//anjeng கட்டுரை – Mukadu https://www.mukadu.com Sun, 12 Oct 2025 15:10:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.8 பிரான்சில் நடைபெற்ற சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி – 2025 https://www.mukadu.com/2025/10/12/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ Sun, 12 Oct 2025 15:10:42 +0000 https://www.mukadu.com/?p=26473

]]>
சம்பவத்திலிருந்து சினிமாவிற்கு சினிமா என்பது வெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்வதல்ல. https://www.mukadu.com/2025/09/23/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae/ Tue, 23 Sep 2025 15:31:30 +0000 https://www.mukadu.com/?p=26462

Screenshot

சம்பவத்திலிருந்து சினிமாவிற்கு சினிமா என்பது வெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்வதல்ல. நடந்ததை அப்படியே திரையில் காட்டினால் அது செய்தித் தொகுப்போ அல்லது ஆவணப்படமோ ஆகிவிடும். ஆனால் ஒரு சம்பவத்தை கலை வடிவில் உயிர்ப்பிக்கும்போது, அதன் பின்னணி, அதன் விளைவுகள், அதில் சிக்கிக்கொண்ட மனிதர்களின் உள்மனப்பயணம் ஆகியவை வெளிப்பட வேண்டும். அப்போதுதான் கதை பார்வையாளரைத் தொடும். சம்பவம் என்பது விதை; சினிமா அதனை கதைப்போக்கின் மரமாக மலரச் செய்யும் கலை. இந்தக் கோணத்தில் மதிசுதா இயக்கிய «வெந்து தணிந்தது காடு» திரைப்படம், போர் பிம்பங்களைத் தாண்டி மனித வாழ்வின் சிதைவுகளைச் சித்தரிக்கிறது.

உணர்சிகளுக்கும் கழிவிரக்கங்களுக்குமப்பால் படைபின்மீதான பார்வையென்பது படைப்பாளியை அடுத்த தளத்திற்கு எடுத்துசெல்லவேண்டும்.திரைமொழி யென்பது சொல்லப்படும் கதையுனூடே மக்களை இயக்குவதற்கான கருவியாயும் கட்சியின் குரலாயும் ஒலிக்கவேண்டும்

சம்பவங்களை நேரடியாகச் சினிமா கதையாக்கும்போது உணர்ச்சி சிக்கல் கதைப்பரிமானங்களை கண்டடையும் . நடந்த நிகழ்வு என்பது கதை அல்ல அது வெறும் தகவல் மட்டுமே. சம்பவங்கள் சினிமாவில் உயிர்ப்பதற்கு அதன் பின்னணி, அதன் விளைவுகள், அதில் சிக்கிக்கொண்ட மனிதர்களின் உணர்ச்சி ஓட்டம் தேவை. இல்லையென்றால் அது செய்தித் தொகுப்பைப் போல் பாழடைந்துவிடும்.

வாழ்க்கையில் சம்பவங்கள் நீண்டுகொண்டே போகலாம், சில சமயம் ஆண்டுகளாகவும். ஆனால் சினிமா நேரம் குறுகியது.இரண்டு மணி நேரத்தில் அடங்கவேண்டும். அங்கே எந்த தருணங்களை எடுத்துக்கொள்வது, எதனைத் தள்ளிப் போடுவது என்ற தேர்வில் எழும் குழப்பமே சிக்கலாகும். சம்பவத்தின் பாதிப்புக்கள் ஏராளம் இருக்கும் , ஆனால் சினிமா கதை ,கதையின் மையச் சிந்தனைக்கே சேவை செய்யவேண்டும். அதைச் செய்யாமல் விட்டால் சம்பவங்களின் முன் பின் தெரியதவர்களுக்கு கதை சிதறி விழும் அபாயம் உண்டு.

சம்பவத்தை அப்படியே காட்டினால் அது ஆவணப்படம் போலத் தோன்றும் அதேநேரம் அதிகம் மாற்றினால் உண்மையை அழித்துவிட்டது என்ற குற்றச்சாட்டு எழும். அந்த இடையில் சமநிலை வைத்தல் எளிதல்ல. அதிலும் சம்பவத்தில் உள்ள மனிதர்கள் களத்தில் நிற்பது போதுபோல் அவர்கள் பயணம் செய்ய வேண்டும், அவர்களின் உள்ளங்கண்ணில் ஒரு மாற்றம் நடக்க வேண்டும். இல்லையெனில் பார்வையாளருக்கு கதையின்மேலான தொடர்பு ஏற்படாது.

சம்பவம் எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும் காட்சியாக்கும்போது சின்னங்கள், உவமைகள், அடையாளங்கள் இல்லாவிட்டால் அது தட்டையாகி விடும் அதேநேரம் யதார்தத்தை மீறிய காட்சிப்படிபங்களும் கதைப்போக்கை சிதைத்துவிடும். சம்பவம் நிகழ்ந்தது என்பதை அறிந்துகொள்வதைதாண்டி, அந்த நிகழ்வு பார்வையாளரை எப்படிச் சிந்திக்க வைக்கிறது என்பதே கதையின் முக்கியமானதாக இயங்கவேண்டும்.

பார்க்கப்போனால் ஒரு கதைக்களுக்கு, சம்பவம் ஒரு விதை மாத்திரம். சினிமா கதைசொல்லல் அதைக் கொண்டு மரமாக மலரச் செய்ய வேண்டும். கதைக்காக உருவாக்கப்படும் கதாபாத்திரங்களின் இரத்தத்திலும் காட்சிகளின் கண்களிலும் உயிர்ப்பிக்கும்போது கதை உண்மையானதான சம்பவமாக மாற்றம்பெறுகிறது

தமிழ் மக்கள் நிதியில் ஈழத்தின் உள்ளிருந்து உருவாகியிருக்கும் மதிசுதா இயக்கிய «வெந்து தணிந்தது காடு» என்னும் திரைப்படம், lift சங்கத்தால் பாரிஸ்நகரின் 23 rue des écoles, 75005 இல் 100 இருக்கைகள் கொண்ட ecoles cinéma club பில் 21-09-2025 14:00 அன்று பொதுமக்கள் பார்வைக்கு திரையிடப்பட்டது.ஆனாலும் அங்கு பார்வையாளர்களாகவந்த யாவரும் ஈழ சினிமா ஆதரவாளர்களே பொதுமக்களின் பிரசன்னம் இருக்கவில்லை நென்றே கூறவேண்டும்.

வெந்து தணிந்தது காடு போர் என்ற வெளிப்புற உச்சரிப்பை மட்டும் சித்தரிக்காது அதனால் சிதைந்த ஒரு தனிப் பெண்ணின், ஒரு தாயின் குடும்ப வாழ்வை உள்வாங்கிச் சொல்கிறது. இராணுவ சீருடைகள் போர்விமானங்கள் ஆயுதங்கள் இல்லாமல் திரையில் பெரும்பாலும் போரின் பெரும் பிம்பங்கள் – வெடிப்பு, துப்பாக்கி, கொலை – நம்மை ஆக்கிரமிக்கின்றன. இந்தப் படம், அந்தச் சத்தத்தின் உள்ளே புதைந்து போன உயிர்களன் அலறலை, ஒரு குடும்பத்தின் துடிப்பை, ஒரு பெண்ணின் உள் உரையாடலை முன்னிறுத்துகிறது.

மையச் சிந்தனை போர் வென்றதோ தோற்றதோ என்பதல்ல, போரின் நடுவே உயிர் தப்பிக்கப் போராடும் மனிதர்களின் கதை தான் எப்போதும் எரியும் உண்மை. இந்தத் திரைப்படம் அந்த உண்மையை, பாழடைந்த மண்ணின் மணத்தோடு, களைத்த கண்களின் கசப்போடு நமக்குக் காட்டுகிறது.கதை கட்டமைப்பு மெதுவாகத் தொடங்கி, மெல்ல உச்சரிக்கும். ஆரம்பத்தில் அமைதி, பின்னர் அச்சம், இறுதியில் தவிர்க்க முடியாத அழிவு. எளிய புனைவின் வழியாகவே பெரிய வரலாற்றின் நிழல் நுழைகிறது. போர்நிகழும் நிலங்களில் மனித உணர்வுகளின் மாற்றம். ஒரு தனிப் பெண்ணின் தினசரி அனுபவங்கள், அவளது முடிவுகள், செய்யும் தவறுகள் – இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்தே போர்நிலத்தில் தனி மனிதனை ககுடும்பத்தை எவ்வாறு பிளந்துவிடுகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.

கதாபாத்திரம் மிகக் குறைவுதான், ஒரு கூட்டுக்குடும்பமாக இயங்கி பிரிவதால் அவை உயிரோடு இருக்கின்றன. அந்த தாயின் உள்ளார்ந்த நடுக்கமே படத்தின் முதுகெலும்பு. அவளைச் சூழ்ந்து நிற்கும் சின்ன சின்ன மனிதர்கள் ,அக்கம் பக்கத்தினர், போராளிகள், பேரப்பள்ளைகள் ,எல்லோரும் அவளது மனசாட்சியின் பிரதிபலிப்பாக மாறுகின்றனர்.

காட்சியமைப்புகள் கண்ணைத் திகைக்க வைக்கவில்லை; மாறாக, ஒளி, புகை, காலியாகிய வீடு, சிதைந்த சுவர், போன்ற சிறு பிம்பங்கள் தான் அதிகம் பேசுகின்றன. அது தான் படத்தின் வலிமை. பெரிய காட்சிகள் இல்லாமல் கூட, ஒவ்வொரு காட்சிகளும் பார்வையாளரின் உள்ளத்தில் கனத்த சுமையை வைக்கிறது.

எதுவும் பேசாமல், எதுவும் தீர்க்காமல்,மனதில் எரியும் குரல் போல முடிகிறது. அந்த முடிவு சற்றே திடீரென தோன்றினாலும், அதுவே உண்மை: போர் எப்போதும் காலம் காலமாக நிகழ்வது முழுமையாக முடிவதில்லை; அது மனிதரின் உள்ளே காயமாகத் தங்குகிறது.

இந்தத் திரைப்படம் சினிமாவாக மட்டும் அல்ல, ஒரு சாட்சியமாகவும் நிற்கிறது. போரின் எரிபொருள் கருகிய பின், மீதம் தங்கும் சாம்பலின் மணம் எப்படி வாழ்வைச் சூழ்கிறது என்பதை இத்திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது. அது வரலாற்றைச் சொல்வதில்லை; அது வாழ்ந்தவரின் துடிப்பை, துயரத்தை, தோல்வியை, அதேசமயம் சிறு நம்பிக்கையின் நரம்பையும் வெளிப்படுத்துகிறது.

இந்தத் திரைப்படம் எரிந்த மண்ணின் உணர்வை உண்மையோடு தந்தாலும், சில இடங்களில் அது நம்மை முழுமையாக கவரவில்லை.

