தரவாதத்தை
எதிர்பார்க்கிறோம். உத்தரவாத நாடுகள்
நேட்டோ உடன்படிக்கையின் சரத்து 5
போன்று விரைந்து பாதுகாப்பு உதவி அளிக்கும் விதமான விதிகளோடு அது
அமையவேண்டும் – என்று உக்ரைன்
தரப்புப் பிரதிநிதி கூறியிருக்கிறார்.

?நேட்டோ :பாதுகாப்பு உத்தரவாதம்
நடைமுறைக்கு வந்தவுடன் நேட்டோவில்
இணைவது என்ற தனது அபிலாசையை
உக்ரைன் கைவிடும்.

?பாதுகாப்பு உத்தரவாதம் கிடைத்த பிறகு தனது எல்லைக்குள் வெளிநாட்டு
படைத் தளங்கள் எதனையும் உக்ரைன்
வைத்திருக்க மாட்டாது.

?பாதுகாப்பு உத்தரவாத உடன்படிக்கை
உக்ரைன் ஜரோப்பிய ஒன்றியத்தில்
இணைவதைக் கட்டுப்படுத்தாது என்பது
கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

உக்ரைன் தரப்பின் இந்த யோசனைகள்
அடங்கிய திட்டத்தை ரஷ்யா சாதகமாகப்
பரிசீலிக்க இணங்கியுள்ளது. சுமார் மூன்று மணி நேரம் நீடித்த இன்றைய
பேச்சுக்களின் முன்னேற்றத்தைக் குறிக்கின்ற ஒரு சாதக சமிக்ஞையாக
தலைநகர் கீவின் சுற்றுவட்டாரம் உட்பட
உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்யா
வின் போர் நடவடிக்கைகள் தணிக்கப்பட
வுள்ளன என்று ரஷ்யப் பிரதிநிதிஅறிவித்
துள்ளார்.

இதேவேளை, அதிபர் மக்ரோன் இன்று
மாலை மீண்டும் ஒரு தடவை புடினுடன்
தொலைபேசி வழியே பேசினார். மரியு
போல் நகரில் இருந்து மக்களை வெளி
யேற்றுவதற்கான சர்வதேச மீட்பு முயற்சி
க்குப் புடினின் இணக்கத்தைப் பெறுவ
தற்காக மக்ரோன் அவருடன் தொடர்பு கொண்டார்.போரின் தற்போதைய கட்
டத்தில் அவ்வாறான ஒரு மீட்பு சாத்திய
மில்லை என்று புடின் கூறியுள்ளார்
என எலிஸே மாளிகை பின்னர் தெரிவித்
துள்ளது.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

]]>
ஒஸ்கார் விருதை இழப்பாரா ஸ்மித்? https://www.mukadu.com/2022/03/29/%e0%ae%92%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be/ Tue, 29 Mar 2022 16:19:51 +0000 http://www.mukadu.com/?p=26242 சிறந்த நடிகருக்குச் சீறி வந்த கோபம்!
மனைவியின் தலையை கேலி செய்த
அறிவிப்பாளரது கன்னத்தில் “பளார்”!

ஒஸ்கார் விருதை இழப்பாரா ஸ்மித்?

நகைச்சுவை என்ற பேரில் தனி மனித
உணர்வுகளைத் தாக்கக் கூடிய கேலிகள்
எந்த அளவுக்கு விபரீதமாகிவிடலாம் என்
பதனை ஒஸ்கார் விருது விழா மேடை
யில் நிகழ்ந்த ஒரு சம்பவம் உணர்த்தியி
ருக்கிறது.

உலகப் பெரும் சினிமா விழா மேடையில்
ஹொலிவூட் நடிகர் ஒருவர் அறிவிப்பா
ளரைக் கன்னத்தில் அறைந்த காட்சி உல
கெங்கும் சோசல் மீடியாக்களில் வைர
லாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

94 ஆவது ஒஸ்கார் சினிமா விருது வழங்
கும் விழா ஞாயிற்றுக்கிழமை லொஸ் ஏஞ்சல்சில் கோலாகலமாக நடைபெற்
றது. அமெரிக்காவின் பிரபல நகைச்
சுவை நடிகர் கிறிஸ் ரொக் மேடையில் விழாவைத் தொகுத்து வழங்கும் அறிவிப்
பாளராகப் பங்கேற்றார். அவரது வழக்க
மான நையாண்டிகளில் பார்வையாளர்
கள் லயித்திருந்த சமயத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.

சிறந்த நடிகருக்கான விருது பெற்ற வில்
ஸ்மித் (Will Smith) திடீரென எழுந்து சென்று மேடையில் ஏறி அறிவிப்பாளர்
கிறிஸ் ரொக்கின் (Chris Rock) கன்னத்தில்
பளார் என அறைந்தார்.பல நூற்றுக்கண
க்கான பார்வையாளர்கள் அதனையும் நகைச்சுவைக் காட்சி என்றே நம்பினர்.

அறிவிப்பாளரை அறைந்து விட்டுத் தன்
ஆசனத்தில் சென்று அமர்ந்த ஸ்மித்
“இனிமேலாவது என் மனைவியின் பெயரை உச்சரிக்காமல் வாயை மூடிக்
கொண்டிரு” என்று கத்தியபோது தான்
சம்பவத்தின் விபரீதம் ஏனையோருக்குப்
புரிந்தது.

வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்
(Jada Pinkett Smith) அலோபீசியா(alopecia)
என்கின்ற தலை முடி முற்றாக உதிர்ந்து
போகின்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்
ளார். அவரது மொட்டைத் தலையைக்
குறிப்பிட்டு கிண்டல் செய்த கிறிஸ் ரொக்
மொட்டைத் தலையுடனான ஒரு பாத்திரத்
தில் நடிப்பதற்கு அவர் நீண்ட காலம் காத்
திருக்கவேண்டி இருக்காது என்று நையா
ண்டி செய்தார்.

தனது மனைவியின் தலைமுடி உதிர்
வதை மேடையில் கிறிஸ் ரொக் பகிரங் கமாக்கிக் கேலி செய்தது வில் ஸ்மித்தை
வெகுண்டெழ வைத்தது. உணர்ச்சி வசப்
பட்ட அவர் சிரித்து அதனை மறைத்துக் கொண்டே மேடைக்கு ஏறி கிறிஸ் ரொக்
கின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.

அடியை வாங்கிய அறிவிப்பாளர் ரொக்,
தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, “தொலைக்காட்சி வரலாற்றில் இன்றிரவு
மிகச் சிறந்த ஒரு நாள்” என்று மட்டும்
கூறினார். தாக்குதல் குறித்துப் பொலீஸ்
முறைப்பாடு செய்வதற்கு அவர் மறுத்து
விட்டார் என்று கூறப்படுகிறது.

ஒஸ்கார் வரலாற்றில் கறைபடிந்தது
போன்ற இந்தச் சம்பவம் குறித்து அதன்
நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பூர்வாங்க விசாரணைகளையும் அது
தொடக்கியுள்ளது. வில் ஸ்மித் மீது எத்
தகைய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்
படும் என்பது உடனடியாகத் தெரியவர
வில்லை. அவருக்குக் கிடைத்த சிறந்த
நடிகருக்கான விருது பறிக்கப்படுமா
என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்

]]>
மேற்குலகால் வெல்லமுடியாத புதிய தலைமுறை போராயுதம்! “ஹைப்பர்சோனிக்”ஏவுகணை. https://www.mukadu.com/2022/03/20/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/ Sun, 20 Mar 2022 06:40:03 +0000 http://www.mukadu.com/?p=26235 “ஹைப்பர்சோனிக்”ஏவுகணையால் ஆயுதக் கிடங்கை அழித்தது ரஷ்யா!

மேற்குலகால் வெல்லமுடியாத
புதிய தலைமுறை போராயுதம்!

ரஷ்யா மிக அண்மைக் காலத்தில் அறி
முகப்படுத்திய”ஹைப்பர்சோனிக்” ஏவு
கணைகளை உக்ரைன் போரில் பயன்
படுத்தியதை முதல் முறையாக உறுதிப்
படுத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து 600
கிலோமீற்றர்கள் மேற்கே இவானோ-
ஃபிராங்கிவ்ஸ்க் (Ivano-Frankivsk) பிராந்
தியத்தில் உக்ரைன் படைகளது ஆயுதக்
கிடங்கு ஒன்றை ஹைப்பர்சோனிக் ஏவு
கணைகளால் தாக்கி அழித்துவிட்டதாக
ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு சனியன்று
தெரிவித்துள்ளது.

அடுத்த தலைமுறை ஏவுகணை என்று
அதிபர் புடினால் 2018 இல் அறிமுகப்படுத்
தரப்பட்டிருந்த “கின்ஷால்” (Kinzhal) எனப்
பெயரிடப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுக
ணைகள் மூலமே அந்தத் தாக்குதல் நடத்
தப்பட்டிருக்கிறது. மிக் போர் விமானங்
கள் மூலம் பயன்படுத்தக் கூடிய இந்த
வான் வழித் தரை இலக்கைத் தாக்கு
கின்ற நீண்ட தூர ஏவுகணைகள் (long-
range air-to-ground missile) ரஷ்யா கடந்த
பத்து ஆண்டுகளுக்குள் தயாரித்த சவால்
மிக்க போராயுதம் ஆகும்.மணிக்கு 6,000 கிலோமீற்றர்களுக்கும் அதிக வேகத்தில்
-ஒலிவேகத்தை விடப் பல மடங்கு அதிக
விரைவில் -பறக்கவல்ல இந்த ஹைப்பர்
சோனிக் ஏவுகணைகளை அமெரிக்கா
உட்பட நேட்டோ படைகளிடம் தற்சமயம்
உள்ள வான் பாதுகாப்புக் கவசங்கள்
(air defense systems) எதனாலும் தடுத்து
விட முடியாது என்று ரஷ்யா கூறுகிறது.
அதேவேளை இந்த ஏவுகணையில்
வழக்கமான குண்டுகளையும் தேவைப்
பட்டால் அணுகுண்டுகளையும் பொருத்த
முடியும்.

இரண்டாயிரம் கிலோ மீற்றர்கள் தாண்டி இலக்குகளைத் தாக்கவல்ல ரஷ்யாவின் “கின்ஷால்”(Kinzhal) அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பாதுகாப்புச் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க வல்லரசு தனது ஹைப்பர்
சோனிக் ஏவுகணையை 2024 ஆம் ஆண்டு பாவனையில் சேர்ப்பதற்கு
உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸின் பாது
காப்பு அமைச்சர் 2019ஆம் ஆண்டு இரா
ணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் பரி
சோதனைகள் கடந்த ஆண்டு இறுதி
யில் நடத்தப்படும் என்பதை அறிவித்தி
ருந்தார். சீனா ஏற்கனவே தனது ஹைப்
பர்சோனிக் ஏவுகணையைக் காட்சிப்
படுத்தியுள்ளது.

(படம் :ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்
றைச் சுமந்து பறக்கும் மிக் போர் விமா
னம்.)
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

]]>