படம் போரின் நடுவில் வாழும் மனிதர்களின் தனிப்பட்ட வேதனையைச் சித்தரிக்கிறது. ஆனால் அந்தப் பின்னணியில் நடந்த அரசியல் சிக்கல்கள், போரின் பல்வேறு பரிமாணங்கள் எளிதாகத் தவிர்க்கப்பட்டுவிட்டன. இதனால் வரலாற்று நினைவின் ஆழம் சற்றே குறைந்து விடுகிறது.

சில இடங்களில் படத்தின் ஓட்டம் மெல்லத் தள்ளாடுகிறது. கதாபாத்திரத்தின் உள் மனநிலையை வெளிப்படுத்துவதற்காகக் காட்சிகள் நீளமாக்கப்பட்டாலும், அது சிலது பார்வையாளர்களுக்கு ஒருவித சோர்வை உண்டாக்கியது.

மையக் கதாநாயகி மட்டும் உயிர்ப்போடு இருப்பது நன்றே, அவளை இன்னும் உரமேற்றியிருக்கவேண்டும் ஆனால் அவளைச் சூழ்ந்த மற்ற பாத்திரங்கள் சற்று மேல் தோற்றமளிக்கின்றன. அவற்றின் பின்னணி, ஆழம், எதிர்மறைச் சிக்கல்கள் குறைவதால் கதை ஒருதிசைப்பட்டதாகி விடுகிறது.

சில இடங்களில் படம் நமக்கு துயரத்தை திணிக்கிறது போலத் தோன்றுகிறது. இயல்பான வெளிப்பாட்டை விட, “பாருங்கள், இது துயரம்” என்று வலுக்கட்டாயமாகச் சொல்லும் தருணங்கள் இருக்கின்றன.

படம் நமக்கு கேள்விகளை விட்டுச் செல்கிறது – அது பலமாய் இருக்கலாம். ஆனால் ஒருவித சீரான கருத்து அல்லது தெளிவான நிலைப்பாடு இல்லாமை, கதை தெரியாதவர்களுக்கு “இதன் சொல்லாடல் எங்கே நிற்கிறது?” என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

படம் கலை வடிவில் சாட்சியமாக நிற்கிறது. அது போரின் குரலை அல்ல, போரால் சிதைந்த ஒரு தாயின் உள்ளக்குரலை முன்வைக்கிறது. இதனால் பார்வையாளருக்கு போரின் நெருக்கடியை வாழ்ந்தபடியே உணரச் செய்கிறது. இருந்தாலும் அரசியல் பரிமாணங்கள் புறக்கணிக்கப்பட்டதால் வரலாற்றின் ஆழம் குறைகிறது; பக்கக் கதாபாத்திரங்களின் ஆழமின்மை கதையை ஒருதிசைப்பட்டதாக ஆக்குகிறது. இப்படியான குறைபாடுகள் இருந்தாலும், படம் எரிந்த மண்ணின் மணத்தை, உயிர் தப்பிக்க போராடும் மனிதரின் துடிப்பை நம்முள் பதிக்கிறது. சினிமா வரலாற்றைச் சொல்லும் பொழுது, அது வெறும் நினைவாக மட்டுமல்ல, சிந்தனையைத் தூண்டும் குரலாக இருக்க வேண்டும் என்பதை இத்திரைப்படம் நமக்கு நினைவூட்டுகிது
23-09-2025
ப.பார்தீ

]]>
2009.மே 18 இல் ஈழத்தமிழ் சமூகத்தின் ஆயுதப்போராட்டம் தோற்றது ப.பார்தீ https://www.mukadu.com/2025/08/10/2009-%e0%ae%ae%e0%af%87-18-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Sun, 10 Aug 2025 08:28:10 +0000 https://www.mukadu.com/?p=26452 2009.மே 18 இல் ஈழத்தமிழ் சமூகத்தின் ஆயுதப்போராட்டம் தோற்றது
ப.பார்தீ

மனிதன் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் நிற்கும் தருணங்களில், அவன் உண்மையில் தன் அகங்காரத்தையும், தன் சுயபடிமையையும் காக்கப் போராடுகிறான். “நான் தவறுகளைச் செய்ய மாட்டேன்” என்ற நம்பிக்கை, தோல்வி வந்தவுடன் அசைந்து விடும். அதை ஏற்றுக்கொண்டால், பிறர் கண்களில் தன் மதிப்பு குறையும் என்ற சமூக அச்சம், உள்ளுக்குள் ஒருவகைச் சுமையாகி நிற்கிறது. பலருக்கு, தோல்வி என்பது வெட்கம்; அது அவர்களுடைய வாழ்க்கை கட்டுப்பாடு தளர்ந்துவிட்டதற்கான அடையாளம் போலத் தோன்றும்.

ஆனால் தோல்வியை ஒப்புக்கொள்வதில் ஒரு விசித்திரமான விடுதலை உண்டு. ஒருவன் அதை ஏற்றுக்கொண்டவுடன், “எங்கே தவறினேன்?” என்று தன்னை நேராகக் கேட்கும் தைரியம் வருகிறது. அந்த நேர்மையான பார்வை தான் கற்றலுக்கான கதவைத் திறக்கும். மனஅழுத்தம் குறையும். சுமை இறங்கும். உறவுகளில் நம்பிக்கை வளரும். புதிய வழிகளை முயல்வதற்கான தைரியம் உருவாகும்.

இப்படி பார்த்தால், தோல்வி என்பது உண்மையில் இருக்கிறதா? அல்லது நம்முடைய மனம் வைத்த பெயரா? திட்டமிட்ட இலக்கு நிறைவேறாதபோது அதை “தோல்வி” என்று சொல்வோம். ஆனால் அதே சம்பவத்தை, “நான் கற்றுக் கொண்டேன்” என்ற பார்வையில் பார்த்தால், அது தோல்வி இல்லை — அது அடுத்த படிக்கல்லே. வெற்றி–தோல்வி என்ற அளவுகோல், மனிதன் தன் எதிர்பார்ப்புகளால் கட்டிய கோடு தான். வாழ்க்கையை ஒரு தொடரும் பயணமாகக் கண்டால், தோல்வி என்ற ஒன்று வெறும் இடைநிலை அனுபவம் மட்டுமே.

மனித வாழ்வில், மன ஆற்றுப்படுத்தலில், தோல்வியை ஒத்துக்கொள்ளுதல் மனித சமூகத்தையே மேம்படுத்தியுள்ளது. இன்று நாம் அனுபவிக்கும் எல்லா வளங்களும், பல தோல்விகளின் அடுக்குகளால் கட்டி வளர்க்கப்பட்டவை. எந்த அறிவியல் கண்டுபிடிப்பும், எந்த அரசியல் வெற்றியும், எந்த கலைச் சிகரமும், தோல்வியை மீண்டும் மீண்டும் எதிர்கொண்டு வந்த தைரியத்தின் பிறப்பினை.

ஆனால் ஈழத்தமிழ் சமூகமோ, ஆயுதப்போராட்டத்தின் தோல்வியை இன்றுவரை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்குக் காரணம், தோல்வி பற்றிய நம் மனக் கோலங்கள் இன்னும் கனவின் நிறத்தில்தான் இருக்கின்றன. இது வெறும் அரசியல் வரலாறு அல்ல — இது அடையாளம், தியாகம், மன உளவியல், சமூக நினைவகம், மதநம்பிக்கை ஆகியவற்றின் சிக்கலான கலவையாகும்.

ஆயிரக்கணக்கான உயிர்கள், பல தலைமுறைகளின் இளமை, ஒரு சமூகத்தின் கனவுகள் — இவை அனைத்தும் ஆயுதப்போராட்டத்தில் முதலீடு செய்யப்பட்டன. அதை “தோல்வி” என்று சொல்லிவிடுவது, அந்தத் தியாகங்களை வீணாக்கிவிடுமோ என்ற பயம் ஆழமாக பதிந்துள்ளது. பலருக்கு, அதை ஒப்புக்கொள்வது, “நாம் போராடவே கூடாது” என்று மறைமுகமாகச் சொல்வது போலாகி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஆனாலும் நாம் அந்த இடத்தில் தோல்வியுற்றோமே — இதுவே உண்மை.

2009 மே மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறை நினைவுகள் இன்னும் புண்களாகவே உள்ளன. அவற்றை எதிர்கொள்வது, தனிப்பட்ட மற்றும் சமூகத் துக்கத்தை நேராகத் தொடுவதற்குச் சமம். அதனால், “நாம் தோற்றோம்” என்ற வார்த்தையைச் சொல்லாமல், இன்னும் ஒரு “தற்காலிக இடைநிறுத்தம்” என்ற உணர்வில் வாழ்கிறோம். இது ஒரு கானால் நீர்கதவாய் — எந்தப் பொருள்முதல்வாதக் கருத்துகளும் இங்கு இயங்கப் போவதில்லை.

தமிழ் அரசியல் பேச்சு இன்னும் ஆயுதப்போராட்டத்தின் வீரச் சின்னங்களையும், ‘வெற்றி கதை’ நிழல்களையும் தாங்கி நிற்கிறது. தோல்வியை ஏற்றுக்கொள்வது, அந்த அரசியல் அடித்தளத்தையே குலைக்கும் அபாயத்தில் தள்ளும் என்ற பயுணர்வு, கடவுள் நம்பிக்கையைப் போலவே காலத்திற்கும் பொய்யாய் மேடைகளில் நடனமாடுகிறது.

பல ஈழத்தமிழர்களுக்கு, ஆயுதப்போராட்டம் வெறும் போர் அல்ல — அது அடையாளத்தின், உரிமை உணர்வின், சமூகப் பெருமையின் ஒரு அங்கம். அதை “தோல்வி” என்று வரையறுப்பது, தங்கள் அடையாளத்தின் ஒரு பகுதியை மறுப்பது போல உணர்கிறார்கள். ஆனால் அதையே வைத்து பிழைப்பு நடத்துவோர் வாழ்வோ சொழிந்தோங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சிலர், “இது முடிவல்ல; இது ஒரு கட்டம் மட்டுமே” என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை, தோல்வியைச் சுமையாகப் பாராமல், ‘மறுபிறப்பு’ கதையாக வைத்திருக்கிறது.

ஆனால் கேள்வி மீதம் நிற்கிறது: இவை பகுத்தறிவுள்ள ஒரு சமூகத்தின் செயலகமாக அமையுமா? இதுவா போராளிகளின், மாவீரர்களின் உண்மையான வீச்சு? தியாகத்தை நினைவு கூர்வது ஒருபக்கம், அதே தியாகத்தின் அரசியல் பயணத்தை விமர்சனமாகச் சோதிப்பது மறுபக்கம். இந்த இரண்டையும் செய்யாத சமூகமே, தன் வரலாற்றை உண்மையாக எழுத முடியாது.

தோல்வியை ஏற்றுக்கொள்வது, அந்த தோல்வியில் இருந்து விடுபடுவதற்கான முதல் படி. மறுப்பின் சுவருக்குள் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்றால், எதிர்காலப் பாதை ஒருபோதும் திறக்காது. உண்மையைச் சொல்வது துரோகம் அல்ல; உண்மையை மறைப்பதே துரோகம்.

ஈழத்தமிழ் சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி, இந்த வரலாற்றை நேராகக் காணும் தைரியத்தில்தான் இருக்கும். ஆயுதப்போராட்டம் தோற்றது என்பதைக் கூறி, அதன் காரணங்களைப் பகுப்பாய்வு செய்து, புதிய அரசியல் பாதையை உருவாக்கும் துணிவே — உண்மையான மரியாதையை அந்தத் போராளிகளுக்கு கொடுக்கும் செயல்.

]]>
“பாட்டிய பாணியில் பிறந்த தலைவர்: வாசுகனின் நினைவியல் கலைநடைமொழி” ப.பார்தீ https://www.mukadu.com/2025/07/18/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/ Fri, 18 Jul 2025 16:45:04 +0000 https://www.mukadu.com/?p=26448 “பாட்டிய பாணியில் பிறந்த தலைவர்: வாசுகனின் நினைவியல் கலைநடைமொழி”
ப.பார்தீ
12-07-2025

முள்ளிவாய்களால் கஞ்சிக்காய் நின்றோரின் நினைவுணர்வை கலையாக்கி கஞ்சிப்பாடல் வந்ததுபோல் கலையின் மறுவடிவில் காட்சியாக்கி உயிர்பேற்றி மே 18 காலப்பகுதியில் ஓவியர் வாசுகனின் தலைவர் என்ற கலைப்படைப்பை “எஸ்பாஸ் சைன் பியேர்” Espace Saint Pierre பாரிஸை அண்மித்த சென்லிஸ் SENLIS நகரத்தில் பார்கமுடிந்தது. எஸ்பாஸ் சைன் பியேர் எனும் கலைக்கூடம் மனித நாகரீக வளர்ச்சியில் பாச்சலின் இன்னுமொரு வடிவமாய் கைவிடப்பட்ட பிரமாண்டமான ஒரு தேவாலயம் என்பது சிறப்பு. சென்ற வருடம் இதே கூடத்தில் வாசுகனின் “இறுதி போசனம்” என்ற தலைப்பிலான நிகழ்த்து கலையையும் கண்டுகளித்தேன். அதே காலப்பகுதியில் மீனவன் (Pêcheur) எனும் தலைப்பிலான ஓவியங்களும் காண்பிக்கப்பட்டன. அவரின் படைபின் உள்ளுணர்வை, நுட்பத்தை விளங்கிகொள்வதற்கு முன் படைப்பின் உருவாக்க உத்தி மற்றும் பயன்படுத்தபட்ட மூலங்களை நாம் கண்டறியவேண்டும்.

“பாட்டிய பாணியில்” மண்சார்ந்த வரங்களை பிரதானமாக கொள்வதே அவரது அடையாளம். தெற்காசிய, சைப்ரஸை அண்டிய மத்தியத்தரை தேசத்து தொல்லியல், ஜப்பானை மையமாக கொண்டு கிழக்காசியா, குவாடலூப் , மாடினிக்கை அண்டிய கரேபிய தேசங்களின் மத்திய காலத்திற்கு முற்பட்ட படைப்புகளின் தாக்கம் இவரது படைப்பின் மூலதனம். பராம்பரிய காலத்தின் அல்லது அதற்கு முற்பட்ட மனிதனின் படைப்பின் தேடலும் அதன் கூறுகளையும் இவரது படைப்புகள் நமக்கு சொல்லும் செய்தி – பாட்டிய பாணியில் தோய்கிறது.

“பாட்டிய பாணியின்” தெறிப்பில் “தலைவர்” எனும் படைப்பு பிறந்தது. கடற்கரை மண்சார்ந்த நிறத்தில் களிமண்ணில் உருவான அந்தமுகம். மண்நிறம், கறுப்பு, பச்சை, மஞ்சள் போன்ற வர்ணங்களால் உருமறைப்பு (Camaflage) செய்ய முயல்கிறது. சீருடை உருமறைப்பு கொரிலா போராட்டத்தின் பிரதான அங்கம். மண்ணாலான அந்த முகத்தின் இரு கன்னங்களிலும் நட்ச்சத்திர மீனின் ஓடுகள் புதைக்கப்படுள்ளது – இறுதியாக கடந்து சென்ற எமது காலத்தை இரண்டாக பிரிக்கும் வகையாக அல்லது இலட்சியத்தின் இலட்ச்சனைகளாக கூட கூறலாம். இவ்வாறாக முகம் முழுவது கடல் எச்சங்கள் பதிக்கப்பட்டிருப்பது நெய்தல் நிலத்தின் வாழ்வின் பிறப்பையும் முடிவையும் பறைசாற்றுகிறாரோ. நெற்றியில் சிவப்பு கோடு பிளவு போன்றும் சிவப்பு கொடி போலவும் – செங்கொடி பறக்கட்டும்.

தலைவரின் முகத்தின் பின்புலம் தாங்கும் புறங்கள் சிதைந்திருக்கும் சாக்குதுணி இயல்பு குலைந்த சமூகப்பிடிப்பின் முகத்தின் கதையை பேசுவதாக வாழ்வை பிரதிபலிப்பதாகவும் பொருளாதாரத்தின் அடையாளமாகவும் பின்னப்படுள்ளது. கீழ்புறம் மயில் இறகும் சில நூல்களும் பிணைந்துள்ளன. மயிலிறகு பெரும்பாலும் அழகு, விலாசம், மற்றும் ஆன்மீக கண் எனப் பொருள் கொள்ளப்பட்டாலும் படைப்பாளி முல்லை நிலத்தின் வாழ்வியலை முன்னிறுத்துவதாக செப்பினார் – முருகனுக்கு இணையானவர் என்று பாடல் வரிகள் நெரிங்கிபோகிறது.

சிக்கிய நூல்களோடு நெய்த இப்படைப்பு வாழ்வின் துணிச்சல், செய்திகள், நிகழ்வுகள், அல்லது அரசியலை ஆழமாக நம்மோடு உரையாடுகிறது. பல சிவப்பு கோடுகள் ஒன்றாக ஓரிடத்தில் குவிவது – பல நாடுகள் ஒன்றிணைந்து முடக்கிய செய்தி.

பாட்டிய பாணியில் அனா இப்படைப்பு ஒரு கலப்பு நவீன படைப்பு (mixed media work). குறியீட்டு உருவக கலை இயற்கை பொருட்கள் சமூகபௌதிக கருத்தியலால் தூண்டப்பட்ட ஒரு மாமனிதனின்கதையை காவிவந்த முகமூடிப் பாணிகலை உணர்வு பெருக்கேறி உயிர்த்திருந்தது

]]>
“நம் திருமணக் கொண்டாட்டங்களில் நம்மையா பார்க்கிறோம்?” ப. பார்தீ https://www.mukadu.com/2025/07/12/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99/ Sat, 12 Jul 2025 17:47:22 +0000 https://www.mukadu.com/?p=26442 “நம் திருமணக் கொண்டாட்டங்களில் நம்மையா பார்க்கிறோம்?”
ப. பார்தீ
11-07-2025

தமிழும் தமிழ்சார்ந்த ஆர்வமுடன் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நண்பர் புகைப்படக் கலைஞர். அவர் ஒருநாள் எனக்கு ஒரு அழைப்பை எடுத்திருந்தார். தமிழ் வீடொன்றில் “மெஹந்தி” நிகழ்வை படம் எடுக்கப் போவதாக கூறினார்.
நான் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன்:
இது தமிழர் கலாசாரமா? பண்பாடா?
அவர்: இவை இரண்டுமே இல்லை, இது வடஇந்திய பண்பாட்டு செருகல். ஆனால் இப்போது குறிப்பாக ஈழத் தமிழர்கள்மத்தியில் பரவலாக பரவி வருகின்றது.
அப்போது நான் அவரிடம் கேட்கிறேன்:
நீங்கள் ஒரு தமிழராக இதைக் காட்சிப்படுத்தச் சொல்வது அறமில்லைதானே?
என்று.அவர் இதைத் தன் தொழிலாகவும், “நான் போகவில்லை என்றால் இன்னொருவர் போய்விடுவார்” என்று தனது நிலைப்பாட்டை எனக்கு தெளிவுபடக் கூறினார்.

ஆனால் என் மனமோ,
வடஹிந்திய பண்பாட்டு செருகல்கள் தமிழர்கள்மீது — அதுவும் குறிப்பாக ஈழத்தமிழர்கள்மீது — ஹிந்துத்துவ மதவாத அடிப்படையில் ஒரு மெல்லிய பண்பாட்டு அழிப்பைச் செய்துகொண்டிருக்கின்றன என்பதைத்தான் உணர்ந்தது.இது தொடர்பாகத் தேடினால், பணம், புகழ், வர்த்தக அடிப்படையில் தமிழர் பண்பாடு சார்ந்த புரிதலில்லாத பண்பாட்டு மலகீனப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாகவே நாமிருக்கின்றோமென்பது வேதனைக்குறிய விடயம்.இவை பற்றி தனிமனித விருப்ப/வெறுப்புபற்றோ அல்ல; பண்பாட்டு மீட்சிக்காக உழைக்கவேண்டிய ஒரு மக்கள்கூட்டமாகவே இருக்கின்றோமென்பது வேதனைக்குறிய விடயம்.நாமா இந்த 30 வருட ஆயுதப் போராட்டத்தை செய்தோம் என்பதுதான் ஆச்சரியமும்கூட – அதுவும் தமிழ்தேசியம் என்ற ஒருமைப்பாட்டு சொற்பத்தையைப் பாவித்து, தமிழும் தமிழ்பண்பாடுகளும் புரிந்து கொள்ளாத வாழ்க்கை நிலை…

திருமண மரபு என்பது ஒவ்வொரு இனக்குழுமமும் காலவோட்டத்தில் சிறு மாற்றங்களைச் செய்தாலும், தமது பாரம்பரியத்தை தொடர்ச்சியாகவே பின்பற்றிவருகின்றது. அதற்கு தமிழர் நாமும் விதிவிலக்கல்ல.தமிழர் திருமணப் பண்பாடுகள் பூர்வீகத்தில் மதஅடிப்படைவாத சடங்குகளைப் பின்பற்றாது, மனுட அறக்கோட்பாட்டில் நிகழ்ந்த ஒன்று. ஆனால் இன்று அவை மருவமருவி பலதரப்பட்ட சடங்குகளால் கட்டமைக்கப்பட்டுவிட்டது.ஆனாலும் தமிழ் திருமணக் கொண்டாட்டங்கள் எங்கள் இசை, உணவு, குடும்ப ஒற்றுமை மற்றும் பண்பாட்டு அடையாளங்களால் நிரம்பியுள்ளது. அது எங்கள் பெருமையும் அடையாளமும்கூட.

ஆனால் சமீப காலங்களில், வடஹி்ந்திய கலாச்சாரங்களில் இருந்து வந்த “மெஹந்தி விழா” தமிழர் திருமணங்களில் ஒரு முக்கிய நிகழ்வாகவே கையாளப்படத் தொடங்கியுள்ளது.
இது தமிழர் பண்பாட்டில் அக்கறையுள்ள ஒவ்வொரு மனங்களிலும் கேள்வியை எழுப்பி வருகிறது என்று ஏற்படுத்துகிறது:
இது ஒரு கலாசார உள்வாங்கலா? அல்லது தமிழர் பண்பாட்டு அடையாளங்களை மறுகவைக்கும் ஒத்திசைவை கொண்ட கலாசார அழிப்பா?

“மெஹந்தி” என்பது முதன்மையாக வடஇந்தியா, பாகிஸ்தான், மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் கலாசாரங்களில் தோன்றியதொரு விழா நிகழ்வாகும். இதில் மருதாணி இலைகள் அரைத்துத் தோலில் கலைவடிவங்களாக வடிவமைக்கப்படுகிறது.இது பெரும்பாலும் திருமணத்திற்கு முன் மணமகளின் நல்வாழ்க்கைக்காக, கணவனின் பெயரை மருதாணியில் ஒளிந்து எழுதும் சடங்காக ஆரம்ப காலங்களில் நிகழ்ந்துள்ளது.
பெண்கள் சந்திக்கும் மகிழ்ச்சி மையமான நிகழ்வாக நடக்கிறது.தமிழ் மரபியலில் அல்லது சங்க இலக்கியங்களில், திருமணச் சூழலில் “மருதாணி விழா” என்ற பெயரில் ஒரு நிகழ்வும் கிடையாது.மருதாணி இலைகளைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்தாலும், மருதாணி இயற்கையாக உடலை குளிர்பதப்படுத்தும் மூலிகை.வியர்வை, தலைவலி, வெப்பம், தோல் நோய்கள் போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்துவர்.பெண்கள் அழகுப்பராமரிப்பு ஒன்றாக முக்கியமான கலை நிகழ்வாக அல்லாமல், அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டதுதான்.இதை 1980 காலப்பகுதிக்கு பிறகு பிறந்த நாங்களும் கண்ணூடாகப் பார்த்த நடமுறைவிடயுமும் கூட.

1990களுக்குப் பிறகு உலகமயமாக்கல் என்று உலகம் உள்ளங்கைபோல் சுறுங்குகிறது.
நகரமயமாக்கல்மூலம் திருமண நிகழ்வுகளை ஒட்டி பெரும் இலாபமீட்டக்கூடிய புதிய சந்தை திறக்கின்றது.அது எங்கள் பண்பாடுகளை நவீனமயப்படுத்திப் பரவச்செய்வதைவிடுத்து, புதிய பண்பாட்டு இறக்குமதிகளை செய்கின்றது.
அதனூக்கிகளான தமிழ் சினிமா, தொலைக்காட்சி நாடகங்கள், மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் “மெஹந்தி விழா” தமிழர்களுக்கும்
“திருமணத்திற்கு கட்டாயமாய் வேண்டிய நிகழ்வாக” காட்டப்பட்டு வருகின்றது.
இதில் முக்கிய பங்களிப்பு:வடஹிந்திய பாலிவுட் கலாசாரம்நகர்ப்புற உயர் நடுத்தர வர்க்க வாழ்க்கைமுறைடிக்டொக், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகத்தளங்களில் நிகழ்வுப் போட்டி மனநிலைகள்இதனால், தமிழ் பண்பாட்டு புரிதலில்லாத “மெஹந்தி விழா” இன்று மணமகளின் சிறப்புநாள் பரிணமித்து,
புகைப்படக் கலைஞர்கள், நடனம், DJ கலந்த பண்பாட்டை அழித்து நாகரிகக் கொண்டாட்டமாக மாறியுள்ளது.

“மெஹந்தி விழா” என்பது தமிழர் கலாச்சார மரபில் இல்லாத ஒன்று. ஆனால் இன்று, அது தமிழர் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது.அழகு நிகழ்வாக, புதுமை உணர்வாக, மணமகளின் தனிப்பட்ட தருணமாக இருந்தாலும்,
மாற்றத்தை ஒவ்வொன்றாக எதிர்த்தால்தான் மரபைக் காக்கிறோம் என்பதில்லை.
ஆனால் எந்த மாற்றம் என்னை விட்டுப் பிறந்தது? எது என்னுள் இருந்து எழுகிறது? என்பதற்கான உணர்வும் விழிப்பும் இல்லாமல் ஏற்கும் ஒவ்வொரு கடன் கலாசாரம் (borrowed culture),மென்மையான அடையாள இன அழிப்பை ஏற்படுத்தும்.ஒரு இன விடுதலைக்காக போராடும் நாம், எம்மையே அழிக்கலாமா?

மணவிழா என்பது யாரும் பார்ப்பதற்கான நிகழ்வல்ல.வருமான ஏற்றத் தாழ்வுகளை முன்னிறுத்திக் கொண்டாட்டங்களை ஒழுங்குசெய்யும் நிகழ்வுமல்ல.அது ஒவ்வொரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின், ஒரு இனத்தின், ஒரு மொழியின் வாழ்வின் சரம்.அதில் நம்முடைய இசை, நம் உணவு, நம் மண் வாசனை, நம் உறவுத் தோழமை, நம் பண்டைய மரபு ஒவ்வொன்றாகவே ஒளிரவேண்டும்.
மற்றவர்களிடம் பழக நம் வழியை மாற்றத் தேவையில்லை; நம் வழியையே காலத்திற்கேற்ப அழகு செய்யலாம்.
எங்கள் பூர்வீகத்தை சிறப்பாக்கி தொடர்ந்து வளர்த்துக்கொள்ளலாம்.

மெஹந்தி விழா – தமிழர்கள் தங்களை அறியாது தங்கள் கலாச்சாரத்தில் வேறு ஒரு இனத்தின் அடையாளங்களை உட்புகுத்தி,
எமது பண்பாட்டைத் திரிவுபடுத்தும் அந்த நிகழ்வின் உண்மைதன்மையை சிதைக்கும் அறிவுப்போதாமை.அது அழகாக இருக்கலாம்; ஆனால் அதற்குள் நுழையும் போது, நம்மை மறந்து அவர்களை ஆடம்பரமாக நகலெடுப்பது போல இருக்கக்கூடாது.

புதிதைக் காண விழித்திருப்பது அழகு —
ஆனால், நம் பழமையை அறியாது மறக்கும் தூக்கத்தில் விழாதிருக்க வேண்டும்.
அதற்கு நாம் யார் என்பதைக் நம்மால் அறிந்திருக்க வேண்டும்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

]]>
பாரிஸ் கறுப்பு (Paris Noir)வரலாற்றை மீட்டெடுக்கும் காண்பியம். https://www.mukadu.com/2025/07/02/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-paris-noir%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/ Wed, 02 Jul 2025 11:02:36 +0000 https://www.mukadu.com/?p=26434 பாரிஸ் கறுப்பு (Paris Noir)வரலாற்றை மீட்டெடுக்கும் காண்பியம்.

27-06-2025 காலை 9 மணி பரிஸ்நகரம் ஒரு வெப்பச்சுழலுக்குள் புழுங்கிக்கொண்டிந்தது அதை தணிக்கும்விதமாய் யூன் 30 ம் திகதியுடன் மூடவிருக்கும் Centre Pompidou வின் கட்டட நிழலை எப்போதும் தாங்கிநிற்கும் தேநீர் கடைக்கு முன்னால் குளிர் தேரீருடன் தோழமைகளுடனான( பாரிஸ் கறுப்பு ) கலைக்கான்பியம் தொடர்பான உரையாடலுடன் தொடங்கிய அன்றைய நடப்பு அரசியல் விபரங்கள்,தமிழர் கலை நிலை அது ஏறவேண்டியதூரம் மென்ற பல கருத்து உரையாடலுடன் தொடங்கிய இனியநாள் 11 மணிக்கு தொடர்ச்சியாய் (பாரிஸ் கறுப்பு )அரங்கத்திற்குள் நுழைகின்றோம்

முதல்முறையாக முழுமையா கறுப்பின படைப்பாளிகளின் படைப்புகளை உள்ளடக்கி
Centre Pompidou-வில் மார்ச் 19 முதல் ஜூன் 30, 2025 வரை நடைபெற்ற “Paris Noir” (பாரஸ் கறுப்பு )காண்பிய அரங்கள் , ஒரு கலை நிகழ்வைத் தாண்டி வரலாற்றையும், மறைக்கப்பட்ட மனங்களையும் மீட்டெடுக்கும் ஒரு போராட்டக் களமாகவே இருந்தது. ஆபிரிக்கா, கரீபியன், அமெரிக்கா போன்ற பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஆஃப்ரிக்க வம்சாவளி கலைஞர்களின் 300-350 படைப்புகள் இக்காட்சியகத்தில் இடம் பெற்றிருந்தன.

இங்கு இடம்பெற்ற சில முக்கியமான ஓவியர்களின் அவர்கள் பணிகள்
Gerard Sekoto – 1947‑இல் ஓவியப்படுத்திய Self‑Portrait; சுவரொட்டியின் கறுப்பு ஒளிகளின் வரும் உயிர்ப்பை எளிதில் எடுத்துக்காட்டும் ஓவியம் .
Beauford Delaney, அமெரிக்க வரலாற்று முகம்; பிக்காசோவுடன் தோழமை கொண்ட இவர், கலந்த வளமான மஞ்சள் நிறங்களால் – காலனித்துவத்திற்கு எதிரான கதைகளைக் கூறும் ஓவியங்கள் .
Wifredo Lam, கியூபான்‑ஜமாய்கா வம்சாவளி; தடையின்றி கலாச்சாரத்தை மீறி உலக நவீன கலைக்கேற்ற ஓவியங்கள் .
Romare Bearden & Faith Ringgold – ஹார்லம் புனரூட்டலின் கலை நிகழ்வுகளில் சமுக்கியத்துவம் பெற்றவர்கள்; அவளது கதை சொல்லலும் கலைப்படைப்புகளும் பார்வையாளர்களை ஈர்த்தன .
Bill Hutson, அமெரிக்க ஆபிரிக்க வரலாறு கொண்ட ஓவியர் – Centre Pompidou‑வில் அவரது நான்கு பாணிகளும் சிறப்பு இடம் பெற்றன .

பிரான்ஸின் காலனித்துவ வரலாறு, ஆபிரிக்க மக்களின் வாழ்வை இன்றுவரை இரத்தக்கறைபோலவே அழுத்தி வந்துகொண்டரிக்கின்றது. பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள், தங்கள் துரோக வரலாற்றை மறைத்து “தொலைந்த நாகரீகம்” என்ற பிம்பத்தை ஆபிரிக்கக் கலை மீது திட்டமிட்டு ஒட்ட முயற்சிக்கின்றன. இந்நிலையில், “Paris Noir” பாரஸ் கறுப்பு ஆபிரிக்க மக்களின் வரலாற்று தடப் பயணமாக நிறைந்திருந்தது.

Afro–Atlantic கலை, Présence Africaine, Revue Noire போன்ற இதழ்கள், மற்றும் பொதுத்துறை இயக்கங்கள் மூலம் உருவான புதிய கலைஅலைகள் இங்கு முன்வைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் மத்தியில் பிரபலமில்லாத ஆபிரிக்க படைப்பாளிகளை அரங்கம் முன்னிறுத்துவது போலத் தோன்றினாலும், அவர்கள் தெளிவான கலை கற்கைமூலம் தங்கள் படைப்புகளை வீரியமாக வெளிப்படுத்தயிருந்தாலும் அவர்கள் பார்வையை ஐரோப்பிய கலைநிலைகளின் தாக்கங்களாகவே குறிப்பிட்டு, அந்தக் கலைஞர்களின் சொந்த முயற்சி, சொந்த தாக்கங்களை பின்தள்ளும் ஒரு முனைபோக்கான காட்சி அமைப்பு மனதை நெருடியது. அநேனேரம் ஆபிரிக்க பிரபலமாக அறியப்பட்டவர்களின் படைப்புகளின் பேச்சுகள் முழுமையாக விலக்கப்பட்டிந்தது.

உதாரணமாக, பிக்காசோவின் பிரபலமான “Les Demoiselles d’Avignon” ஓவியத்தில் ஆபிரிக்கமூல ஒவியக்கலைக் கூறுகள் பயன்படுத்தப்பட்டதைச் அவரே கூறியருக்கிறார்; ஆனால் இக்காட்சியில், ஆபிரிக்க படைப்பாளிகளை பிக்காசோ போன்று பல ஐரோப்பிய ஓவியர் தாக்கத்தில் உருவானவர்களாக மட்டுமே காட்டப்படுகிறார்கள். இதுவே அந்த வரலாற்று மீட்பு முயற்சியின் பாதியில் நிலவும் அளவளாவாத நிலையை வெளிக்கொணர்கிறது.

அத்துடன், படைப்புகளை இயல்புநிலை குலத்து தத்தமது சட்டகங்களுக்குள் மடக்கிவைத்துருந்தால் கலை அடக்குமுறையின் ஒரு பெரும் அடையாளமாகவே இருந்தது ஆனாலும் படைப்புகள் அந்த மக்களில் மண்வாசனையை வாழ்வியல் முறைகளை கலப்பு வாழ்கையை தெய்வவாழ்வை மத ஒடுக்குமுறைகளை கதைகளாகபேசிக்கொண்டுருந்தது. பார்வையாளர்கள் ஒவ்வொரு ஓவியத்தையும் நின்று வாசிப்பது போல அவதானித்து கடந்துசென்றாலும் படைப்புகள் தங்கள் சொந்த மக்களின் போராட்டங்களை, காலனித்துவத்துக்கெதிரான எதிர்ப்புகளை, கலைஞர்களின் உளவியலையும் சமூக உணர்வுகளையும் நம்மிடம் பேசிக்கொண்டே இருந்தன.

இங்கு நவீனத்துவ கட்டமைப்பு, காலநிலை மண் பண்பாடு சார்ந்த நிறக்குழப்புகளால் சூழப்பட்டிருந்தாலும், அந்த படைப்புக்கள் அழுத்தமாக “கலை என்பது ஒரு வரலாற்று அரசியல்தான்” என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தின. ஓவியங்களோடு சேர்த்து, பத்திரிகைகள், சிற்பங்கள், கையேடுகள், புகைப்படங்கள் போன்றவை ஒரு சமூக நினைவகமாக இந்த காட்சியை இயங்கச் செய்தன. Paris Noir (பாரிஸ் கறுப்பு)ஒரு கலைக்காட்சி மட்டுமல்ல — அது ஒரு புரட்சிச் சாட்சி. ஒவ்வொரு படைப்பும் கடந்த அடக்குமுறையின் கருக்கதை பேசிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பார்வையாளரும், அந்த ஓவியங்களை எதிர்கொள்ளும் தருணங்களில், ஒரு வரலாற்று எதிர்வினைக்கு ஈடுபட்டவர்களாகவே மாறிக்கொண்டிருந்தனர்.

கறுப்பின மக்களின் படைபுகளில் தமிழர் எம் வாழ்வின் பிரதிகள் பண்பாட்டு முறைகள் ஒட்டிக்கொண்டிருந்தது எங்களுக்கும் அவர்களுக்குமிடையிலான வரலாற்று மீழ் வாசிப்புக்கு பயணப்படவேண்டிய தேவையை உணர்த்தி நின்றது,(பாரிஸ் கறுப்பு)
01-07-2025
ப.பார்தீ

]]>
“வரலாற்றை மறைத்தவர்கள், விடுதலையை முடக்கியவர்கள்” ப.பார்தீ https://www.mukadu.com/2025/05/19/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Mon, 19 May 2025 21:03:58 +0000 https://www.mukadu.com/?p=26425 “வரலாற்றை மறைத்தவர்கள், விடுதலையை முடக்கியவர்கள்”
18-05-2025
ப.பார்தீ


2009 மே 18
தமிழீழ மீட்புப்போரில் மரணமாகிக்கொண்டிருக்கும் மக்கள்,மாவீரர்கள் வரிசையில் முப்பதாண்டுகால ஆயுதப்போராட்டத்தின் அடையாளம் தன்னை அமைதியாக்கி ஆயுதப்போராட்டத்தின் தோல்வியினை உலகறியச் செய்தது. அந்த போராட்டத்தின் பெரும் பங்காளர்களான மக்கள் செய்வதறியாது தங்கள் போராட்ட ஓர்மத்தின் வழி தொடர்ந்து இயங்கிக்கொள்ளவே விரும்பினார்கள்.தங்களுக்குரிய அரசியல் நிலையொன்றை எட்டி விடவேண்டுமென்றே துடித்தார்கள்,ஏங்கினார்கள், என்பது தமிழ் மக்களுக்குள் இருக்குமொருவனாக என் அவாவும் கூட அது. ஆனால் நடந்துகொண்டிருப்பது என்ன ?என்பது போராட்டத்தின் இயங்குதிசை,போராட்ட கட்டமைப்பு வடிவங்கள் மக்கள் போராளிகளின் முகங்கள் மறுவாசிப்புக்குட்படுத்த வேண்டியவர்களாகவே நாம் உள்ளோம்.

தமிழ்மக்கள் நாம் தொடர்ந்தும் கருத்து முதல்வாத சிந்தனைக்குள் சிக்குண்டு எந்தவித கேள்விகளுமற்றவர்களாக தமிழீழ ஆயுதப்போராட்ட போராட்ட இலச்சினைகளை அடையாளங்களை காவிவருபவர்களை ஏற்கும் கனவு காவிகளாகவே தொடர்ந்தும் உருவாக்கப்பட்டு இவ்வுலகிற்கு காட்டப்பட்டு கொண்டிருக்கின்றேம். 2009 மே 18 தமிழீழ போராட்டத்தின் ஆயுதப்போராட்ட வடிவத்தை தமிழ்மக்களின் பெரும் ஆதரவோடு முன்னெடுத்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை அழிக்கப்படுகின்றது அத்தோடு அந்த போராட்ட வடிவம் முழுமையாக அமைதியடைகின்றது. ஆனால் பிழைப்புவாதிகளால் எங்களுக்கு நிகழ்த்தப்பட்டது என்ன “எம்தலைவர் சாகவில்லை”என்ற ஹிந்திய,சிங்கள அரசுகளின் அரசியல் தேவையை நிறைவேற்ற ஈழத்தமிழ்சமூகத்தின் போராட்ட முகங்களாக தங்களை காட்டிகொண்ட அனைத்து புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் அமைப்புக்களும் உண்மையை தமிழ்மக்களிடமிருந்து மறைத்து “எம்தலைவர் சாகவில்லை” என்று அறமற்று அறிவுக்கும் ஆய்வுக்கும் புறம்பான பல நாடகங்களை இன்றுவரை மேடை ஏற்றிகொண்டிருக்கின்றது அதற்கு துணையாக காசு முதலீடு செய்து தாய்நிலத்துள் பல அரசியல்கட்சிகள் சுயேட்சைகளென்று தங்கள் எடுபிடிகளாக இயங்க வைக்கின்றது,புலம்பெயர்ந்த தேசத்திலோ இவர்களின் நிர்வாகங்களுக்கிடையில் பணப்பட்டுவாடாப் பிரச்சினைகளே பெரும் கெடுபிடியாகவே உருப்பெருக்க, நேர்மையுடனும் மக்கள் நலனுக்காக இயங்கிய ஒவ்வொருவரும் பகுதி பதியாக வெளியேறி தங்கள் தனிவாழ்கையில் கலந்துவிட்டார்கள்.ஆங்காங்கே எழும் மக்களிற்கான சில குரல்களும் விமர்சனங்களும் துரோகிகளாக்கப்படுவதில் இவர்களின் பங்கு பெருமளவில் இருக்கும்.

இவர்களின் செயற்பாட்டுத் தன்மை, இளையவர்களைக் கூட்டிக்கொள்வதில் இல்லை.
சமகால அரசியல் நகர்வுகளை வாசிப்பதோ, மாற்றங்களை எதிர்கொள்வதோ இல்லாத ஒரு உறைந்த நிலைப்பாட்டுடனே, ஒரு மாதிரித் தனித்துச் செயற்படுகின்றது. இந்தச் செயற்பாடு, போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்ற உருவகத்தில் செயலாற்றினாலும், உண்மையில் அது போராட்டத்தின் பெயரால் மக்கள் அரசியற் செயற்திறனை முடக்கும் நவீன கட்டமைப்பாகவே மாறியுள்ளது.

இது வரலாற்றை வாசிக்காத, வரலாற்றை முறியடிக்கின்ற செயற்பாடாகும்.
அதாவது, உற்பத்தித்துறைகளின் நகர்வுகள், உரிமைப் போராட்டங்களின் புதிய உருபுகள், ஒடுக்கப்பட்டவர்களின் மாற்றத்திறன் ஆகிய அனைத்தையும் புறக்கணித்து, வரலாற்றை நிலைக்களமாக்கும் இயக்கமாகவே இது செயற்படுகிறது.

மாற்றத்தின் பொருளும் சாத்தியத்தன்மையும், நிலைத்த அரசியல் மொழிகளுக்குள் அடைத்து வைத்து,மக்களை “இடைவிடாத போராளிகளாக” ஒரு கருத்துமுறையின் சிறையில் பிணைத்துவிடுகிறது.
இதனால் மக்கள் விடுதலைக்கான வழிகளையும், புதிய கருத்துப் பரிமாற்றங்களையும் புறக்கணிக்கத் தூண்டப்படுகிறார்கள்.இந்த நிலை, வரலாற்றை ஒரு முடிவடைந்த நிகழ்வாகப் பார்ப்பது மட்டுமல்ல, மக்கள் அரசியலின் செயற்கூறுகளையே விசையிழந்த புனைவாக மாற்றும் அபாயத்தையும் உருவாக்குகின்றது.

உண்மை பேசத் தளர்வது இவர்களது பழக்கமாயிற்று. வெளிப்படைதன்மை இவர்களுக்குப் புற நகையாகிவிட்டது.
வரலாற்றை வாசிக்கத் தெரியாத இவர்கள், தோல்வி என்பது எங்களது போராட்ட வரலாற்றுக்குள் நுழைந்துவிட்டது என்பதை வெறும் கனவுகாவலாக இருந்து இன்னும் ஒப்புக்கொள்வதேயில்லை. அப்படியிருக்க, இனிவரும் செயற்பாடுகள் மட்டும் மக்களுக்கானதாக மாறி இயங்குகிறது என அவர்கள் செயற்படும் அறியாமைகளிற்குள் இருந்து நாம் எப்படி அழைக்கமுடியும்?
இவர்கள் எப்போது மக்களின் பக்கம் நின்றார்கள் என்று, இனி நம்மால் நம்ப எப்படி முடியும்? வரலாற்றின் வலி உணராதவனிடம் எதிர்காலத்தின் விடுதலை வழி எப்படிக் கிடைக்கும்? மக்கள் நினைவுகளை பாதுகாக்கும் போராளிகளாக அல்ல;
மக்களை மறப்பதற்காக உருவாக்கப்பட்ட நிலைத்த கட்டமைப்புகளாகவே இவர்கள் செயற்படுகின்றார்கள்.

இவர்கள் நிலைகளை முன் பின் ஆய்ந்து தெளிவாகப் பார்க்க வேண்டும்.
உண்மைகளை ஐயமுற அறிந்து, பிழைப்புக்கும் பொய்க்காட்சிகளுக்கும் இடையே ஊடாடும் செயற்பாடுகளை முற்றாக உருக்கிப் பார்க்கத் தெரிந்துவிட்டது என்றால்,
இன அழிப்புக்குள்ளாகி நிற்கும் ஈழத் தமிழரெனும் பூர்வகுடி இனமாகிய நாம், இனி எந்த திசையில் நகர வேண்டும் என்பதற்கான தெளிவு நமக்குத் தோன்றும். அந்த தெளிவு, பழைய கருப்பொருள்களின் உதிர்கலன்களில் இருந்து அல்ல.புதிய திசைகளை எண்ணக்கூடிய,
புதிய தலைமுறையின் வீச்சைப் புரிந்துகொள்ளக்கூடிய,
மக்களிடம் இருந்து மக்களுக்குள் இயக்க மாற்றத்தை சாத்தியப்படுத்தக்கூடிய,
இயங்கும் இயக்குநர் நம்மிடம் தேவையென்பதை உணர்ந்ததாய் இருக்கவேண்டும். அத்துடன், விடுதலையை வெறும் நினைவாகவல்லாமல்,புனிதங்கள் நம்பிக்கைகள் நன்றியுணர்வுகள் என்பவற்றை அறிவுக்கண்கொண்டு பார்த்து
மாற்றத்தை நிகழ்த்தும் செயற்பாட்டு உந்துதலாக மாற்றக்கூடிய அரசியல் மனப்பான்மை நம்மிடையே உருவாக வேண்டியுள்ளது.
பழைய கோட்பாடுகளை மட்டும் தழுவும் திறனல்ல,
புதிய சந்தர்ப்பங்களில் மக்கள் எவ்வாறு தங்கள் உரிமைகளை மீட்கலாம் என்பதை
திறந்தவெளியில் மக்கள் ஒளியடையும் கட்டமைப்புகளாக நாம் மாறவேண்டும். இங்கு நாம் என்பது மக்கள் நாமே எல்லாம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
18-05-2025
ப.பார்தீ

]]>
முதியோர் – நினைவுகளின் நூலகம் https://www.mukadu.com/2025/05/14/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8/ Wed, 14 May 2025 17:22:27 +0000 https://www.mukadu.com/?p=26422 முதியோர் – நினைவுகளின் நூலகம்

முதியவர், மூதாலர், வயோதிபர், அப்பு, ஆச்சி, பாட்டன், பூட்டி எனப் பல அடையாளங்களிலும் உறவுகளிலும் எம்மருகில், எதிரில், அடுத்த வீட்டில் வாழும் மூத்தோரை நாம் எவ்வாறு பார்க்கிறோம்? அவர்களை நோக்கி கொண்டிருக்கும் எங்கள் பார்வை மேலானதா? உடலால் சோர்ந்தவர்கள் என்ற நோக்கிலா? அல்லது அனுபவத்தால் நிறைந்தவர்கள் என்ற பார்வையா?

“காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்” என்ற பழமொழியைப் போல வாழ்வின் அர்த்தத்தை நாம் உணர மறுத்து இயங்குகின்றோமோ? இது இழம் இரத்தத்தின் துடிப்பா? இல்லை எல்லாம் உணர்ந்தோமென்று நம்மை நாமே நம்பிக்கொள்ளும் மனதா?

ஒருகால அனுபவங்களை வாழ்ந்து, உணர்ச்சிகளின் ஆடம்பரத்தைக் கடந்து, வாழ்வின் உண்மையை நிதானமாக அறிந்தவர்கள் தான் முதியோர்.
அவர்கள் வாழ்ந்த ஒவ்வொரு ஆண்டும் காலச்சுவடாகும்; ஒவ்வொரு நிகழ்வும் அனுபவத்தின் தொகுப்பாகும்.
இன்றைய நுட்ப உலகம் “அறிவியல்” என்ற பெயரில் தொழில்நுட்ப அறிவை வழங்குகிறது. ஆனால் முதியோர்கள் தந்து விடும் அறிவு – அது வாழ்க்கையை முழுமையாய் புரிந்து கொண்டு வாழ்வதற்கான நடைபாதை.

அவர்கள் தொலைந்து கொண்டிருக்கும் நெறிகளின் தெளிவே ,நம் மரபும், பண்பாடும், உறவுசார் ஒழுங்குகளும்.
அவை புழுதிபடாமல் இருக்க, முதியோர்களின் பங்களிப்பு அவசியம்.
அவர்கள் நடமாடும் நூலகங்கள்.
அவர்களோடு உரையாடுவது இலட்சக் கணக்கான புத்தகங்களைப் படிப்பதற்கும் மேல்.

அவர்கள் கடந்து வந்த துயரங்கள், இழப்புகள், சோதனைகள் இவையெல்லாம் அவர்களது வாய்மொழியால் நமக்குப் பொறுமையையும், பொறுப்பையும் கற்றுத் தருகின்றன.
சில நேரங்களில் அவர்கள் பேசும் வார்த்தைகள் மட்டுமல்ல, பேசாமல் தவிர்க்கும் வார்த்தைகளும் நம்மை விழித்து நடக்கச் செய்கின்றன.

வாழ்க்கையின் நிலையில்லாத தன்மையை, இளம் தலைமுறையினர் உணரச் செய்யும் வலிமை அவர்களது அனுபவங்களே.
இன்றைய முதியோர் நாளைய நம்முடைய முகம். இன்று அவர்களை நாம் அணுகும் விதமே, நாளை நம்மிடம் வரும் உறவுகளின் முகமாகத் திரியும்.

பண்டைய சமூகம் முதியோர்களை மையமாகக் கொண்டு இயங்கியது.
அவர்களின் செயல் வீச்சும், அனுபவப் பகிர்வும் சமூகத்தை வளர்ச்சிப் படிநிலைகளுக்கே கொண்டு சென்றது.
இன்று அவர்களை வலிமையற்ற சுற்றாக வடிவமைத்துவிட்டோம். மூதியோர் இல்லங்களும், தனிமையும் அவர்களின் வாழ்வாகிவிட்டன.

நவீனக் குடும்ப வாழ்கை முறை, “சுயம், வளர்ச்சி, தன்நம்பிக்கை” என்ற பெயரில் முதியோர்களை தனிமைப்படுத்துகிறது.
வேகம், விருப்பு, தனி வாழ்க்கை, தனிமனித சுதந்திரம் என நவீன வாழ்வியல் முதியோர்களை குடும்பத்தின் “பொருளற்ற உறுப்பாக” மாற்றுகிறது.

இன்று, அவர்கள் அதிகமான நேரங்களை மௌனத்துடனும், எதிர்பார்ப்புகளுடனும், கண்நிறைந்த ஏக்கங்களுடனும் செலவழிக்கின்றனர்.
அவர்களது மனம் தன் குடும்பத்தில் பற்றுதல், வாழ்வு ,அர்த்தம், பங்கு என்பவற்றை நாடி தவிக்கிறது.

நவீன உலகம் வசதிகளை வழங்கினாலும் உணர்வுப் பூர்வம், நெருக்கம், கவனிப்பு ஆகியவற்றில் ஏமாற்றமளிக்கிறது.
மனஅழுத்தம், பயம், நிராசை, உடல் நோய்கள் மட்டுமல்ல அறியப்படாத மனவலியும் அவர்களைத் துன்புறுத்துகிறது.அவர்கள் இவ்வாறாக உலாவுகிறார்கள் என்றால், நாம்தான் உலாவ விட்டிருக்கிறோமோ என்று வெட்கப்பட வேண்டும்.

இவர்களை இப்படி நாம் விட்டிருப்பது ஏற்கத்தக்கதா? இல்லை! இது ஏற்கத்தக்கதல்ல.

ஒரு சமூகத்தின் மதிப்பு அதன் மூத்தவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதையில்தான் தெரிகிறது.
அவர்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே, அந்த மரியாதையின் பிரதிபலிப்பாக அமைகிறது.
முதியோர் என்பது வயதால், உடல் சோர்வால் மதிப்பதல்ல அறிவுக்கும், அனுபவத்திற்கும் சார்ந்த ஓர் அடையாளம்.
நாம் அவர்களை அணுகும் விதமே, நாளை எம்மை யார் எப்படி அணுகப்போகிறார்கள் என்பதற்கான முன்னோட்டம்.இன்று அவர்களுக்கு நாம் அர்ப்பணிக்கும் கவனமே
நாளை எங்களுக்கு கிடைக்கப்போகும் அன்பும் அரவணைப்புமாகும்.

14-05-2025
ப. பார்தீ

]]>
”‘Little Jaffna’வும் தமிழர் கருத்தியல் அழிப்பும்”பார்தீ https://www.mukadu.com/2025/04/30/little-jaffna%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/ Wed, 30 Apr 2025 10:52:24 +0000 https://www.mukadu.com/?p=26418 ”‘Little Jaffna’வும் தமிழர் கருத்தியல் அழிப்பும்”
29-04-2025
ப.பார்தீ
நன்றி
-முகடு-


படைப்பு என்பது வெறும் கற்பனையால் உருவாக்கப்படுவதல்ல, அனுபவங்களினூடாக இரசனைக்கேற்ற வகையில் உண்மைகளை பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடி.
இந்தக் கண்ணாடி வழியாக ஒரு படைப்பாளி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் காட்டும்போது, அவர்களின் விடுதலையின் அவசியம் தோவையாக படைப்பின் வழி வெளிப்படுகிறது.
அந்த படைப்பாளியே மக்களின் படைப்பாளியாக இன்றுவரை மானுட சமூகம் பார்க்கின்றது.

மக்கள் விடுதலையைப் பேசாத படைப்புகள்,
அடக்குமுறைகளையும் அநியாயங்களையும் இயல்பான ஒன்றாக உருமாற்றி, அதிகார வர்க்கத்திற்கு சேவை செய்கின்றன.
இத்தகைய படைப்புகள் அதிகாரத்தின் ஒத்தோடியாக தங்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றன.

தமிழில் சங்க இலக்கியம் முதல் இன்றைய நவீன இலக்கியங்கள்வரை,
தமிழில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் மக்கள் விடுதலை தேவையை வரலாற்றை பதிவுசெய்வதிலும் நகர்த்துவதிலும் படைப்புகள் அடித்தளமாகவே இருக்கின்றன.

ஒரு மக்கள் கூட்டம்,
மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற, பட்டினியிலிருந்து மீட்சி பெற, பாலியல், சாதி, சமூக, பிரதேசவாத ஒடுக்குமுறையில் வாழும் மக்களின் விடுதலையை நினைவூட்டாத படைப்புகள்,
உண்மைச் சூழலை மறைத்து, தனிமனித பிழைப்பு ஓட்டங்களாக மட்டும் இயங்கும் படைப்புகளாக மக்கள் நாம் கணிக்கவும், அதனை எதிர்த்து குரல் கொடுக்கவும் எந்த நேரத்திலும் தயங்கக்கூடாது.

Le quartier de « Little Jaffna » à Paris est le cœur d’une communauté tamoule vibrante,
où Michael, un jeune policier, est chargé d’infiltrer un groupe criminel connu pour extorsion et blanchiment d’argent au profit des rebelles séparatistes au Sri Lanka.
Mais à mesure qu’il s’enfonce au cœur de l’organisation, sa loyauté sera mise à l’épreuve, dans une poursuite implacable contre l’un des gangs les plus cachés et puissants de Paris.

யாரந்த பிரிவினை வாதிகள்?

இதுதான் பாரிஸ் சினிமா திரையரங்க தளங்களின் “Little Jaffna” விளம்பர உத்தி.
இங்கு ஒரு தமிழனாக இருந்து ஈழத்தமிழ் சமூகம் எப்படியான ஒடுக்குமுறைக்கு ஆளானது,
என்ன வகையான இனவழிப்பின் தொடர்ச்சி எங்கள்மேல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்று நான் கூறி, நீங்கள் ஒரு தமிழனாக விளங்க வேண்டுமென்ற அவசியமிருக்காது.

ஆனாலும் இந்த படைப்பு தொடர்பாகவும், படைப்பின் கதையம்சம் தொடர்பாகவும்,
படைப்பில் பங்குபற்றியோரின் பிழைப்புவாதம் தொடர்பாகவும் நாம் உரையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இயக்குநர் Cine Malaraux (25 cours de la République, 93140 Bondy)
நிகழ்ந்த சிறப்பு காட்சிக்குப் பின், “நான் ஆவணப்படம் எடுக்க வரவில்லை, இது ஆவணப்படமும் இல்லை, இது தன்னுடைய கற்பனைக்கதையென்று” குறிப்பிடுகின்றார்.

அதனைத் தொடர்ந்து,

“தமிழர்களால் இப்படியான படத்திற்கு 1 யூரோக்கூட முதலீடு செய்வார்களா?
பிரஞ்சு முதலீட்டாளர்கள் ஒரு புது இயக்குனருக்கு இவ்வளவு பெரிய முதலீட்டை செய்ததாகவும்,
தான் அதற்கே படம் எடுத்ததாகவும்” குறிப்பிடுகின்றார்.

“Little Jaffna” என்னும் திரைப்படத்தின் பெயரொன்றும் எழுந்தமானமாக சூட்டப்பட்டதல்ல.
அது ஈழத் தமிழ் மக்களின் கருத்தியல் அழிப்பின் முதல் குறியீட்டு புனைவடையாளம்.
தன்னுடைய திரைப்படக் கனவை நிறைவேற்றிக்கொள்ள நிதிக்காக எத்தனித்த திரைப்பட இயக்குனருக்கு பணம் கொடுத்த எஜமானர்களுக்காக ஒரு கதை செய்துள்ளார்.

அவர் தன்னுடைய புனைவு என்கிறார்.
புனைவிற்காக அவர் எதை உள்வாங்கியிருக்கின்றார்?
தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்ட வாழ்வியலை.

ஒரு கடத்தல்காரர் கும்பல்கள்போல் காட்சிப்படுத்தி, கொலை, கொல்லை கனவுகளை சுமக்கும், காட்டுமிராண்டி, நாகரிகமற்ற சமூகமாக காட்டியிருக்கின்றார்.திருகுரள் போன்ற பெரும் பழமையான இலக்கியம்கொண்டது தமிழ் தமிழர்வாழ்வு. என்பது இயக்குணர் படிக்கவில்லை போலும்.
படத்தின் தொடக்கத்திலேயே தன் அடையாளத்தை அழிக்க விரும்பும் ஒரு மனிதனாகவே தன்னை முதன்மைப்படுத்துகின்றார்.

இவர்யார் என்றால்,
ஒரு கரும்புலி போராளியின் மகன்.
4 வயதில் புலம்பெயர்ந்தவன்.
காவல்துறை புலனாய்வு பிரிவில் வேலை செய்து, ஒரு கடத்தல் கும்பலை பிடிக்க அக்குழுவில் சேர்கின்றார்.
அது யார் என்றால் — தமிழ்மக்கள் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் வடிவில்,
பணம் சேகரிக்கும் ஒரு கும்பல் — அதையும் ஒரு விடுதலைப்புலிகள் அமைப்பாகவே காட்டுகின்றார்.

அவர்களை கொலை, கஞ்சா, துஷ்பிரயோகம் போன்றவைகளில் ஈடுபடும் நபர்களாகவே காட்டுகின்றார்.
அவ்வளவு கொடூரம் தமிழ் மக்களின் மீது அவருக்கு.
பிள்ளையையும் கிள்ளி தொட்டலையும் அட்டுவது போல,
அங்காங்கே சில இடங்களில் சில வசனங்கள் —

ஒரு மேற்கத்திய அடிமைப்புத்தியில் எழுந்து, தன்னை ஒரு பிரஞ்சுக்காரனாக நினைத்து,
ஒரு படம் — அதன் பணமாகிய முதலாளிகளுக்காக செய்துள்ளார்.

இயக்குநர் செய்த கதைக்கு,
தான் செய்த நல்ல காரியங்களை முகமூடியாக வைத்துக்கொண்டு, தன்னை ஒரு தமிழ்தேசியாகக் காட்டிக்கொண்டு,
தங்கள் சுய இலாபத்திற்காக பல தமிழ் படைப்புகள், நிகழ்வுகள்மீது தன்னிலை மறந்து, படைப்பறத்தை மதிக்காது,
தொடர்ச்சியாக படைப்புகளை சமூகவெளிக்கு மிகப் மோசமாக சித்தரித்து, படைப்பாளர்கள்மீது ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பி,
அவர்கள் படைப்பூக்கத்தை ஒடிக்கிவைக்கும் திரு குணா ஆறுமுகராசா,
இந்தப் படத்தின் துணை இயக்குனரின் உதவியாளராக பணிபுரிந்திருக்கின்றார் என்பது,
அவரின் பிழைப்புவாதத்தையும் பொய்தேசிய முகத்தையும் ஊருக்குக் காட்டியுள்ளது. இப்படியான சாபக்கேடு எமது இனத்திற்கு புதிதல்ல.
அதேபோல் நாடுகடந்த அரசின் ஊடக அமைச்சராக இருப்பவர்,
கூட்டு பொறுப்பு பற்றி அதிகம் பேசுபவர்.திரு சுதன்ராஜச் செய்தி வாசித்து குரல் கொடுத்திருக்கின்றார்.
இவரோடு பறவாதி பட இயக்குனர் திரு அஜந்தன், சுத, அருள்மொழிதேவன், மற்றும் பல கலைஞர்கள்,மற்றும் லாச்சபேலில் இயங்கும் பல தமிழ் வர்த்தக நிறுவனங்களென்று
எம் கையை வைத்தே எமது மக்கள் வாழ்வும், போராட்டமும், அந்தக் கருத்தியலும் மிக நாசுக்காக அழிக்கும் கருத்துருவாக்கத்தை உருவாக்கின்றார்கள்.

“Little Jaffna” என்பது வெறும் புனைவு திரைப்படமல்ல.
அது ஒரு பார்வையை உருவாக்கும் கருவி.
அந்த பார்வை புலம்பெயர்ந்த தமிழரை குற்றவாளியாக்குகிறது.
அந்த பார்வை புலம்பெயர்ந்த நிலத்தில் வாழும் தமிழரின் குரலை முடக்குகிறது.
அந்த பார்வை தமிழரின் விடுதலைத் தாகத்தை ஒடுக்கும் வழிக்கு முதல்கோடிடுகின்றது,எமது வாழ்வியலை பிழையாக காட்டுகிறது.
அதனால்தான்,
இப்படி ஒரு படைப்பை எதிர்க்கும் உரிமையும், படைப்பில் பங்கு பற்றிய ஈழத் தமிழர்களை விமர்சனத்திற்கு உள்ளிக்கி ஒலிக்கும் குரலாக இந்தக் கட்டுரையில் பதிவு செய்யப்படுகிறது.

நாம் இது போன்ற படைப்புகளை விமர்சிக்க மறந்தால், எதிர்க்க தயங்கினால், நம்மை நாமே மறந்துவிடும் நாள் வெகு தூரமில்லை.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்�மெய்ப்பொருள் காண்ப தறிவு.”

]]>
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் – நாம் யார் பக்கம் நிற்க வேண்டும்?: செ.கார்கி https://www.mukadu.com/2022/03/03/%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%88%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/ Thu, 03 Mar 2022 19:12:50 +0000 http://www.mukadu.com/?p=26226 உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் – நாம் யார் பக்கம் நிற்க வேண்டும்?: செ.கார்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது. இதனால் உக்ரைனைச் சேர்ந்த அப்பாவி மக்கள் உயிருக்குப் பயந்து வெளி நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றார்கள்.

இதுவரை உக்ரைன் தரப்பில் 352 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதே போல 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் ரஷ்யா இதுவரை உயிரிழப்பு தொடர்பாக எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஊடகங்கள் தொடர்ச்சியாக இந்தப் போரை உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான போராக காட்டிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் உண்மையில் இந்தப் போர் ரஷ்யாவுக்கும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான நேட்டோ நாடுகளுக்குமான போராகும்.

போர் உக்ரைன் மண்ணில் நடந்தாலும் ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளின் ஆயுத உதவி, பொருளாதார உதவி போன்றவற்றுடன் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றது.

அமெரிக்கா ஏற்கெனவே 600 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ள நிலையில், மேலும் 350 மில்லியன் டாலர் நிதியுதவி செய்திருக்கின்றது.

இவை தவிர கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், ஜப்பான், பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல், ருமேனியா, இஸ்ரேல், நெதர்லாந்து, பல்கேரியா, போலந்து, சுலோவாக்கியா, டென்மார்க் மற்றும் செக் குடியரசு நாடுகளும் உதவி செய்வதாக அறிவித்துள்ளன.

உக்ரைனுக்கு ராணுவ, பொருளாதார உதவிகளை செய்வதோடு அல்லாமல் ரஷ்யா மீது அமெரிக்கா, கனடா, பிரிட்டன்,ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து உள்ளன. அத்துடன் பெரும்பாலான சர்வதேச நிதி பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் கட்டண முறையான ‘ஸ்விப்ட்’ அமைப்பில் இருந்தும் சில ரஷ்ய வங்கிகள் நீக்கப்பட்டு உள்ளன.

ஆனால் அமெரிக்க ஆதரவு ரஷ்ய எதிர்ப்பு ஊடகங்கள் தொடர்ச்சியாக ரஷ்யா இந்தப் போரை திட்டமிட்டு நடத்துவதாக தொடர்ந்து அவதூறு பரப்புகின்றன. அமெரிக்க இராணுவத்தாலும் உளவு அமைப்புகளாலும் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்ற ஆவணங்களையே அவை செய்தியாக வெளியிட்டு வருகின்றன.

அவர்கள் தரும் ‘உண்மைச் செய்தி’ என்னவென்றால் சமாதானத்தை விரும்பும் அமெரிக்காவும், மற்ற நேட்டோ நாடுகளும் உக்ரைன் மீது அத்துமீறி படையெடுக்கும் ரஷ்யாவுக்கு புத்தி புகட்டிக்கொண்டு இருக்கின்றன என்பதுதான்.

ஆனால் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனைத் தூண்டிவிட்டு தனது காரியத்தை சாதித்துக் கொள்ள அமெரிக்காவும் நேட்டோவும் எப்போதுமே முன்தயாரிப்பு வேலைகளைச் செய்தே வந்துள்ளன. கடைசி எட்டு மாதத்தில் மட்டும் கிரீஸ் நாட்டில் இருக்கும் அதன் தளத்தில் 10,000 அமெரிக்கத் துருப்புகளை நிலை நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா. பால்கன் மற்றும் கருங்கடல் பகுதிகளில் சண்டைக்கான தயாரிப்பாக ஒத்திகைப் பயிற்சியை நடத்தியிருக்கிறது. அத்துடன் கருங்கடலில் இதுவரை நடத்தியதிலேயே மிகப்பெரிய போர்ப் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.

இன்று ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் தொடுப்பதை ஜனநாயகத்தை மீறிய செயலாகப் பார்க்கும் அமெரிக்காவும், நேட்டோவும் யூகோஸ்லாவியாவின் சுய நிர்ணய உரிமையை ஆதரித்ததில்லை. 1999 இல், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி கொசோவோ பிரிவினைக்கு ஆதரவாக 78 நாட்கள் தொடர்ந்து சேர்பியா மீது குண்டுவீச்சு நடத்தியது. இறுதியில் போதைமருந்துக் கூட்டத் தலைவர்களைக் கொண்ட ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுதந்திர கொசோவோ உருவாக்கப்பட்டது.

2001 அக்டோபரில் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல், ஈராக் மீதான படையெடுப்பு, 2011 இல் லிபியா மீதான அமெரிக்கா-நேட்டோ தாக்குதல் போன்றவை சர்வதேச சட்டங்களை மீறியே நடத்தப்பட்டன. மாவோவின் மொழியில் சொன்னால்

“… உலக யுத்தம் நடக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பவர்களாக நாம் இருக்க முடியாது. யுத்தத்தில் ஈடுபடாத ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானால்கூட, யுத்தத்துக்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது. ஏகாதிபத்தியம் போரிட விரும்பும்போது எந்த ஒப்பந்தமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படப் போவதில்லை…” (மாவோ தொகுப்பு நூல்கள் தொகுதி எட்டு -பக்கம் 527)

அப்படியான சூழ்நிலையில் ரஷ்யா உக்ரைன் பேரில் நாம் யார் பக்கம் நிற்க வேண்டும் என்ற பிரச்சினை எழுந்துள்ளது.

இதற்கு முதலாளித்துவவாதிகளும் கம்யூனிஸ்ட்களும் பல்வேறுவிதமான தங்களின் ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாடுகளை பதிவு செய்கின்றார்கள். மாவோ சொல்கின்றார்.

“….போர்கள் நீதியானவை எனவும் அநீதியானவை எனவும் இரு வகைகளாக பிரிக்கப்படுவதாக வரலாறு காட்டுகின்றது. முற்போக்கான போர்கள் அனைத்தும் நீதியானவையே. முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை இடுகின்ற போர்கள் அனைத்தும் அநீதியானவையே. கம்யூனிஸ்ட்களாகிய நாம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை இடுகின்ற நீதியற்ற அனைத்து போர்களையும் எதிர்க்கின்றோம். ஆனால் முற்போக்கான, நீதியான போர்களை எதிர்ப்பதில்லை….” (மாவோ தொகுப்பு நூல்கள் தொகுதி இரண்டு -பக்கம் 197).

அப்படி என்றால் இந்தப் போர் நீதியானதா, முற்போக்கானதா என்ற கேள்வி எழும். எந்த வகையிலும் இந்தப் போர் முற்போக்கானதோ நீதியானதோ கிடையாது. காரணம் இந்தப் போர் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து உக்ரைனில் ஒரு சோசலிச அரசை அமைக்க உக்ரைன் மக்களின் ஆதரவுடன் ரஷ்யா செய்யும் போரல்ல. காரணம் ரஷ்யா ஒரு சோசலிச நாடும் அல்ல.

இரண்டு முதலாளித்துவ நாடுகள் மேலாதிக்கப் போட்டியில் தங்களுக்குள் மோதிக் கொள்கின்றன. உலக நாட்டாமை அமெரிக்காவும் அதன் அடிமை நேட்டோ நாடுகளும் உக்ரைனைப் பயன்படுத்தி ரஷ்யாவை வீழ்த்த திட்டமிடும் போது தன்னை காப்பாற்றிக் கொள்ள அதற்கு வேறு வழியே இல்லாத போது, இந்தப் போரை ரஷ்யா நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. காரணம் அமெரிக்க மற்றும் நேட்டோவிடம் இருந்து தன் மக்களையும் நாட்டையும் காக்க வேண்டிய பொறுப்பு ரஷ்யாவுக்கு உள்ளது.

ஆனால் இந்தப் போரில் எந்தவித ஏகாதிபத்திய எதிர்ப்போ, முதலாளித்துவ எதிர்ப்போ இல்லாததால்தான் இந்தப் போரை நாம் பிற்போக்கானது, அநீதியானது என்கின்றோம். காரணம் நாளை உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தாலும் ரஷ்யாவால் சுரண்டப்படும் ஒரு நாடாகத்தான் உக்ரைன் இருக்கும்.

அரசியல் அற்ற போர் எதிர்ப்பு என்பது வேடிக்கையானது. இரண்டு முதலாளித்துவ நாடுகள் தங்களுக்குள் போரிட்டுக் கொள்ளும் போது அதில் எந்தவிதமான ஏகாதிபத்திய எதிர்ப்போ, இரு நாடுகளைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் ஒருங்கிணைவோ இல்லாத போது பொத்தம் பொதுவாக போரை எப்படி எதிர்க்க முடியும்?.

தனிச்சொத்துடைமையும், முதலாளித்துவமும் இருக்கும் வரை உலகில் போர்கள் என்பது தவிர்க்க முடியாது. சொத்துடைமை என்பதே போர்களால்தான் வரலாற்றில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

“…அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போராக இருக்கையில் போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் என கூறப்பட இயலும்” (மாவோ தொகுப்பு நூல்கள் தொகுதி இரண்டு பக்கம் 202)

இதுதான் எதார்த்தம். உக்ரைன் ரஷ்ய போர் என்பது முதலாளித்துவ போட்டிக்கான, ஏகாதிபத்தியப் போட்டிக்கான ரத்தம் சிந்தும் அரசியல்.

இது வரலாற்றில் தவிர்க்க முடியாத விதி. எந்த எந்த நாடுகள் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றதோ எந்த எந்த நாடுகள் வல்லரசுப் போட்டியில் உள்ளதோ அவை எல்லாம் தங்களுக்குள் அடித்துக் கொண்டும் வெட்டிக் கொண்டும்தான் சாகும்.

இந்தப் போரை உக்ரைன் நினைத்தால் தவிர்த்திருக்கலாம். நேட்டோ போன்ற கொலைகாரக் கூட்டணியில் இணைந்து உக்ரைனை ரஷ்யாவுக்கு எதிரான தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கும் அதன் முடிவு நிச்சயம் அநீதியானது. இந்தப் போர் ரஷ்யாவின் மீது அமெரிக்க மற்றும் அதன் நேட்டோ நாடுகளால் திணிக்கப்பட்ட போர்.

நாம் போரை நிறுத்து என ரஷ்யாவை பார்த்துச் சொல்லும் அதே வேளையில் பாசிச சக்திகளுடன் சேர்ந்து ரஷ்யாவை அழிக்க வேலை பார்க்கும் உக்ரைனையும் அதற்கு உதவியாக இருக்கும் போர்வெறியர்களையும் எதிர்க்க வேண்டும். ஒரு பக்கச் சார்பு என்பது இங்கே எடுபடாத வெற்று அரசியல்.

– செ.கார்கி

]]>